10-ஆம்,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – முதல்வரிடம் ஆலோசனை!!!
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்துவது அல்லது ரத்து செய்வது குறித்து அதிகாரபூர்வ முடிவை முதல்வரிடம் கலந்து ஆலோசித்த பிறகே எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும் படிக்க: மாணவர்களின் பயம், அழுத்தத்தைப் போக்க ஆலோசகர்கள்- இலவசத் தொலைபேசி எண் அறிவிப்பு
பள்ளிகள் திறப்பது எப்போது?
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் சில மாநில அரசுகள் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. கல்வித்துறை வட்டாரங்கள் சார்பாக ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற அறிவிப்பு வெளியாகிய நிலையில் பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.
மேலும் படிக்க: பள்ளி திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் விளையாட்டு வீரர்கள் நல சங்கம் கோரிக்கை
கோபிச்செட்டிபாளையம் ஆசிரியர் நகர் பகுதியில் சிறு மருத்துவமனையை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் இந்தாண்டு அரையாண்டு தேர்வு அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் ரத்து செய்யப்பட்டது. போன வருடம் அரையாண்டு தேர்வு மற்றும் காலாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
மேலும் படிக்க: What is Zero Academic year? பூஜ்யம் கல்வி ஆண்டு என்றால் என்ன?
அன்றைய சூழல் வேறு, அப்போது கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது உள்ள சூழல் வேறு, அதில் அரசு சார்பில் கட்டுப்பாடு நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாக செய்துள்ளது எனவே பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும். அது குறித்த அறிவிப்பை முதல்வரிடம் ஆலோசனை வழங்கி பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்
இந்த ஆண்டு பொதுதேர்வு மிக அவசையம்...
ReplyDelete