புது டில்லி: சி.பி.எஸ்.இ., 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2021 மே 4-ல் தொடங்கி ஜூன் 10-ல் முடிவடையும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group
பிப்ரவரி வரை சி.பி.எஸ்.இ., தேர்வுகளை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை என டிச., தொடக்கத்தில் மத்திய கல்வி அமைச்சர் கூறியிருந்தார். மாநிலங்களில் தொற்றுநோய்களின் நிலைமையை ஆராய்ந்த பின்னரே தேர்வு தேதிகள் முடிவு செய்யப்படும், வழக்கமான முறையிலேயே தேர்வு நடைபெறும், ஆன்லைன் முறையில் இருக்காது என அறிவித்திருந்தார்.
மேலும் படிக்க- தமிழகத்தில் பொதுத்தேர்வு குறித்து - அமைச்சர் செங்கோட்டையன்
இந்நிலையில் டுவிட்டர் நேரலையில் சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வு தேதிகளை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார். செயல்முறை தேர்வுகள் மார்ச் முதல் தேதி தொடங்கும். எழுத்துத் தேர்வு மே 4 தொடங்கி ஜூன் 10-ல் முடியும் என கூறினார். தேர்வு முடிவுகள் ஜூலை 15 அன்று வெளியிடப்படும் என்றார். விரிவான அட்டவனை இணையதளத்தில் விரைவில் பதிவேற்றப்படும்.
தொற்றுநோயினால் ஒரே நாளில் ஆன்லைன் வகுப்பறைக்கு மாறினோம். ஆசிரியர்களின் உதவியால் இது நடந்தது. இணையம் மற்றும் ஸ்மார்ட்போன்கள் இல்லாத மாணவர்களுக்கு உதவ, “ஒரு வகுப்பு ஒரு சேனல்” அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி என்றும் கூறினார்
0 Comments:
Post a Comment