பள்ளிகள் திறப்பு : செப்.28ல் பள்ளி கல்வி துறை ஆலோசனை
தமிழகத்தில் தற்போதைய கொரோனா சூழலில் பள்ளிகள் திறக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபியில், நேற்று அவர் அளித்த பேட்டி,:
தமிழகத்தில் தற்போதைய கொரோனா சூழலில் பள்ளிகள் திறக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை. இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழக புதிய பாடத்திட்டம் அமைந்துள்ளது. தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் தொடர்பாக வரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
.தமிழகத்தில் இதுவரை ஒன்று முதல் பிளஸ் 2 வரை 15:30 லட்சம் மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர்க்கையாகி உள்ளனர்.
செப்டம்பர் இறுதி வரை தொடர்ந்த மாணவர் சேர்க்கை நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிகள் திறப்பு: செப்.28ல் ஆலோசனை ஊரடங்கால் மூடப்பட்ட பள்ளிகள், இன்னும் திறக்கப்படவில்லை.
ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை, அரசு அறிவித்துள்ளதால், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து, வரும், 28ம் தேதி கருத்து கேட்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது.
அன்று பிற்பகலில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடக்கும் கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கும்படி, தொடக்க கல்வி இயக்குனர் பழனிசாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பள்ளி கல்வி செயலர் தீரஜ்குமார், கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன், இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
0 Comments:
Post a Comment