> தமிழகம் முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழகம் முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30-ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைகிறது இந்தநிலையில், ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், ‘தமிழகம் முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தொடரும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, தேனி மாவட்டங்களில் தற்போது அமலிலுள்ள முழு ஊரடங்கு பலனளித்துள்ளதால், அதேபோன்ற முழு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5-ம் தேதி வரை தொடரும். ஜூலை 6-ம் தேதியிலிருந்து ஜூலை 31-ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் 19-ம் தேதிக்கு முன்னர் அமலிலிருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடரும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றபடி, தொழில்சார்ந்த நடவடிக்கைகளில் ஏற்கெனவே உள்ள தளர்வுகளே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

0 Comments:

Post a Comment