> 12th history Chapter .4காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Book back Question and answer ~ Kalvikavi - Educational Website - Question Paper

12th history Chapter .4காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Book back Question and answer

 12th history Chapter .4காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Book back Question and answer 

1. காந்தியடிகளின் அரசியல் குரு யார்? 

(அ) திலகர் 

(ஆ) கோகலே

(இ) W.C. பானர்ஜி (ஈ) M.G. ரானடே

2. தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தியடிகள் தனது வெற்றிகரமான முதலாவது சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கிய இடம்

(அ) கேதா

(ஆ) தண்டி

(இ) சம்பரான் 

(ஈ) பர்தோலி

3. சைமன் கமிஷன் காங்கிரஸால் ஏன் புறக்கணிக்கப்பட்டது?

(அ) சைமன் குழு அறிக்கையில் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவது குறித்த பரிந்துரை இல்லை.

(ஆ) சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை.

(இ) அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை.

(ஈ) அது முழுச் சுதந்திரத்திற்கான வாக்குறுதியைக் கொண்டிருக்கவில்லை.

4. இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது?

(அ) டிசம்பர் 31, 1929  (ஆ) மார்ச் 12, 1930

(இ) ஜனவரி 26, 1930 (ஈ) ஜனவரி 26, 1931

5. 1923இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர். தாஸ் -ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின்பெயர் என்ன?

(அ) சுயராஜ்ய கட்சி

(ஆ) கதார் கட்சி

(இ) சுதந்திரா கட்சி

(ஈ) கம்யூனிஸ்ட் கட்சி.

6. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

(அ) நாமசூத்ரா இயக்கம் – 1. வடமேற்கு இந்தியா

(ஆ) ஆதிதர்ம இயக்கம்– 2. தென்னிந்தியா

(இ) சத்யசோதக் இயக்கம் – 3. கிழக்கிந்தியா

(ஈ) திராவிட இயக்கம்– 4. மேற்கு இந்தியா

       அ. ஆ  இ. ஈ

(அ) 3  1.  4. 2

(ஆ) 2. 1.  4. 3

(இ) 1.  2.  3.  4

(ஈ) 3.   4.   1.  2


7. ஒத்துழையாமை இயக்கத்தின் பல்வேறு நிலைகளைக் கால வரிசைப்படுத்துக.

(1) அமிர்தசரஸ் நகரில் பிரிட்டிஷ் படையால் ஆயுதம் ஏந்தாத மக்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது.

(2) நீதிமன்ற விசாரணை இன்றி எவரையும்சிறையில் அடைக்க ரௌலட் சட்டம் கொண்டு வரப்பட்டது.

(3) சௌரி சௌரா வன்முறைச் சம்பவம் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைவிலக்கிக் கொள்ள வழிவகுத்தது.

(4) கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை என்ற காந்தியடிகளின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டது.

(அ) 2, 1, 4, 3

(ஆ) 1, 3, 2, 4

(இ) 2, 4, 1, 3

(ஈ) 3, 2, 4 ,1

8. பின்வரும் எந்த ஒன்று சரியாகப் 

பொருந்தவில்லை?

(அ) பஞ்சாப் துணை ஆளுநர்– 1. ரெஜினால்டு டையர்

(ஆ) தலித் - பகுஜன் இயக்கம்–2. டாக்டர். அம்பேத்கர்

(இ) சுயமரியாதை இயக்கம் – 3. ஈ.வெ.ரா. பெரியார்

(ஈ) சத்தியாகிரக சபை – 4. ரௌலட் சட்டம்

9. பின்வரும் நிகழ்வுகளைச் சரியான கால வரிசைப்படி அமைத்து கொடுக்கப்பட்டுள்ள விடைகளிலிருந்து சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.

(i) கேதா சத்தியாகிரகம்

(ii) சம்பரான் இயக்கம்

(iii) பிராமணரல்லாதார் இயக்கம்

(iv) வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்

(அ) ii, iii, i, iv

(ஆ) iii, ii, i, iv

(இ) ii, i, iv, iii

(ஈ) ii, i, iii, iv

10. பின்வருவனவற்றுள் எது/எவை சரியானவை அல்ல.

(i) காந்தியடிகள் அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவினார்.

(ii) வல்லபாய் படேல் ஒரு வழக்கறிஞர்.

(iii)சைமன் குழுவினை முஸ்லீம் லீக் வரவேற்றது.

(iv) இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் காந்தியடிகள் கலந்து கொண்டார்.

(அ) i

(ஆ) i மற்றும் iv

(இ) ii மற்றும் iii

(ஈ) iii மட்டும்

11. ஒத்துழையாமை இயக்கம் உள்ளடக்கியவை.

(அ) பள்ளி மற்றும் கல்லூரிகளைப் புறக்கணித்தல்

(ஆ) அரசு வழங்கியபட்டங்களைத் திருப்பியளித்தல்

(இ) உண்ணாவிரதங்கள் கடைப்பிடிப்பதைஎதிர்த்தல்

(ஈ) அரசுக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபடுதல்

(அ) அ மற்றும் ஆ

(ஆ) ஆ மற்றும் இ

(இ) அ மற்றும் ஈ

(ஈ) இ மற்றும் ஈ

12. கூற்று: பி.ஆர். அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.

 காரணம்: அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க முயன்றார். 

அ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது. 

(ஆ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.

(இ) கூற்று சரி, காரணம் தவறு.

(ஈ) கூற்று தவறு, காரணம் சரி.

13. கூற்று: 1919இல் இந்தியக் கவுன்சில் சட்டம் மற்றும் ரௌலட் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

 காரணம்: இது மிதவாத தேசியவாதிகளை அரவணைத்து தீவிர தே சியவாதிகளைத் தனிமைப்படுத்தும் பிரிட்டிஷாரின் கொள்கையின் ஒரு பகுதியாகும். 

(அ)கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது. 

(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

(இ) கூற்று சரி, காரணம் தவறு.

(ஈ) கூற்று தவறு, காரணம் சரி.

14. கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்களில் சுயராஜ்யகட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் யார்?

(அ) இராஜாஜி  (ஆ) சித்தரஞ்சன் தாஸ்

(இ) மோதிலால் நேரு (ஈ) சத்யமூர்த்தி

15. காந்தியடிகளின் தண்டி யாத்திரை பயணம் சென்றடைந்த ஆண்டு

(அ) ஏப்ரல் 6, 1930

(ஆ) மார்ச் 6, 1930 

(இ) ஏப்ரல் 4, 1939

(ஈ) மார்ச் 4, 1930


TNPDS,TNTET,TNUSRB,TNPSC COMPETITIVE EXAM HISTORY IMPORTANT QUESTIONS AND ANSWER ,12TH HISTORY ONE MARK QUESTIONS WITH ANSWER CHAPTER WISE .
THESE HISTORY ONE MARK QUESTIONS COLLECTION HELP FOR YOUR EXAM PREPARATION. YOU CAN GET GOOD MARKS IN YOUR EXAMINATION.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts