> மாநில முதல்வரின் இன்றைய அறிக்கை-05-05-2020-தமிழ்நாடு ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

மாநில முதல்வரின் இன்றைய அறிக்கை-05-05-2020-தமிழ்நாடு

. கு. எண்: 058




நாள்: 05.05.2020

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் அறிக்கை நாள் - 5.5.2020

ஜம்மு - காஷ்மீர், குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர

தாக்குதலில், தமிழ்நாட்டில், தென்காசி மாவட்டம், மேலூர் கிராமத்தைச் சேர்ந்த

மத்திய ரிசர்வ் காவல் படையின் 92-வது படைப்பிரிவில் காவலராகப் பணியாற்றி

வந்த திரு. செல்லச்சாமி என்பவரின் மகன் திரு. செ. சந்திரசேகர் என்பவர் 4.5.2020 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மனவேதனைஅடைந்தேன்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு
உயிரிழந்த திரு. சந்திரசேகர் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்திய திருநாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, தீவிரவாதிகள்

நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், தனது இன்னுயிரை தியாகம் செய்த, மத்திய

பாதுகாப்புப் படை வீரர் திரு. சந்திரசேகர் அவர்களின் குடும்பத்திற்கு

இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளதோடு, மறைந்த திரு. சந்திரசேகர் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும்நான் உத்தரவிட்டுள்ளேன்.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் திரு. சந்திரசேகரை இழந்து வாடும்

அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அரசு சார்பில் மரியாதை

செலுத்தவும், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி ராஜலட்சுமி

அவர்களுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்

அவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

K. பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சர்

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை -9
Share:

0 Comments:

Post a Comment