> பள்ளிகள் திறக்கப்படும் போது பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு சுழற்சிமுறை வகுப்பு நடைபெறுமா? அல்லது வழக்கமான வகுப்பு நடைபெறுமா? ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

பள்ளிகள் திறக்கப்படும் போது பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு சுழற்சிமுறை வகுப்பு நடைபெறுமா? அல்லது வழக்கமான வகுப்பு நடைபெறுமா?

  கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் போது பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு சுழற்சிமுறை வகுப்பு நடைபெறுமா? அல்லது வழக்கமான வகுப்பு நடைபெறுமா? என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்


கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் தமிழகத்தில் திறக்கப்படவில்லை என்பது தெரிந்ததே. மேலும் வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பள்ளிகள் திறக்கப்படும்போது சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என்றும் பாதி மாணவர்கள் காலையிலும் பாதி மாணவர்கள் மாலையிலும் வரவழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது

ஆனால் இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தபோது கொரோனாவுக்கு பின் சுழற்சி முறையான வகுப்புகள் கிடையாது என்றும் அனைத்து வகுப்புகளும் ஒரே நேரத்தில் திறக்கப்படும் என்றும் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற தேவையான வகுப்பறைகள் அனைத்து அரசு பள்ளிகளில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்

அமைச்சர் செங்கோட்டையனின் இந்த அறிவிப்பை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்ட பின் சுழற்சிமுறை வகுப்புகள் கிடையாது என்பதும் வழக்கமான வகுப்புதான் என்பதும் உறுதியாகி உள்ளது


Share:

1 Comments: