> பள்ளி திறப்பு என்னாச்சு -தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவிப்பு ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

பள்ளி திறப்பு என்னாச்சு -தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவிப்பு

தமிழகத்தில், பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை' என, மத்திய அரசிடம், தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பெற்றோரிடம் கருத்து கேட்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் இன்னும் துவங்கப்பட வில்லை. மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே, பாடம் படிக்கும் வகையில், 'வீடியோ' பாடங்கள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகள் தரப்பில், 'ஆன்லைனில்' வகுப்புகளை நடத்துகின்றன. இந்நிலையில், ஊரடங்கு விரைவில் முடிவுக்கு வரும் நிலையில், விரைவில் பள்ளிகளை திறந்து, இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த, மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.இதுதொடர்பாக, மத்திய அரசின் சார்பில், மாநில பள்ளி கல்வித் துறை அதிகாரிகளிடம், ஆன்லைன் வாயிலாக ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. அதில், பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்து, விவாதிக்கப்பட்டது.அப்போது, ஒவ்வொரு மாநில அரசும், தங்கள் மாநிலத்தில், கொரோனா தொற்று நிலையை பொறுத்து, பள்ளிகளை திறக்கும் தேதியை முடிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக, பெற்றோர் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டு பெற வேண்டுமென, மத்திய மனிதவள அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், பள்ளிகளை திறக்கும் தேதி குறித்து, முதற்கட்ட அறிக்கையை, ஒவ்வொரு மாநில அரசும் தாக்கல் செய்துள்ளன. அந்த அறிக்கையில், ஒவ்வொரு மாநிலமும், பள்ளிகளை மீண்டும் திறக்க உள்ள மாதத்தை அறிவித்துள்ளன. அதில், 'பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை' என, தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து, இந்த வாரத்தில் முடிவு செய்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, தமிழக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Share:

0 Comments:

Post a Comment