6th social science term-2 Book back Question and Answer
மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
மூன்று ரத்தினங்கள்
கர்மாவிலிருந்து விடுதலை பெறுவதற்கும் மோட்ச நிலையை அடைவதற்கும் மகாவீரர் மூன்று வழிகளை அறிவுறுத்தினார்.
அவை
நன்னம்பிக்கை
நல்லறிவு
நற்செயல்
கௌதம புத்தர்
பௌத்த மதத்தை நிறுவியவர் கௌதம புத்தர் ஆவார்.
அவரின் இயற்பெயர் சித்தார்த்தர். மகாவீரரைப் போலவே இவரும் ஒரு சத்திரிய இளவரசர். அரசாட்சி செய்து கொண்டிருந்த சாக்கிய அரசவம்சத்தில் பிறந்தவர். சித்தார்த்தர் ஏழு நாள் குழந்தையாக இருந்த போது அவருடைய தாயார் இயற்கை எய்தினார். எனவே அவருடைய சிற்றன்னை கௌதமி அவரை வளர்த்தார்.
நான்கு பெரும் காட்சிகள்
சித்தார்த்தா தனது 29வது வயதில் நான்கு துயரம் மிகுந்த காட்சிகளைக் கண்டார்.
அவை
கூன் விழுந்த முதுகுடனும், கந்தல் ஆடைகளுடனும் கவனிப்பாரற்ற ஒரு முதியவர்.
குணப்படுத்த முடியாத வியாதியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஒரு நோயாளி.
இறந்துவிட்ட ஒரு மனிதனின் சடலம் அழுது கொண்டிருக்கும் அவனின் உறவினர்களால் இடுகாட்டிற்குக் கொண்டு செல்லப்படுதல்.
ஒரு துறவி.
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
- நன்னம்பிக்கை,
- நல்லறிவு,
- நற்செயல் ஆகியன சமணத்தின் மூன்று ரத்தினங்கள் ஆகும்.
- ஹீனயானம், மகாயானம் ஆகிய இரண்டும் பௌத்தத்தின் இரு பிரிவுகளாகும்,
- ஜினா என்றால் தன்னையும், வெளியுலகத்தையும் வெல்வது என்பதாகும் .
- சமணமும், பௌத்தமும் கர்மா என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டனர்.
- மக்கள் பேசிய தாய்மொழிகளில் போதித்தனர்
- புத்தர் தனது கருத்துகளைப் பரப்ப சங்கங்களை நிறுவினார்.
- அதன் உறுப்பினர்களான துறவிகள் பிட்சுக்கள்' என அழைக்கப்பட்டனர் .
- இச்சங்கங்கள் நாடு முழுவதும் புத்தர் கொள்கைகளைப் பரப்பினர்.
- கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்த சீனப் பயணி யுவான் சுவாங் ஆவார்.
- சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெண் ஜைனத் துறவி கவுந்தியடிகள் ஆவார்.
- நல்ல நம்பிக்கை
- நல்ல எண்ணம்
- நல்ல பேச்சு
- நல்ல செயல்
- நல்ல வாழ்க்கை
- நல்ல முயற்சி
- நல்ல அறிவு
- நல்ல தியானம்
0 Comments:
Post a Comment