10th Tamil important questions 2020 || SSLC Tamil important questionsquestions
Tamil important Questions -PDF Download link
வினா எண் 16-21
ஏதேனும் 4 எழுதுதல்
முக்கிய வினாக்கள்
1)"மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!" -
இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
2)தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
3)நமக்கு உயிர் காற்று காற்றுக்கு வரம் மரம் - மரங்களை வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்' - இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
4)வசனகவிதை- குறிப்பு வரைக.
5)பூவின் பல்வேறு நிலை பெயர்கள் யாவை)
5)மாஅல் - பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.
6)விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
7)'இறடிப் பொம்மல் பெறுகுவிர்' - இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.
8)கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லோர்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல் - இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக,
9)வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக எ.கா. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்,
10)செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.
11)தாய் மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக் குறிப்பிட்டுக் காரணம் எழுதுக.
12)பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
13)மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
14)வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
15)குறிப்பு வரைக - அவையம்,
16)காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
17)வாழ்வில் தலைக்கனம்', 'தலைக்கனமே வாழ்வு' என்று நாகூர் ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?
வினா எண் 22-28
ஏதேனும் 5 எழுதுதல்
முக்கிய வினாக்கள்
1)'வேங்கை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டு.
2)"உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ் இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச்சுட்டி, அதன் இலக்கணம் தருக,
3)தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச்சொற்களை விரித்து எழுதுக; தொடரில் அமைக்க.
4)வினா எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
5)விடை எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
6)குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
7)பா எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
வினா எண் 29-31
ஏதேனும் 2 எழுதுதல்
முக்கிய வினாக்கள்
இதில் (31) பத்தியை படித்து விடையளித்தல்
1)ஜெயகாந்தன் தன் கதை மாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் தர்க்கத்திற்கு அப்பால் கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
2)சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எ.கா. தருக.
3)“தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்"- இடஞ்சுட்டிப் பொருள் தருக.
4)“தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்"- இடஞ்சுட்டிப் பொருள் தருக.
வினா எண் 32-34
ஏதேனும் 2 எழுதுதல்
முக்கிய வினாக்கள்
இதில் செய்யுள் மனப்பாடம் கட்டாய வினா (34)
1)தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை ?
2)தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.
3)விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கங்களாக காசிக்காண்டம் கூறுவன யாவை?
4)முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா.
கவிபாடுகிறார்?
5)சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது' - இடஞ்சுட்டிப் பொருள் தருக.
வினா எண் 35-37
ஏதேனும் 2 எழுதுதல்
முக்கிய வினாக்கள்
இதில் (37) அலகிட்டு வாய்ப்பாடு
1)வெண்பாவின் பொது இலக்கணம்?
2)ஆசிரியப்பா பொது இலக்கணம்?
3)நிரல் நிரை அணி?
4)தீவக அணி?
5)தன்மை அணி?
6)தற்குறிப்பேற்ற அணி?
செய்யுள் நெடுவினா?
1)சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
2)ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களையும் நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.
3)இறைவன் புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
4)கருணையனின் தாய் மறைவுக்கு , வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.
0 Comments:
إرسال تعليق