10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
- ஜூன் 15ம் தேதி முதல் பொதுத் தேர்வுகொ ரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.
- தற்போது, இத்தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இத்தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பக்தவத்சலம்
- சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
- உயர்நீதிமன்றத்தில் வழக்குஅந்த மனுவில், பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து, பெற்றோர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம்
- என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்காமல் ஜூன் 15ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மேலும் மாணவர்கள்,ஆசிரியர்களின் ஆரோக்கிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
- ஊரடங்கால் விடுதிகளில் புத்தகங்களை விட்டுச் சென்ற மாணவர்கள் தேர்வு எழுதுவது கடினம் என்பதால் 15 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
- இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பினர்.
கேள்விகள்:
- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன்?. தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பது.
- கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கவனிக்கவில்லையா? 9 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விசயம்
- 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது. 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது.
- கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின் தேர்வை நடத்தலாம்.
- ஜூலை 2ம் வாரத்தில் தேர்வு நடத்தலாமா என்று கேள்வி எழுப்பிய நிலையில் அரசு தலைமை வழக்கறிஞரை உடனே ஆஜராக கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
- அத்துடன் 2.30 மணிக்கு நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளிக்காவிட்டால் தேர்வை ஒத்திவைக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
- அப்படி ஒத்தி வைக்கப்பட்டால் இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment