> Samacheer kalvi 10,11,12th Syllabus 40% reduced ~ Kalvikavi -->

Samacheer kalvi 10,11,12th Syllabus 40% reduced

 மாணவர்களின் பாட சுமையை குறைக்கும் வகையில் நிபுணர்குழுவினர் அளித்த அறிக்கையின் படி நடப்பாண்டு 40 சதவிகித பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். எத்தனை போட்டித்தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.



கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. சூழல் சரியாகாததால், பள்ளிகளைத் திறப்பது தள்ளிப்போய்க் கொண்டிருக்கும் நிலையில், ஆன்லைன் மூலம் தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை.

பாடங்கள் அதிகமாக இருப்பதால் தேர்வு நேரத்தில் அனைத்தையும் படிப்பது என்பது எளிதான காரியம் அல்ல என்பது ஆசிரியர்கள், பெற்றோர்களின் கருத்தாலும். இது குறித்து சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா பாதிப்பால், பள்ளி செயல்படும் நாட்கள் குறைவாக இருப்பதால், முக்கிய பாட பகுதிகளை மட்டும் மாணவ, மாணவிகள் படிப்பதற்கு சில பக்கங்களை குறைக்க 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். நிபுணர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் பாடங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வாரம் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நிபுணர்குழுவினர் அளித்த அறிக்கையின் படி நடப்பாண்டு 40 சதவிகித பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் 90 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. எத்தனை போட்டித்தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்குவோம். சனிக்கிழமைகளில் கல்வித்தொலைக்காட்சியில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும் எனவும் கூறினார்.

Share:

1 Comments: