10 வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், கடந்த வாரம் வெளியிடப்பட்டன. இந்நிலையில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படமால் உள்ளது. மேலும் மற்ற வகுப்புகளுக்கு, அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்ட விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி கல்வி இயக்குனரகம் மற்றும் தேர்வுத்துறை இயக்குனரகத்தில், துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி கல்வி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை, தலைமை செயலகத்தில் நடக்கும் கூட்டத்தில், பள்ளி கல்வி செயலர் தீரஜ்குமார், கமிஷனர் சிஜி தாமஸ், இயக்குனர் கண்ணப்பன் பங்கேற்கின்றனர்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு, ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது, கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
0 Comments:
Post a Comment