> October, 1ல் பள்ளிகளை திறப்பது குறித்து, முதல்வர் முடிவு எடுப்பார். ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

October, 1ல் பள்ளிகளை திறப்பது குறித்து, முதல்வர் முடிவு எடுப்பார்.

  ''அக்., 1ல் பள்ளிகளை திறப்பது குறித்து, முதல்வர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.



ஈரோடு மாவட்டம், கோபியில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும், அக்., 1ல் பள்ளிகளை திறப்பது குறித்து, முதல்வர் முடிவு எடுப்பார்.

இது குறித்து, சுகாதாரம், வருவாய் மற்றும் பள்ளிக்கல்வித் துறை ஒருங்கிணைந்து, முதல்வர் தலைமையில் நடக்கும், உயர்மட்ட குழு கூட்டத்தில் தான் முடிவுகள் மேற்கொள்ள இயலும்.

பள்ளிக்கல்வித் துறை சார்பில், 14474 என்ற ஹெல்ப் லைன் உள்ளது. இந்த எண்ணில், பாடத்தில் சந்தேகம் உள்ள மாணவர்களுக்கு, காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை விளக்கம் அளிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Share:
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

0 Comments:

Post a Comment