> தமிழகத்தில் இன்று முதல் +1,+2 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம். ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழகத்தில் இன்று முதல் +1,+2 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்.

தமிழகத்தில் இன்று முதல் +1,+2 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்.


தமிழகத் தில் மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் மாதம் நிறுத்திவைக்கப்பட் டது. அந்த பணி மே 27ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.

இதையடுத்து, விடை தாள் திருத்தும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்க உள்ளது.

இந்த பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க உள் ளனர். 200 மையங்களில் விடைத்தாள் திருத்தப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் அதி கம் உள்ளதால் சென்னை தவிர பிற மாவட்டங்க ளில் விடைத்தாள் திருத் தும் பணி நடக்கும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை தொடங்கும் விடைத்தாள் திருத்தும் பணியில் முதன்மை தேர்வர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுப டுவார்கள். நாளை துணை தேர்வர்கள் விடைத்தாள் திருத்துவார்கள்.

அதற்கு பிறகே ஆசிரியர் கள் விடைத்தாள் களை திருத்த தொடங்குவார்கள்

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நெறிமுறைகளை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்கள் காலை 8.30 மணிக்கு மைய மதிப் பீட்டு முகாமுக்கு வர வேண்டும். விடைத்தாளில் சிவப்பு நிற மையால் மட் டுமே திருத்த வேண்டும்.உதவி திருத்துநர்கள் தமக்கு வழங்கப்பட்ட உறையில் சரியான எண்ணிக்கையில் விடைத்தாள்கள் உள்ள வா என்பதை முதலில் சரி பார்க்க வேண்டும்

மதிப்பீட்டுப் பணிகள் ஈடுபடும் முன்பு விடைத் தாள்களின் பக்கங்களை சரியாக எண்ணிப்பார்க்க வேண்டும். விடைத்தாளில் ஏதாவது குறைபாடு இருந் தால் அதை முதன்மை திருத்து நர்களின் கவ னத்துக்கு கொண்டு வர வேண்டும். இல்லை என் நான் அதனால் வரும் விளைவுகளுக்கு உதவ திருத்துநர்கள் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

அனைத்து பக்கங்களிலும் உள்ள அனைத்து விடைக ளும் விடுபடாமல் முழுவ தும் சரியாக திருத்தப்பட வேண்டும்.

விடை எழுதாமல் வினா எண் மட்டுமே எழுதி யிருந்தால் சிவப்புமையால் கோடிட வேண்டும்.

உதவித் திருத்து நர் நிலையில் ஏற்படும் தவ றுகள் விடைத்தாள் நகல் பெறுதல், மறுகூட்டல்

போன்ற வற்றின் போது, கண்டுபிடிக்கப்பட்டால்,

தாம் ஈடுபட்ட ரகசிய பணி யில் கவனக் குறைவாக 5 செயல்பட்டதற்கு உரிய

- ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share:

3 Comments: