தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!!
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் சரிவர நடத்தாமல் பள்ளிக்கட்டணம் வசூலித்த 14 பள்ளிகள் மீது புகார் வந்துள்ளதாகவும், அதில் உண்மைத்தன்மையை கண்டறிந்து 10 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் மீது நடவடிக்கை:
நடப்பு கல்வியாண்டு தொடங்கி 6 மாத காலம் முடிவடைந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த தகவலும் தமிழக அரசு வெளியிடாத நிலையில் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த கல்வித்துறை அனுமதியளித்துள்ளது. ஆன்லைன் வசதி இல்லாத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளி நிர்வாகம் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்துவது, தேர்வுகள் நடத்துவது என சிறப்பாக செய்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதல் கட்டணத்தை வசூலிக்க அரசு தடை விதித்திருந்தது.
தற்போது சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் சரிவர நடத்தாமல் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணத்தை வாங்குவதாக 14 பள்ளிகளின் மீது புகார் வந்துள்ளதாகவும், அதில் உண்மைத்தன்மையை கண்டறிந்து 10 பள்ளிகளின் மேல் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment