> தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக் கல்வி ஊக்கத்தொகை த் திட்டம் (National Scheme of Incentive to Girls for Secondary Education-NSIGSE) ~ Kalvikavi - Educational Website - Question Paper

தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக் கல்வி ஊக்கத்தொகை த் திட்டம் (National Scheme of Incentive to Girls for Secondary Education-NSIGSE)

 தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக் கல்வி ஊக்கத்தொகை த் திட்டம் (National Scheme of Incentive to Girls for Secondary Education-NSIGSE) கடந்த ம் ஆண்டு முதல் 207 வரை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையால் செயல்படுத்தப்பட்டு வந்தது. 


இத் திட்டத்தின்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறும் SC மற்றும் ST பிரிவு மாணவியர் தங்கள் இடைநிலை கல்வியை கைவிடாவண்ணம் அவர்களின் இடைநிற்றலை கட்டுப்படுத்தும் நோக்கில் அம்மாணவியர் ஒன்பதாம் வகுப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்தவுடன் அவர்களின் பெயர்ப்பட்டியல் மற்றும் வங்கி கணக்கு எண் உட்பட வேறு சில தகவல்களை சேகரித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அம்மாணவியரின் வங்கிக் கணக்கில் ரூ. 3000/- வைப்பு நிதியாக செலுத்தப்பட்டது. அம்மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டுமென்றும் அவர்கள் 18 வயது பூர்த்தி செய்தபின் திருமணமாகாமல் இருப்பின் அவர்கள் இத்தொகையை வட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதுமட்டுமன்றி, கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயின்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு சேர்ந்த அனைத்து பிரிவு மாணவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்களாக கருதப்பட்டனர்

*எனவே, 2008-09 ஆம் ஆண்டு முதல் 2016-17ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட அதாவது ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சிஅடைந்த மாணவர், (Fresh மற்றும் Maturity) என இரு கருத்துருக்கள் மத்தியமனிதவள மேம்பாட்டு துறைக்கு அனுப்பப்பட்டன.

*தற்போது, பார்வையிற்காண் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு 2012132013 14, 2014-15, 2015-16 மற்றும் 2016-17 ஆகிய ஆண்டுகளில் அனைத்து பெயர் பட்டியலை சரிபார்த்து அம்மாணவிகளை கண்டறிந்து அவர்களின் வங்கிக் கணக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உள்ளதா என்பதையும், வங்கியின் பெயர், IFSC குறியீடு மற்றும் வங்கி கணக்கு எண் போன்றவற்றை சரி பார்த்திடவும், மாணவியரின் வங்கி கணக்கு நடைமுறையில் உள்ளதையும் உறுதி செய்ய வேண்டும். 

*மாணவியரின் தொடர்பு எண் உள்ளிட்ட இன்ன பிற விவரங்களையும் சேகரித்து இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

*மேலும் இப்பணியானது, முக்கிய பணியாக இருப்பதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கென பிரத்யேகமாக ஒரு குழு அமைத்து (மாணவிகளை அணுக ஏதுவாக ஆசிரியர்களை இணைத்து) சரியான விவரங்களை விரைந்து சேகரித்து தொகுக்கவும் அனைத்து மாட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கொனப்படுகிறார்கள்,

*இதன் தொடர்ச்சியாக, 2012-13, 2013-14, 2014-15, 2015-16 மற்றும் 2016-17 என ஐந்து ஆண்டுகளுக்கான தகவல்களையும் ஆண்டு வாரியாக தனித்தனியாக பட்டியல் தயாரித்து 5 இணைப்புகளாக Excel format-ல் மின்னஞ்சல் இணை இயக்குநர் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு (tnsc@nic.in) அனுப்பிவைத்து விட்டு அதன் இரண்டு நகல்களில் முதன்மைக் கல்வி அலுவலர்களின் கையொப்பம் பெற்று உடன் பள்ளி கல்வி இயக்ககத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவும் அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

*மேலும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து பெறப்படும் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை 14.10.2020 அன்று மாலை 5 மணிக்குள் இணை இயக்குனர், நாட்டு நலப்பணித்திட்டம் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு (incidence.in)தவறாமல் அனுப்பி வைத்த மீளவும் தெரிவிக்கப்படுகிறது.

Full details 

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts