தமிழக்தில் மார்ச் 4 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அட்டவணைப்படுத்தப்பட்ட தேர்வில் இறுதித் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடந்தது.
அவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.பிளஸ் 1 மாணவர்கள் மட்டுமல்லாமல் பிளஸ் 2 தேர்வு.. மறு தேர்வு எழுதிய 519 மாணவர்களின் தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் காலை ஒன்பது முப்பது மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresult.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். மாணவர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment