10th Tamil - Unit 1.1 Annai mozhiye - Question and answer
இயல்-1
கவிதைப் பேழை
அன்னை மொழியே
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
1.பலவுள் தெரிக
1.எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
அ) எந் + தமிழ் + நா இ) எம் + தமிழ் + நா
ஆ) எந்த + தமிழ் + நா ஈ) எந்தம் + தமிழ் + நா
குறுவினா
மன்னும் சிலம்போமணிமேகலை வடி வே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே- இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங் காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக:-
விடை:-
சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.
சிறுவினா
1.தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை
அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே
தமிழே! தாய் மொழியே! அழகான செந்தமிழே
பழமைக்குப் பழமையாய்த் தோற்றம் கொண்ட நறுங்கனியே!
குமரிக்கண்டத்தில் நிலைபெற்று அரசாட்சி செலுத்திய மண்ணுலகப் பேரரசே!
பாண்டியனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவள்!
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய அனைத்துமானவளே!
பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து உன்னை வாழ்த்துகின்றோம்.
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே.
நெடுவினா
1) சுந்தரனாரின் மனோன்மணியம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக:-
தாயே! தமிழே! வணக்கம் தாய் மகன் உறவு அம்மா, உனக்கும் எனக்கும்
செய்யுள் ஒன்றனை இயற்றும் போது தெய்வத்தையோ, இயற்கையை, உயந்தாரையோ
நாட்டையோ, மொழியை வாழ்த்திப் தொடங்குவது கவிஞர்களின் இயல்பு. இங்கு இரு கவிஞர்களின் வாழ்த்துப் பாடல்கள் பற்றி ஆய்ந்து ஓப்பிடுவோம்
நாடு மொழி
பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ் மொழியை அன்னை மொழியாகவும்
செந்தமிழாகவும், நற்கனியாகவும், பேரரசாகவும், பாண்டியனின் மகனாகவும், திருக்குறள் பெருமைக்குரியவளாகவும் ஒப்புமைப்படுத்திக் காட்டியுள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் தமிழ் நிலத்தைப் பெண்ணாக உருவகம் செய்துள்ளார்.
அந்நிலப்பெண் கடலை ஆடையாக அணிந்துள்ளான். அவள் நெற்றியிலிட்ட பொட்டு மணம் வீசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மணம் எல்லாத் திசைகளிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற தமிழ் பெண்ணே என்ற பெண் தெய்வத்திற்கு ஒப்பிட்டுள்ளார் பெருமை.
திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களின் மூலம் பொங்கி எழும் தலைபணிந்து வாழ்த்துகிறோம் என்று பாவலரேறு வாழ்த்துகிறோம்.
பெருமையை பரப்புதல்
நிலைத்த நினைவுகளால் பழம்பெருமையும், தனக்கெனத் தனிச்சிறப்பும் இலக்கிய வளமும் கொண்டதாகவும் தமிழ் உள்ளது. நீண்ட நிலைத்த தன்மையும் கொண்ட தமிழ் மொழி. உள்ளத்தில் கனல் மூள, வண்டானது செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுவது போன்று நாங்கள் உன்னைச் சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்.
தமிழ்ப் பெண்ணே இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உனது புகழைப் போற்றுவோம்.
நிறைவாக சாகும்போதும் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்.
என்று கவிஞர் க. சச்சிதானந்தன் கூறுவதற்குக் காரணம் கூட தமிழின் மேற்கண்ட சிறப்புகளே என்று கூறலாம்.
0 Comments:
Post a Comment