> பள்ளிகள்-பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! ~ Kalvikavi - Educational Website - Question Paper

பள்ளிகள்-பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 DGE DIR PROCEEDINGS PDF DOWNLOAD

பள்ளிகள்-பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!



மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை , சுகாதாரத்துறை மற்றும் தொற்றுநோய் சிறப்பு வல்லுநர் குழுவுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9.10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்க அறிவிப்பு வெளியிடப்பட்டதற்கு இணங்க அதனை செயல்படுத்தும் விதமாக பார்வை ( 1 ) ல் கண்டுள்ள அரசாணையின்படி தமிழகத்தில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு நடைபெறும் உயர் வகுப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வரும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9.10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அந்தந்த அரசு , அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை திறந்திடலாம் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து ஏற்கனவே பெற்றோர்கள் . கல்வியாளர்களின் கருத்துகள் அரசால் பெறப்பட்டு பரிசிலிக்கப்பட்டு இருந்த போதிலும் , வழிகாட்டுதலின்படி அந்தந்த அரசுப்பள்ளிகள். அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் - ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடமும் , தனியார் பள்ளிகளின் நிர்வாகத்துடனும் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகளை பெற்றிட ஏதுவாக வருகின்ற நவம்பர் 9 ஆம் ( திங்கட்கிழமை ) தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் , கோவிட் 19 முன்னெச்சரிக்கை குறித்து அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கருத்து கேட்பு கூட்டம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என பார்வை ( 2 ) ல் கண்ட பள்ளிக் கல்வித்துறையின் அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது . அரசின் அவ்வாறு கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் போது மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் பெற்றோர்கள் அதிகம் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அச்சமயத்தில் 9.10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு தனித்தனியாக கோவிட் 19 முன்னெச்சரிக்கை குறித்து அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும் . அதிக அளவில் பெற்றோர்கள் வரக்கூடிய பள்ளிகளில் பெற்றோர்களை வெவ்வேறு நேரங்களில் குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு அழைத்து கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதேபோன்று கூட்டம் முடிக்கும் பொழுதும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வெவ்வேறு நேரங்களில் முடித்து அனுப்ப வேண்டும் . அச்சமயம் தலைமை ஆசிரியரே அனைத்து வகுப்பு கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த இயலாத பட்சத்தில் உதவி தலைமை ஆசிரியர்களை கொண்டு கருத்து கேட்பு கூட்டங்களை நடத்த அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படவேண்டும் . அவ்வாறு நடைபெற உள்ள கருத்து கேட்பு கூட்ட அரங்கை / அறைகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்தல் வேண்டும் . பெற்றோர்கள் சமூக இடைவெளியுடன் அமரும்படி இருக்கைகள் அமைத்தல் வேண்டும் . மேலும் கூட்டத்திற்கு வரும் பெற்றோர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர அறிவுறுத்தும்படி அனைத்து தலைமையாசிரியர்கள் அவர்களிடம் தெரிவிக்கவேண்டும்.


 கருத்து கேட்பு கூட்டத்திற்கு வருகை தரும் பெற்றோர்கள் பள்ளி முகப்பில் தெர்மல் ஸ்கேனர் கொண்டு சோதனை செய்து பள்ளி வளாகத்தில் நுழைய அனுமதிக்க வேண்டும் . அவர்கள் கருத்து கேட்பு கூட்டத்திற்கு செல்வதற்கு முன் சோப்பு கொண்டு கைகளை சுத்தமாக கழுவ ஏற்பாடுகள் செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட வேண்டும் . மேலும் கூட்ட அரங்கின் நுழைவாயிலில் கிருமிநாசினியால் ( Hand Sanitiser ) கைகளை சுத்தம் செய்த பின்பு கூட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும். இப்பணிகளை மேற்கொள்ள ஒருவரை நியமித்து எவ்விதசுணக்கமுமின்றி செயல்பட அனைத்து தலைமையாசிரியர்களும் அறிவுறுத்தப்படவேண்டும் . மேலும் கருத்து கேட்பு கூட்டத்தில் ஏகமனதாக தெரிவிக்கப்படும் கருத்துகளை தொகுத்து அதனை அரசுப்பள்ளி / அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர் , பெற்றோர் - ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி / சி.பி.ஸ்.சி , தனியார் பள்ளிகளை சார்ந்த முதல்வர்கள் / நிர்வாகிகள் , பெற்றோர்களின் கையொப்பம் பெற்று முதன்மைக்கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை அரசுக்க சமர்ப்பிக்கம் வகையில் தொகுத்து பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் . உரிய தங்கள் மேலும் இக்கருத்து கேட்பு கூட்டத்தில் எடுக்கப்படும் கருத்துகளின் அடிப்படையிலேயே பள்ளிகள் திறப்பது குறித்து அரசால் முடிவெடுக்கப்படும் என்பதை நினைவில் கொண்டு எந்தவிதமான புகார்களுக்கும் இடமளிக்காவண்ணம் கூட்டத்தை நடத்திட அனைத்து பள்ளி தலைமயாசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும் . அரசு , அரசுஉதவிபெறும். சுயநிதி , மெட்ரிக் . சி.பி.எஸ்.சி பள்ளிகளில் நடைபெறும் கருத்துக் கேட்பு கூட்டங்களை பார்வையிட எதுவாக மாவட்டத்தில் பணிபுரியும் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர்கள் , வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் , மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஈடுபடுத்த வேண்டும்.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts