பள்ளிகளை திறக்க, கால தாமதம்
பள்ளிகளை திறக்க, கால தாமதம் ஏற்பட்டு உள்ளதால்,அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி வாயிலாக,பாடங்களை ஒளிபரப்ப, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.கொரோனா பிரச்னையால், பள்ளிகள் திறப்பு தொடர்ந்து தாமதமாகிறது.
செப்டம்பரில்
பள்ளிகளை திறக்க முடியுமா என்பதே, கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகள், தங்கள் மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக பாடங்களை நடத்தி வருகின்றன. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியில் பாடங்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே, இந்த ஆண்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, முதற் கட்டமாக,
கல்வி தொலைக்காட்சி
கல்வி தொலைக்காட்சி வழியே பாடங்களை நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான படப்பிடிப்புகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., வழியே மேற்கொள்ளப்படுகின்றன.
0 Comments:
Post a Comment