> Instructions follow to providing Mark sheet ~ Kalvikavi - Educational Website - Question Paper

Instructions follow to providing Mark sheet

பள்ளிகளில் / தேர்வு மையங்களில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் வழங்கிடும்போது பின்பற்ற வேண்டிய அறிவுரைகள்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👍


i)மதிப்பெண் சான்றிதழ்களை பெற நீண்ட வரிசையில் மாணவர்கள் பெற்றோர்கள் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு, மாணவர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டிய நேரம் குறித்து முன்னரே மாணவர்களுக்கு தெரிவித்திட வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்களுக்கு மிகாமல் பள்ளிக்கு வருகை புரியுமாறு திட்டமிடுதல் வேண்டும்.

ii. மாணவர்கள் வரிசையில் நிற்கும்பொழுது சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பதற்கு ஏதுவாக தரையில் போதிய இடைவெளி விட்டு குறியீடுகள் உருவாக்கிட வேண்டும்.


iii. மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள பள்ளிக்கு வருகை தரும் மாணவர்கள் / பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்


iv. மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல்கள் வழங்கும் நாளன்று பள்ளி நுழைவு வாயிலில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு சமூக இடைவெளி கான விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடித்தல் வேண்டும்.


V. மதிப்பெண் சான்றிதழ்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் / ஆசிரியர்கள் கட்டாயம் கையுறை அணிந்திருத்தல் வேண்டும்.


vi. சான்றிதழ்களை தேர்வர்கள் பெற்றோர்கள் சமூக இடைவெளியுடன் பெற்றுக் கொள்ள ஏதுவாக பள்ளித் தலைமை ஆசிரியர் இரண்டு வகுப்பறைகளை காத்திருப்பு அறைகளாக (Waiting rooms) அமைத்தல் வேண்டும்.தேர்வர்கள் / பெற்றோர்கள் காத்திருக்கும் அறைக்கு வெளியே கூட்டம் கூடுவதற்கு அனுமதித்தல் கூடாது.


vii, பள்ளி வளாகத்தில் கை கழுவுவதற்கு சோப்பு மற்றும் தண்ணீர் வசதி ஏற்பாடு செய்தல் வேண்டும். அதற்கேற்ப பள்ளியின் நுழைவாயில் மற்றும் வெளியேறும் வழி ஆகியவற்றில் சோப்பு மற்றும் கை கழுவுவதற்கு தகுந்த ஏற்பாடு செய்தல் வேண்டும்.


viii, மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல்கள் தேர்வர்களுக்கு வழங்கிடுவதற்கு முன்னரே பள்ளிகளில் உள்ள காத்திருப்பு அறைகள் (Waiting rooms) மற்றும் சான்றிதழ் விநியோகிக்கும் அறைகளில் உள்ள மேசை, நாற்காலி, கதவு, ஜன்னல் ஆகியவற்றில் கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்


ix. சான்றிதழ்கள் விநியோகப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரையும் அவர்களது கைகளை சோப்பு/ Hand Sanitizers கொண்டு சுத்தம் செய்த பின்னரே பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.


X. ஆசிரியர்கள் / பணியாளர்கள், மாணவர்கள் / தேர்வர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை பள்ளித் தலைமை ஆசிரியர் உறுதி செய்தல் வேண்டும்


XI. ஆசிரியர்கள் / பணியாளர்கள் / மாணவர்கள் அனைவரும் தேவையின்றி பள்ளி வளாகத்திற்குள் கூட்டம் கூடுதல் கூடாது என அறிவுறுத்துதல் வேண்டும்.

xii. மேலும், அரசாணை (நிலை) எண்.379, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் (DM.II) துறை, நாள்.22.07.2020-ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகள் அனைத்தும் பள்ளி வளாகத்தில் கண்டிப்பாக பின்பற்றப்படுதல் வேண்டும்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👍


Share:

0 Comments:

Post a Comment

Popular Posts