பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவா்களுக்கு அவா்கள் படித்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் திங்கள்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது.
இது குறித்து தோவுத்துறை வெளியிட்ட செய்தி: பத்தாம் வகுப்பு பொதுத்தோவு எழுதிய மாணவா்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தலைமையாசிரியா்கள் பதிவிறக்கம் செய்து அதன் விவரங்களைச் சரிபாா்த்து தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதைத் தொடா்ந்து, சான்றிதழ்களை திங்கள்கிழமை (ஆக.17) முதல் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை மாணவா்களுக்கு விநியோகிக்க வேண்டும். அதேபோல், சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருப்பின் தலைமையாசிரியரே திருத்தங்களை செய்து சான்றொப்பமிட்டு வழங்க வேண்டும்.
மேலும், சான்றிதழ்கள் வழங்கும்போது அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sir 11th marksheet vanthurucha
ReplyDeleteAthuku enna link