> 11th and 12th Revaluation and retotal apply ~ Kalvikavi -->

11th and 12th Revaluation and retotal apply


11th and 12th Revaluation and retotal apply 

மார்ச் 2020, மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய தேர்வர்கள் மற்றும் 27.07.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு மறுதேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இன்று (31.07.2020) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது



மேல்நிலைப் பள்ளித்  தலைமையாசிரியர்களுக்கு மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு மறுதேர்வு தொடர்பான மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரும் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக பின்வரும் அறிவுரைகளை வழங்கப்படுகிறது

********************************************

********************************************

1. மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு மறுதேர்விற்கான விடைத்தாள் நகல் கோரி அல்லது மதிப்பெண் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்தின் வாயிலாகவும், பின்வரும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாள்களில் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

2. விடைத்தாள் நகல் / மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நாள்கள் 

தேர்வர்கள் வகை

மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வெழுதிய தேர்வர்கள் - 05.08.2020 (புதன் கிழமை) முதல் 12.08.2020 (புதன் கிழமை) வரை

மேல்நிலை இரண்டாமாண்டு மறு தேர்வு எழுதிய தேர்வர்கள்.  -05.08.2020 (புதன் கிழமை) முதல் (07.08.2020 (வெள்ளிக் கிழமை) வரை


விடைத்தாளின் நகல் (Copy of the answer sheet)- கட்டணம்

*பாடம் ஒவ்வொன்றுக்கும் - ரூ. 275/

*மறுகூட்டல் (Re- totaling) கட்டணம்

"உயிரியல் பாடம் மட்டும் - ரூ.305

ஏனையப் பாடங்கள்.         / ரூ.205/ (ஒவ்வொன்றிற்கும்)

*ஒரே சமயத்தில் ஒரே பாடத்திற்கு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கக் கூடாது.

*விடைத்தாள் நகல் பெற்ற பின்னர் மதிப்பெண் மறுமதிப்பீட்டுக்கு/மறுகூட்லுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்

*விடைத்தாள் நகல் தேவையில்லையெனில், மாணவர் விரும்பினால் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம். இவ்விவரங்களை மாணவர்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்

*விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரி பள்ளிகள் / தேர்வு மையங்களில் விண்ணப்பிக்கும் மாணாக்கர் அதன்பிறகு விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்வது, மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்களை அரசுத் தேர்வுத் துறையால் வெளியிடப்படும் செய்தி குறிப்பின் மூலமே அறிந்து செயல்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் பள்ளிகள் / தேர்வுமையங்களை அணுக வேண்டாம் என்பதை விண்ணப்பிக்கும் மாணாக்கர் / பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

Full PDF Download link click here

********************************************

********************************************




Share:

0 Comments:

Post a Comment