ஹரியாணாவில் நடைபெற்ற 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் சுமார் 87 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
ஹரியாணா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெற்றது. கரோனா பெருந்தொற்று காரணமாகத் தேர்வு முடிவுகள் வெளியீடு தள்ளிப்போனது.
இதற்கிடையில் பொதுத்தேர்வு முடிவுகளும் மறுதேர்வு எழுதியவர்களின் முடிவுகளும் நேற்று ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டன. இதில் 64.59 சதவீதம் பேர் மொத்தமாகத் தேர்ச்சி அடைந்தனர்.
குறிப்பாக மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 69.86% ஆகவும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 60.27% ஆகவும் இருந்தது. இதில் ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 59.74 ஆகும். இதுவே தனியார் பள்ளிகளில் 69.51% ஆக உள்ளது. இந்தப் பொதுத்தேர்வில் சுமார் 87 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 64.39 ஆகவும் நகர்ப்புற மாணவர்களின் தேர்ச்சி 65% ஆகவும் உள்ளது. ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த ரிஷிதா என்னும் மாணவி 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்று ஹரியாணா மாநிலத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
0 Comments:
Post a Comment