> +2 result வெளியிடுவதில் சிக்கல் ~ Kalvikavi -->

+2 result வெளியிடுவதில் சிக்கல்

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஜூன் மாதத்தில் திறக்க வேண்டிய பள்ளிகள் ஜூலை மாதம் பிறந்தப் பின்னும் திறக்கப்படவில்லை. 

மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இருப்பினும், பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பதற்காக நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தற்போது வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. 
மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதிய பிறகே முடிவுகளை வெளியிட முடியும். மீண்டும் பேருந்து இயக்கினால் மட்டுமே மாணவர்களை தேர்வு எழுத வைக்க முடியும்.
ஜூலை முதல் வாரத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் என ஏற்கனவே கூறியிருந்தார். 
முதல்வரிடம் ஆலோசித்த பிறகே 12-ம் வகுப்பு தேர்வு முடிவு பற்றி அறிவிக்கப்படும் என்று தற்போது கூறியுள்ளார்.

மேலும், அனதை்து துறை ஆலோசனைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார். 
மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பெற்றோர்களிடம் கருத்துக் கேட்ட பின்பே பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 நிலைமை சரியான பின்பே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்; பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம். தற்போதைக்கு பள்ளிகளை திறப்பதற்கான சூழல் இல்லை என்றும் தெரிவித்தார்.

Share:

0 Comments:

إرسال تعليق