> 12th Revaluation & Re totalling 2020 ~ Kalvikavi - Educational Website - Question Paper

12th Revaluation & Re totalling 2020

 தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தமிழக தேர்வுத்துறையால் இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 8.16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் இன்று முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு அறிவிருந்த நிலையில் தேர்வு முடிவுகள் 
http://tnresults.nic.in,

 http://dge1.tn.nic.in, 

http://dge2.tn.nic.in 

ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டன.அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.3 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்கள் 89.41% தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் மாணவர்களை விட மாணவிகள் 5.39% அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் மாவட்டங்களிலேயே 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் திருப்பூர் மாவட்டத்தில்97.12 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று மாவட்டங்களில் 
திருப்பூர் முதலிடம் பெற்றுள்ளது.
அதே போல தேர்ச்சி விகிதத்தில்
 ஈரோடு மாவட்டம் 2ம் இடமும்,
 கோவை மாவட்டம் 3ம் இடமும்
 பெற்றுள்ளது. 
இந்நிலையில் தேர்வு முடிவுகள் குறித்து தமிழக தேர்வுத்துறை கூறியுள்ளதாவது: கடந்த மார்ச் 24ம் தேதி நடைபெற்ற தேர்வை எழுதாத மாணவர்களின் தேர்வு முடிவும் வெளியானது; மாணவர்கள் எழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் தற்போது வெளியாகி உள்ளது என்று தெரிவித்துள்ளது மேலும் தெரிவித்துள்ள தேர்வுத்துறை மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் 
விடைத்தாள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி, மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது

மறுகூட்டல்,மறுமதிப்பீடு

மாணவர்கள் மறுகூட்டல் மறுமதிப்பீட்டிற்கு தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும்,
மனித தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய பள்ளி(மையம்) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts