12th history Chapter 2.தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Book back Question and answer
I. சரியான விடையைத்
தேர்வு செய்யவும்.
1. சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?
(அ) அரவிந்த கோஷ்
(ஆ) தாதாபாய் நௌரோஜி
(இ) ஃபெரோஸ் ஷா மேத்தா
(ஈ) லாலா லஜபதி ராய்
2. பின்வரும் கூற்றுக்களைக் காண்க.
(i) 1905 இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப் பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
(ii) 1905இல் நடைபெற்ற கல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அழைப்பு விடுத்தார்.
(iii) 1905 ஆகஸ்ட் 7இல் கல்கத்தா நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது.
மேற்கண்ட கூற்றுக்களில் எது/எவை சரியானவை.
(அ) (i) மட்டும்
(ஆ) (i) மற்றும் (iii) மட்டும்
(இ) (i) மற்றும் (ii) மட்டும்
(ஈ) மேற்கண்ட அனைத்தும்
3. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க.
(அ) இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910- 1. சுய ஆட்சி
(ஆ) விடிவெள்ளிக் கழகம்- 2. சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி
(இ) சுயராஜ்யம்- 3. தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது
(ஈ) சுதேசி- 4. கல்விக்கான தேசியக் கழகம்
அ,ஆ,இ,ஈ
(அ) 3, 1, 4, 2
(ஆ) 1,2,3,4,
(இ) 2,4,1,2
(ஈ) 1,2,4,3
4. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?
(அ) பங்கிம் சந்திர சாட்டர்ஜி- ஆனந்த மடம்
(ஆ) G.சுப்ரமணியம் - விடிவெள்ளிக் கழகம்
(இ) மிண்டோ பிரபு - பல்கலைக்கழகச் சட்டம், 1904
(ஈ) தீவிர தேசியவாத மையம்- சென்னை
5. கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர்
(அ) புலின் பிஹாரி தாஸ்
(ஆ) ஹேமச்சந்திர கானுங்கோ
(இ) ஜதிந்தரநாத் பானர்ஜி மற்றும் பரிந்தர் குமார்கோஷ்
(ஈ) குதிரம் போஷ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி
6. கூற்று: 1905 அக்டோபர் 16 துக்கநாளாக
அனுசரிக்கப்பட்டது.
காரணம்: மேற்படி நாளில் வங்காளம் முறைப்படி இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
(அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி. காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
7. கூற்று: வ.உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
காரணம்: இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.
(அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால், காரணம் கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி; காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு; காரணம் சரி.
8. சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது?
(அ) பாரதி சுதேசமித்திரன் இதழின் துணைஆசிரியராக இருந்தார்.
(ஆ) பாரதி திலகரின் Tenets of New Party என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்.
(இ) பாரதியின் குருமணி (ஆசிரியர்) சுவாமி விவேகானந்தராவார்.
(ஈ) பாரதி பெண்களுக்கான “சக்ரவர்த்தினி” என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்.
TNPDS,TNTET,TNUSRB,TNPSC COMPETITIVE EXAM HISTORY IMPORTANT QUESTIONS AND ANSWER ,12TH HISTORY ONE MARK QUESTIONS WITH ANSWER CHAPTER WISE .
THESE HISTORY ONE MARK QUESTIONS COLLECTION HELP FOR YOUR EXAM PREPARATION. YOU CAN GET GOOD MARKS IN YOUR EXAMINATION.
0 Comments:
Post a Comment