> உயர்கல்வித் தகுதியினை கூர்ந்தாய்வு செய்யும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விவரங்கள் - பள்ளிக்கல்வித்துறை தெளிவுரை! ~ Kalvikavi - Educational Website - Question Paper

உயர்கல்வித் தகுதியினை கூர்ந்தாய்வு செய்யும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விவரங்கள் - பள்ளிக்கல்வித்துறை தெளிவுரை!

 உயர்கல்வித் தகுதியினை கூர்ந்தாய்வு செய்யும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விவரங்கள் - பள்ளிக்கல்வித்துறை தெளிவுரை!
செய்யும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விவரங்கள் : 



1 ) அரசாணை ( நிலை ) எண் 37 , பணியாளர்மற்றும் நிர்வாகசீர்திருத்தத் ( FR.IV ) துறை , வெளியிடப்பட்ட நாளான 10.03.2020 - க்கு முன்னர் ( அதாவது 09.03.2020 வரை ) உயர்கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . 


2 ) அரசாணை ( நிலை ) எண் .328 , பணியாளர்மற்றும் நிர்வாகசீர்திருத்தத் ( பணியாளர் . A ) துறை , நாள் : 09.04.1983 , அரசுக்கடிதம் ( டி ) எண் .356 , பள்ளிக்கல்வித்துறை , நாள் : 02112007 மற்றும் அரசுக்கடிதம் எண் 23339 / பக 5 ( 2 ) 20164 , நான் : 15.12.2017 ஆகியவற்றிற்கு இணங்க , சம்மந்தப்பட்டப்பணியாளர் உயர் கல்வி பயில துறையின் முன் அனுமதியைப் பெற்றிருத்தல் வேண்டும் . 


3 ) தொடர்புடைய பல்கலைக்கழகம் பட்டம் அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.


4 ) தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலப் பல்கலைக்கழகங்களில் பெற்றபட்டச் சான்றுக்கு இணைத்தன்மை ( Equivalency ) வழங்கி தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இணைத்தன்மை வழங்கப்படாத பட்டச்சான்றுகளைப் பரிசீலனை செய்தல்கூடாது.


5 ) தொடர்புடையப்பட்டம் , ஏற்கனவே ஊக்க ஊதிய உயர்வு அனுதித்தல் சார்ந்து நடைமுறையில் இருந்த அரசாணைகளின்படி தகுதிபெற்றதாக இருத்தல் வேண்டும் . 


6 ) ஒரு ஆசிரியரின் மொத்தப் பணிக்காலத்தில் ஏதேனும் இரு உயர் கல்வித் தகுதிகளுக்கு ஏற்கனவே இரு ஊக்க ஊதிய உயர்வுகளைப் பெற்றிருந்தால் அந்த ஆசிரியரின் பெயரினைப் பரிந்துரைத்தல்கூடாது.


7 ) பணி ஓய்வு பெற்றநாளுக்குப் பின்னர் உயர்கல்வி தேர்ச்சி பெற்ற ஆசிரியர் பெயரினைக் கண்டிப்பாகப் பரிந்துரைத்தல் கூடாது.


8 ) உயர்கல்வி இறுதித் தேர்விற்கான கால அட்டவணை , தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் உண்மைத்தன்மைச்சான்றுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படவேண்டும்.


9 ) தகுதிபெற்ற எந்தவொரு ஆசிரியர்பெயரும் விடுபடக்கூடாது , எதிர்காலத்தில் அவ்வாறு விடுபட்டது கண்டறியப்பட்டால் அதற்குத் தொடர்புடையப் பள்ளித் தலைமையாசிரியர் முதன்மைக்கல்வி அலுவலரே முழுப்பொறுப்பேற்க நேரிடும் . 


10) பார்வை ( 3 ) ல்கண்டுள்ள அரசாணை ( நிலை ) எண் .116 , பணியாளர் மற்றும் நிர்வாகசீர்திருத்தத் ( FR IV ) துறை , Date: 15 : 102020- ல் , பார்வை ( 1 ) ல்கண்டுள்ள அரசாணைவெளியிடப்பட்டநாளுக்கு முன்னர் ( 09.032020 ) உயர்கல்வித்தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வுபெறாத விண்ணப்பிக்காத அரசு அலுவலர்களுக்கு 31.03.2021 - க்குள் உரிய அனுமதி ஆணைவழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


11) எனவே இப்பொருள்குறித் தவிவரங்களை விரைந்து அரசுக்கு அனுப்பவேண்டியுள்ள நிலையில் மறுநினைவூட்டிற்கு இடமின்றி மேற்குறிப்பிட்டுள்ளகால அவகாசத்திற்குள் உரியவிவரங்ளை அனுப்புமாறுஅனைத்து முதன்மைக்கல் விஅலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts