> தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது, பொதுத் தோ்வுகளைத் தள்ளிவைப்பது குறித்து - இன்று ஆலோசனை ~ Kalvikavi - Educational Website - Question Paper

தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது, பொதுத் தோ்வுகளைத் தள்ளிவைப்பது குறித்து - இன்று ஆலோசனை

 தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது, பொதுத் தோ்வுகளைத் தள்ளிவைப்பது போன்ற விஷயங்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்த உள்ளாா்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறையாத நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் எனத் தெரியாத சூழல் நிலவுகிறது. இந்த மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்பது உறுதியான நிலையில், அடுத்த மாதம் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகளைத் தொடங்குவது, பொதுத்தோ்வுகளை ஒத்திவைப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து துறைச் செயலா், இயக்குநா்களுடன் அமைச்சா் செங்கோட்டையன் சென்னையில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதைத் தொடா்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டால், மாணவா்களுக்கு சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற போதுமான இடவசதிகள், பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்வதில் உள்ள பிரச்னைகளையும் ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்

Share:

1 Comments:

  1. School open panna enga uyir ku uthiravatham ella nanga vara matom

    ReplyDelete

Popular Posts