> அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது ~ Kalvikavi - Educational Website - Question Paper

அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது

 அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


School Reopen G.O PDF Download

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். அதே போல, 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்த நிலையில், 46 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக பல மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. செப்டம்பர் 21ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அதாவது, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் விருப்பம் இருந்தால் பள்ளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனை அடுத்து, இன்று பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் எனவும் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுச்செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 50% ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.




Share:

2 Comments:

Popular Posts