> பத்தாம் வகுப்பு மனப்பாடப்பாடல் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

பத்தாம் வகுப்பு மனப்பாடப்பாடல்


10th Tamil


Memory poem -new syllabus 

மனப்பாடப்பாடல் பத்தாம் வகுப்பு

அன்னைமொழியே


-பாவலரேறு பெருஞ்சித்திரனார்


அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே !
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
 கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே ! திருக்குறளின் மாண்புகழே
இன்னறும் பாப்பத்தே ! எண்தொகையே ! நற்கணக்கே ! 
மன்னுஞ் சிலம்பே ! மணிமே கலைவடிவே முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே

-கனிச்சாறு

மனப்பாடப்பாடல் பத்தாம் வகுப்பு

முல்லைப்பாட்டு
நல்லோர் விரிச்சி கேட்டல்


சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
  உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள் 
நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய         கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே வருகுவர், தாயர்" என்போள்
  நன்னர் நன்மொழி கேட்டனம்

-நப்பூதனார்

மனப்பாடப்பாடல் பத்தாம் வகுப்பு

காசிக்காண்டம்


விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் 
   வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல் 
   எழுதல் முன் மகிழ்வன செப்பல் 
பொருந்து மற்று அவன் தன் அருகுற இருத்தல் 
   போமெனில் பின் செல்வதாதல் 
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான் 
  ஒழுக்கமும் வழிபடும் பண்பே

-அதிவீரராம பாண்டியர்

மனப்பாடப்பாடல் பத்தாம் வகுப்பு

பெருமாள் திருமொழி


வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட்டம்மா! நீ ஆளா 
உனதருளே பார்ப்பன் அடியனே

-குலசேகராழ்வார்


Share:
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

2 Comments: