> NMMS - உதவித்தொகை வழங்கப்படாமல் விடுபட்ட 703 மாணவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

NMMS - உதவித்தொகை வழங்கப்படாமல் விடுபட்ட 703 மாணவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

 NMMS கல்வி உதவித்தொகை - 2016-17ஆம் ஆண்டில் வங்கிக் கணக்கு சரியாக இல்லாத காரணத்தால் உதவித்தொகை வழங்கப்படாமல் விடுபட்ட மாணவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group



மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் மின்னஞ்சலின்படி கடந்த 2016-2017 ஆம் ஆண்டில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்விற்கான NMMSS கல்வி உதவித் தொகை பெறுவதற்காக 6492 தகுதியுள்ள மாணவ மாணவியருக்கு விண்ணப்பிக்கப்பட்டது . அவற்றில் 5789 மாணவ / மாணவியற்கு மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும் மீதமுள்ள 703 மாணவ / மாணவியரின் வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக இல்லாததாலும் அக்கணக்கு விவரங்கள் நடைமுறையில் வைக்கப்படாததாலும் கல்வி உதவித் தொகை செலுத்த இயலவில்லை என தெரிவித்து மேற்படி 703 மாணவ / மாணவியர்களின் தற்போது நடைமுறையில் உள்ள சரியான வங்கி கணக்கு விவரங்களை பூர்த்தி செய்து உடன் அனுப்பிவைக்குமாறு இவ்வியக்ககத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே , மேற்படி உதவித் தொகை செலுத்தப்படாத 703 .மாணவியர்களின் விவரங்கள் இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது . அவற்றில் தங்கள் மாவட்டத்தைச் சார்ந்த உதவித் தொகை கிடைக்கப் பெறாத மாணவ / மாணவியர்களின் விவரங்களை கண்டறிந்து அவர்களின் தற்போது சரியான நடைமுறையில் உள்ள வங்கி கணக்கு விவரங்களை பூர்த்தி செய்து உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மாணவ / மேலும் , இப்பணியை 23.10.2020 ஆம் தேதிக்குள் முடித்து அன்று மாலை 5 மணிக்குள் idnsed@nic.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group

Share:

0 Comments:

Post a Comment