இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டபடி, தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க, வரும் 27 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் மத்தியில் இந்தியாவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போதே இருந்தே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 1 முதல் 10ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது. விடுமுறைக்கு பிறகும் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. தனியார்கள் ஆன் லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் தமிழக அரசு வகுப்பு நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இதனிடையே, ஆகஸ்ட் 17ம் தேதிக்கு பிறகு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியார்கள் பள்ளி ஏற்கெனவே கட்டணங்களை வசூலித்து வருவதோடு, மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டபடி, தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க, வரும் 27 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, எட்டாம் வகுப்பு வரை மத்திய, மாநில அரசுகள் கல்வி கட்டணத்தை செலுத்தி வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை பள்ளிக்கல்வித்துறை இணையத்தளத்தில், வரும் 27 ம் தேதி முதல் செப்டம்பர் 25 ம் தேதி வரை பெற்றோர்கள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இதன்படி குழந்தையின் வீட்டிலிருந்து தனியார் பள்ளி 1 கிலோ மீட்டர் தொலைவிலும், பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது தமிழக அரசு.
0 Comments:
Post a Comment