> அக்.1ல் பள்ளிகள் திறப்பு இல்லை.. பள்ளிகள் திறப்பு எப்போது.. முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு ~ Kalvikavi - Educational Website - Question Paper

அக்.1ல் பள்ளிகள் திறப்பு இல்லை.. பள்ளிகள் திறப்பு எப்போது.. முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டேபர் 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மத்திய அரசு வழிகாட்டுதல்களின் படி, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள், பெற்றோர்களின் ஒப்புதலுடன் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிக்கு வந்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

மாணவர்களிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பள்ளிகளை திறக்கும் முடிவுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக்.1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆலோசனை பெற போக முடியாது. பள்ளிகளும் திறக்கப்படாது என்று உறுதியாகி உள்ளது.இதனிடையே மாணவர்களின் நலன் கருதி, பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு, மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு எப்போது வரலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கூட்டத்திற்கு பிறகு முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts