> பள்ளிகள் திறப்பு - ஒவ்வொரு மாநிலங்களின் முடிவு ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

பள்ளிகள் திறப்பு - ஒவ்வொரு மாநிலங்களின் முடிவு

பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்த பின்பும் கரோனா  பரவலின் தீவிரத்தால் பல்வேறு மாநிலங்கள் தயங்கி காட்டி வருகின்றன.

Join Here for உடனடி செய்திகளுக்கு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👍

  • ஊரடங்கில் ஒவ்வொரு மாதமும் தளர்வுகளை அறிவித்துவரும் மத்திய அரசு, அக்.15-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று செப்.30-ம் தேதி தெரிவித்தது.

  •  கல்வி நிறுவனங்களில் உரிய கரோனா  வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


  • இந்நிலையில் டெல்லி, கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் பள்ளிகளைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. 

  • இதற்கிடையில் ஹரியாணா, மேகாலயா ஆகிய மாநிலங்கள் பள்ளிகளைத் திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.


  • October-31 ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது ஏற்கெனவே இருந்ததுபோல ஆன்லைன் வழியில் வகுப்புகள் தொடரும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

  • கர்நாடக அரசின் சார்பில் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் கூறும்போது, பள்ளிகளை மீண்டும் திறப்பதில் எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை. அனைத்துக் கோணங்களிலும் நன்கு ஆராய்ந்த பிறகுதான்    இதுகுறித்து முடிவெடுக்கப்படும். என்றார்.


  • சத்தீஸ்கர் அரசு, தொற்றுக் காலத்தில் மீண்டும் உத்தரவுகள் வரும் வரை மாநிலம் முழுவதும், பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்  என்று தெரிவித்துள்ளது.


  • அதேபோல மகாராஷ்டிர அரசு, தீபாவளிக்குப் பிறகு கோவிட்-19 சூழல் குறித்து மதிப்பிடப்படும். அதுவரை பள்ளிகள் திறக்கப்படாது  என்று தெரிவித்துள்ளது.


  • குஜராத்தில் தீபாவளிக்குப் பிறகு பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக, அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 


  • மேகாலயாவில் பள்ளிகள் திறப்பு  குறித்துப் பெற்றோர்களிடம் கருத்துகளைப் பெற்ற பிறகே, இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • ஹரியாணா மாநிலத்தில் 6th to 12th வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து யோசித்து வருவதாகவும் இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.


  • ஆந்திரப் பிரதேச அரசு, November-2 ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று அறிவித்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, November மாதத்தின் இறுதியில் பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவெடுப்போம் என்று அறிவித்துள்ளார்.


  • எனினும் உத்தரப் பிரதேச அரசு, கட்டுப்பாட்டு மையங்களுக்கு வெளியே உள்ள 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள், அக்.19 முதல் பள்ளிகளுக்கு வரலாம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


  • இதற்கிடையே புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் அக்.8 முதல் அரை நாள் வகுப்புகள் நடந்து வருகின்றன.


Share:

0 Comments:

Post a Comment