ஒரு தேர்வறையில் 10 மாணவர்கள் பொது தேர்வு ஏற்பாடுகள் அறிவிப்பு
ஒரு தேர்வறையில், 10 மாணவர்கள் வீதம் அமர வைக்கப்படுவர் என்பது உள்ளிட்ட, 10ம் வகுப்பு தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிக்கான ஏற்பாடுகளை, அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள உத்தரவு:
ஒவ்வொரு தேர் வறையிலும், 10 மாணவர்கள், சமூக இடைவெளியுடன் அமர வைக்கப் படுவர் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர் கள், அவர்கள் படிக் கும் பள்ளியில் தேர்வு எழுத நட வடிக்கை எடுக்கப் படும் தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு, தேர்வு நாளன்று பயன்படுத்த, 46.37 லட்சம் முக கவசங் கள், இலவசமாக வழங்கப்படும் தேர்வு மையங்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்தால், அம்மையங்களுக்கு பதிலாக மாற்று தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு மட்டும், சிறப்பு தேர்வு மையங் கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பிற மாநிலங்கள் மற்றும் மாவட் டங்களில் இருந்து, பயணம் செய்து வரும் மாணவர் கள், தேர்வு எழுது வதற்காக, வீட்டு தனிமைப்படுத்துதல் லில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, முதன்மை தேர்வு மையங்களில், தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப் படுவர் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், வெளி யில் செல்லவும், உள்ளே வரவும் அனுமதிக்கப்படுவர் சிறப்பு தேர்வு மையங்களுக்கு செல்ல, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, தனியாக போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும் விடைத்தாள் மதிப் பீட்டு முகாம்களில், ஒரு அறையில், எட்டு பேர் மட்டுமே அமர்ந்து, விடைத் தாள் திருத்தும் பணியை மேற் கொள்வர் ஒவ்வொரு மாவட் டத்திலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழியாக, ஐந்து தொடர்பு எண் கள், உதவி எண்கள் ளாக, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும்.
மாணவர்களின் தேர்வு நுழைவு சீட் டில், அச்சடித்தும் வழங்கப்படும் மாணவர்கள், பெற் றோர் தங்கள் சந்தே கங்களை, காலை, 8:00 மணியில் இருந்து, மாலை, 6:00 வரை கேட்டு தெரிந்து கொள்ள லாம் தேர்வு மையங்கள் மற்றும் விடைத்தாள் திருத்தும் மையங் களுக்கு, போதிய பஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலி ருந்து, தேர்வு எழுது வதற்காக, ஊருக்கு திரும்பும் மாணவர் களும், பெற்றோ ரும், அனுமதி சீட்டு இல்லாமல், சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.
இவ்விலக்கு, தேர்வு மற்றும் விடைத்தாள் திருத் தும் பணியில் ஈடு பட்டுள்ள ஆசிரியர்க ளுக்கும் பொருந்தும் தேர்வு எழுதும் மாணவர்கள், புதிதாக தேர்வு நுழைவுச்சீட்டை, கம்ப்யூட்டர் பதி விறக்கம் செய்து கொள்ள வழி வகை செய்யப்படும்.
பள்ளிக்கு சென்று, தலைமை ஆசிரிய ரிடமும் பெற்றுக் கொள்ளலாம். நோய் கட்டுப்பாட்டு பகுதி யில் உள்ள மாண வர்களுக்கு, நேரடி யாக நுழைவுச்சீட்டு வழங்கப்படும்.
இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments:
إرسال تعليق