> TN College semester exams Cancel-2020 ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TN College semester exams Cancel-2020

தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில் நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத் தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக அக்குழு தன்னுடைய பரிந்துரையை தெரிவித்துள்ளது


மாணாக்கர்களின் நலன் கருதி, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின்

வழிகாட்டுதலின்படி, மதிப்பெண்கள் வழங்க முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கும் மற்றும் பலவகை தொழில்

நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கும்

முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும்

இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும்

முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும்

அதேபோன்று, எம்.சி.ஏ. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும்

இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க நான் உத்தரவிட்டுள்ளேன்

இது குறித்து விரிவான ஒரு அரசாணையை வெளியிட உயர்கல்வித் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். என தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 23-07-2020 இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Share:

0 Comments:

Post a Comment