தமிழக அரசின் 7 அதிரடி அறிவிப்புகள்!
1. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு
மாணவர்களுக்கு முந்தைய பருவத் தேர்வுகள், மாணவர்களின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் வெளியிட்டுள்ளார்.
மாணவர்கள் cbseresults.nic.in என்ற இணையத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
2. நடப்பாண்டில் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை - நாளை ஆலோசனை.
நாளை நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு.
அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு இறுதி செய்யப்படும் என தகவல்.
நடப்பாண்டில் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துவது குறித்து நாளை ஆலோசனை.
3. ஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்!
ஆசிரியர் மாணவர் நேரடி கற்றல் , கற்பித்தல் நிகழ்தல்தான் முறையான கல்வியும் , மாணவர்களின் ஒழுக்கத்தையும் மேம்படுத்தமுடியும் என்பதால் தொற்று பாதிக்கப்படாத கிராமப்புறப் பகுதிகளில் ஆகஸ்டு 3 - வது வாரத்தில் பள்ளி திறந்து , சுழற்சி முறையில் வகுப்புகள் செயல்பட அனுமதிக்கலாம் .
அதேபோல் ஆசிரியர்களையும் கழற்சிமுறையில் பயன்படுத்தலாம் . * கொரோனா தொற்று காரணத்தினால் இந்த ஆண்டு 40 சதவீதம் பாடத்திட்டதை குறைக்க அரசு ஆவன செய்யவேண் டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
4. பள்ளிக்கல்வித்துறை பாடங்கள் டிவியில் ஒளிபரப்பாகும் சேனல்கள்
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கல்வித் தொலைக்காட்சியில் தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு பாடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன .
இதனை கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடு முழுவதும் காணலாம் .
1. TACTV ( தமிழ்நாடு அரசு கேபிளில் ) 200 2. SCV - 98
3. TCCL - 200
4. VK DIGITAL - 55
5. AKSHAYA CABLE - 17
6. Youtube - shorturl.at/pJKVO
இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் .
5. தனியார் பள்ளிகள் நாளை போராட்டம்
பள்ளி வாகனங்கள் ஓடாத காலத்துக்கு, வரி செலுத்த கட்டாயப்படுத்துவதை எதிர்த்து, நாளை போராட்டம் நடத்தப்படும்' என, தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்து உள்ளது.
6. இலவச, லேப்டாப்பில் பிளஸ் 2 பாடங்கள்
அரசு கேபிள், 'டிவி' மற்றும், தமிழ்நாடு கேபிள் கார்பரேஷன் நிறுவனம் ஆகியவற்றின் இணைப்பில், 200ம் எண்ணில், அரசின் கல்வி, 'டிவி'யில் பாடம் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை தயாரித்துள்ள கல்வி, 'டிவி'யின் வீடியோ பாடங்களை, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பில் பதிவு செய்து தர, அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.'பென் டிரைவ்' வழியாக பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment