> 9th Tamil தொடர் இலக்கணம்(Thodar ilakkanam) Book back Question and answer - New syllabus (Reduced) ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

9th Tamil தொடர் இலக்கணம்(Thodar ilakkanam) Book back Question and answer - New syllabus (Reduced)

 9th Tamil தொடர் இலக்கணம்(Thodar ilakkanam) Book back Question and answer - New syllabus (Reduced)

Tnstudytime Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Book back Questions and answer unit 1.5 தொடர் இலக்கணம்

கற்பவை கற்றபின்

Question 1.

தொடர்களை மாற்றி உருவாக்குக.

அ) பதவியை விட்டு நீக்கினான். (இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக)

Answer: பதவியை விட்டு நீக்குவித்தான்.

ஆ) மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர். (இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக)

Answer: மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்வித்தனர்.

இ) உண்ணப்படும் தமிழ்த்தேனே. (இத்தொடரைச் செய்வினைத் தொடராக மாற்றுக)

Answer: உண்ணும் தமிழ்த்தேனே.

ஈ) திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாக பகுத்துள்ளனர். (இத்தொடரை செயப்பாட்டு வினைத் தொடராக மாற்றுக)

Answer: திராவிட மொழிகள் மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன.

உ) நிலவன் சிறந்த பள்ளியில் படித்தார். (இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக)

Answer: நிலவன் சிறந்த பள்ளியில் படிப்பித்தான்.

Question 2.

சொற்களைத் தொடர்களாக மாற்றுக :

Answer:

அ) மொழிபெயர் (தன்வினை, பிறவினை தொடர்களாக மாற்றுக)

Answer:

  1. மொழி பெயர்த்தாள் – தன்வினை
  2. மொழி பெயர்ப்பித்தாள் – பிறவினை

ஆ) பதிவுசெய் (செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக மாற்றுக)

Answer:

  1. பதிவு செய்தான் – செய்வினை
  2. பதிவு செய்யப்பட்டது – செயப்பாட்டுவினை

9th Tamil திராவிட மொழிக்குடும்பம் ( Thiravida mozhikudumbam ) Book back Question and answer - New syllabus (Reduced)

இ) பயன்படுத்து (தன்வினை, பிறவினைத் தொடர்களாக மாற்றுக)

Answer:

  1. பயன்படுத்துவித்தான் – பிறவினை
  2. பயன்படுத்தினான் – தன்வினை

ஈ) இயங்கு (செய்வினை, செயப்பாட்டு வினை தொடர்களாக மாற்றுக)

Answer:

  1. இயங்கினாள் – செய்வினை
  2. இயக்கப்பட்டாள் – செயப்பாட்டுவினை

Question 3.

பொருத்தமான செயப்படுபொருள் சொற்களை எழுதுக.

(தமிழிலக்கிய நூல்களை, செவ்விலக்கியங்களைக், நம்மை, வாழ்வியல் அறிவை)

அ) தமிழ் …………………………………. கொண்டுள்ளது.

ஆ) நாம் …………………………………. வாங்க வேண்டும்

இ) புத்தகங்கள் …………………………………. கொடுக்கின்றன.

ஈ) நல்ல நூல்கள் …………………………………. நல்வழிப்படுத்துகின்றன.

Asnwer:

  1. அ) தமிழ் செவ்விலக்கியங்களைக் கொண்டுள்ளது.
  2. ஆ) நாம் தமிழிலக்கிய நூல்களை வாங்க வேண்டும்
  3. இ) புத்தகங்கள் வாழ்வியல் அறிவைக் கொடுக்கின்றன.
  4. ஈ) நல்ல நூல்கள் நம்மை நல்வழிப்படுத்துகின்றன.

Question 4.

பொருத்தமான பெயரடைகளை எழுதுக.

(நல்ல, பெரிய, இனிய, கொடிய)

அ) எல்லோருக்கும் …………………….. வணக்கம்.

ஆ) அவன் …………………….. நண்பனாக இருக்கிறான்.

இ) …………………….. ஓவியமாக வரைந்து வா.

ஈ) …………………….. விலங்கிடம் பழகாதே.

Answer:

  1. அ) எல்லோருக்கும் இனிய வணக்கம்.
  2. ஆ) அவன் நல்ல நண்பனாக இருக்கிறான்.
  3. இ) பெரிய ஓவியமாக வரைந்து வா.
  4. ஈ) கொடிய விலங்கிடம் பழகாதே.

Question 5.

பொருத்தமான வினையடைகளைத் தேர்வுசெய்க.

(அழகாக, பொதுவாக, வேகமாக, மெதுவாக)

அ) ஊர்தி …………………….. சென்றது.

ஆ) காலம் …………………….. ஓடுகிறது.

இ) சங்க இலக்கியம் வாழ்க்கையை …………………….. காட்டுகிறது.

ஈ) இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதை அனைவருக்கும் …………………….. காட்டு.

  1. Answer:
  2. அ) ஊர்தி மெதுவாகச் சென்றது.
  3. ஆ) காலம் வேகமாக ஓடுகிறது.
  4. இ) சங்க இலக்கியம் வாழ்க்கையை அழகாகக் காட்டுகிறது.
  5. ஈ) இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதை அனைவருக்கும் பொதுவாகக் காட்டு.


Question 6.

அடைப்புக் குறிக்குள் கேட்டுள்ளவாறு தொடர்களை மாற்றி எழுதுக.

அ) நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர். (வினாத்தொடராக எழுதுக)

Answe:

நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினரா? (அல்லது)

இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தியவர் யார்?

ஆ) இசையின்றி அமையாது பாடல். (உடன்பாட்டுத் தொடராக அமைக்க)

Answer:

இசையோடு அமையும் பாடல்

இ) நீ இதைச் செய் எனக் கூறினேன் அல்லவா? (கட்டளைத் தொடராக மாற்றுக)

Answer:

நீ இதைச் செய்.


Question 7.

வேர்ச்சொல்லை வைத்துச் சொற்றொடர்களை உருவாக்குக.

அ) தா (உடன்பாட்டு வினைத்தொடர், பிறவினைத் தொடர் ஆக்குக)

Answer:

தந்தேன் – உடன்பாட்டு வினைத்தொடர்

தருவித்தேன் – பிறவினைத் தொடர்

ஆ) கேள் (வினாத்தொடர் ஆக்குக)

Answer:

கேட்டாயா? – வினாத் தொடர்

இ) கொடு (செய்தித் தொடர், கட்டளைத் தொடர் ஆக்குக)

Answer:

நீ அதைக் கொடு – செய்தித் தொடர்

நீ கொடு – கட்டளைத் தொடர்

ஈ) பார் (செய்வினைத் தொடர், செயப்பாட்டு வினைத் தொடர், பிறவினைத் தொடர் ஆக்குக)

Answer:

பார்த்தான் – செய்வினைத் தொடர்

பார்க்கப்பட்டான் – செயப்பாட்டு வினைத் தொடர்

பார்க்கச் செய்தான் – பிறவினைத் தொடர்

9th Tamil திராவிட மொழிக்குடும்பம் ( Thiravida mozhikudumbam ) Book back Question and answer - New syllabus (Reduced)

Question 8.

சிந்தனை வினா

கீழ்க்காணும் சொற்றொடர்கள் சரியானவையா? விளக்கம் தருக.

அ) அவை யாவும் இருக்கின்றன

அவை யாவையும் இருக்கின்றன.

அவை யாவும் எடுங்கள்

அவை – பன்மை , யாவும்

அவை யாவையும் எடுங்கள்

அவை – பன்மை, யாவையும்

அவை யாவற்றையும் எடுங்கள்

கீழ்க்காணும் சொற்றொடர்கள் சரியானவையா? விளக்கம் தருக.

ஆ) நீங்கள் ஒரு நாளிதழில் பணிபுரிகிறீர்கள். அங்குப் புதிய வார இதழ் ஒன்று தொடங்க விருக்கிறார்கள். அதற்காக அந்நாளிதழில் விளம்பரம் தருவதற்குப் பொருத்தமான சொற்றொடர்களை வடிவமைத்து எழுதுக.

இ) சொற்றொடர் வகைகளை அறிந்து, அவை எவ்வாறு பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படுகின்றன என்பதைப் பதிவு செய்க.

ஈ) வந்திருப்பவர்கள் அனைவரும் இருக்கையில் அமருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இத்தொடர் ஆங்கிலத்திலிருந்து நேரடியான தமிழ் மொழிபெயர்ப்பாக இருந்தாலும் மொழி மரபை இத்தொடரில் பேணுகிறோமா?

  1. Answer:
  2. அ) அவை யாவும் இருக்கின்றன – தவறு (அவை – பன்மை ; யாவும் – ஒருமை)
  3. அவை யாவையும் இருக்கின்றன. – சரி (அவை – பன்மை; யாவையும் – பன்மை)
  4. அவை யாவும் எடுங்கள் – தவறு (அவை யாவும் எடு என்பதே சரி)
  5. அவை – பன்மை , யாவும் – ஒருமை, எடு – ஒருமை
  6. அவை யாவையும் எடுங்கள் – தவறு (அவை யாவையும் எடு என்பதே சரி)
  7. அவை – பன்மை, யாவையும் – பன்மை, எடு – ஒருமை
  8. அவை யாவற்றையும் எடுங்கள் – சரி (அவை – பன்மை, யாவற்றையும் – பன்மை)

ஆ) சொற்றொடர் வகைகளை சரிவர அறிந்தால் தால் தான் பிழையின்றிப் பேசவும் மரபு மாறாமல் எழுதுவதற்கும் பயன்படுகின்றன.

இ) வந்திருப்பவர் அனைவரும் இருக்கையில் அமருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தொடரில் “கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்பது ஆங்கிலத்தின் நேரடி மொழி பெயர்ப்பு.

ஈ)  இதைக் கேட்டுக்கொள்கிறோம் – என்ற தொடரில் எழுதுவதுதான் சிறந்தது. இதேபோன்று, வருகையைத் தரமுடியாது. ஆனாலும் அழைப்பிதழ்களிலும் மேடை நாகரிகம் கருதி “வருகை தர வேண்டுகிறோம்” என்று எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். நம்மொழி மரபைப் பேணவில்லை. மொழி நடை முறையைப் பின்பற்றுகிறோம்.

மொழியை ஆள்வோம்

1. படித்துச் சுவைக்க :

விறகுநான்; வண்டமிழே! உன்னருள் வாய்த்த

பிறகுநான் வீணையாய்ப் போனேன்;

சிறகுநான் சின்னதாய்க் கொண்டதொரு சிற்றீசல்; செந்தமிழே!

நின்னால் விமானமானேன் நான்!

தருவாய் நிழல்தான் தருவாய்; நிதம்என்

வருவாய் எனநீ வருவாய்; – ஒருவாய்

உணவாய் உளதமிழே! ஒர்ந்தேன்; நீ பாட்டுக்

கணவாய் வழிவரும் காற்று! – கவிஞர் வாலி

Question 2.

மொழி பெயர்க்க :

1. Linguistics – ………………………….

2. Literature – ………………………….

3. Philologist – ………………………….

4. Polyglot – ………………………….

5. Phonologist – ………………………….

6. Phonetics – ………………………….

Answer:

1. Linguistics – மொழியியல்

2. Literature – இலக்கியம்

3. Philologist – மொழி ஆய்வ றிஞர்

4. Polyglot – பன்மொழி அறிஞர்

5. Phonologist – ஒலியியல் ஆய்வ றிஞர்

6. Phonetics – ஒலியியல்

Question 3.

அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில் எழுதுக.

1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ்…………………………. (திகழ்)

2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் ………………………….(கலந்துகொள்)

3. உலகில் மூவாயிரம் மொழிகள்………………………. (பேசு)

4. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா……………………….(செல்)

5. தவறுகளைத்…………………………. (திருத்து)

Answer:

1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் திகழ்கின்றது. (திகழ்)

2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் கலந்து கொள்வாள். (கலந்துகொள்)

3. உலகில் மூவாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. (பேசு)

4. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா சென்றார்கள். (செல்)

5. தவறுகளைத் திருத்தினான். (திருத்து)

4. வடிவம் மாற்றுக.

பின்வரும் பத்தியைப் படித்துப் பார்த்து, அச்செய்தியை உங்கள் பள்ளி அறிவிப்புப் பலகையில் இடம் பெறும் அறிவிப்பாக மாற்றுக.

மருதூர் அரசு மேனிலைப் பள்ளி இருபத்தைந்து ஆண்டுகளாகச் சிறந்த கல்விப்பணியை வழங்கி வருகிறது. இப்பள்ளி, சிறந்த கவிஞராகத் திகழும் இன்சுவை முதலான பன்முகப் படைப்பாளிகளை உருவாக்கிய பெருமை கொண்டது. ஒரு சோற்றுப் பதமாய் மருதூர்ப் பள்ளி மாணவி பூங்குழலி படைத்த ‘உள்ளங்கை உலகம்’ என்ற நூலின் வெளியீட்டு விழா 21 ஜூன் திங்கள், பிற்பகல் 3:00 மணியளவில் நடைபெற உள்ளது. அவ்விழாவில் (கின்னஸ் சாதனை படைத்த) முன்னாள் மாணவர் இன்சுவை நூலை வெளியிட்டு, சிறப்புரை ஆற்றுவார். மருதூர்ப் பள்ளி விழா அரங்கத்தில் நிகழும் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள, அனைவரையும் அழைக்கின்றோம்.

9th Tamil திராவிட மொழிக்குடும்பம் ( Thiravida mozhikudumbam ) Book back Question and answer - New syllabus (Reduced)

Answer:

அறிவிப்பு

நூல் வெளியீட்டு விழா

இடம் : வெள்ளி விழா அரங்கம், அரசு மேனிலைப் பள்ளி, மருதூர்.

நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2049 ஆனிமாதம் 7 ஆம் நாள் (21.06.2018)

முன்னிலை : பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், திருமிகு. மலரவன் அவர்கள்

தலைமை : பள்ளித் தலைமை ஆசிரியர் திருமிகு. முஸ்தபா, M.A., M.Ed., அவர்கள்,

வரவேற்புரை : இலக்கிய மன்றச் செயலர்

சிறப்புரை : கின்னஸ் சாதனை படைத்த முன்னாள் மாணவர் கவிஞர். இன்சுவை

நூல் வெளியீடு : பூங்குழலி படைத்த “உள்ளங்கை உலகம்”

நன்றியுரை : ரா. அன்பரசன், பள்ளி மாணவர் தலைவர்.

     அனைவரும் வருக! அமுதச் சுவை பருக!!

9th Tamil திராவிட மொழிக்குடும்பம் ( Thiravida mozhikudumbam ) Book back Question and answer - New syllabus (Reduced)

Question 5.

தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க.

1. இளமையில் கல்வி ………………………….

2. சித்திரமும் கைப்பழக்கம் ………………………….

3. கல்லாடம் படித்தவரோடு ………………………….

4. கற்றோர்க்குச் சென்ற ………………………….

Answer:

1. இளமையில் கல்வி முதுமையில் இன்பம்

2. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

3. கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே

4. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு


Question 6.

கடிதம் எழுதுக.

உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராம கிருஷ்ணனின், ‘கால் முளைத்த கதைகள்’ என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.

Answer:

விருதுநகர்,

28.03.2018

அன்புள்ள நண்பன் எழிலனுக்கு,

பாலன் எழுதிக் கொள்வது. இங்கு நான், என் குடும்பத்தினர் அனைவரும் நலம், அதுபோல நீயும் உன் குடும்பத்தினர் அனைவரும் இறையருளால் நலமுடன் இருப்பீர்கள்.

உன் பள்ளியில் திருப்புதல் தேர்வு, தேர்வுகளுக்கான பயிற்சி எல்லாம் நிறைவு பெற்றுவிட்டதா?

எழிலன்……. இந்த கடிதத்தின் நோக்கம் என்ன தெரியுமா? என் பிறந்தநாளை கடந்த மாதம் 7.2.18 அன்று கொண்டாடும் போது நீ எனக்கு ஒரு பரிசுப்பொருள் தந்தாய் அல்லவா? சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை ஓய்வாக இருந்தபோது பரிசுப்பொருளைப் பிரித்து வியந்து போனேன்.


எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதிய “கால் முளைத்த கதைகள்” புத்தகம் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

இந்நூலை கற்று நான் அறிந்துகொண்ட கருத்துகள், உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன. இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள் கூழாங்கற்களைப்போல வசீகரமாகியிருக்கின்றன.


சிறுவர்களுக்கான கதைகள், உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினர்கள் சொன்ன கதைகளிலிருந்து தேர்வு செய்து இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கதையும் ஒரு நீதியை எடுத்துக் கூறுவதாய் அமைந்துள்ளது. படித்துப் பேணிப் பாதுகாக்க வேண்டிய அரிய பொக்கிஷமாய் திகழ்கிறது அந்நூல். நன்றி நண்பா! நன்கு படி. சிறப்பாக தேர்வுகள் எழுத வாழ்த்துகள்.

அன்புடன்,

பாலன்.

முகவரி:

அ. எழிலன், த/பெ மதியரசன்,

1/3, கூலமாட வீதி, கோவை.

9th Tamil திராவிட மொழிக்குடும்பம் ( Thiravida mozhikudumbam ) Book back Question and answer - New syllabus (Reduced)

Question 7.

நயம் பாராட்டுக :

விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில்

விண்ணோங்கு பெருமலையில், பள்ளத் தாக்கில்

பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில்

புல்வெளியில், நல்வயலில், விலங்கில் புள்ளில்

தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்

தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே,

அழகு என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள்

அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே! – 

ம.இலெ. தங்கப்பா


Answer:

இலக்கிய நயம் பாராட்டுதல் ஆசிரியர்

முன்னுரை :

ம.இலெ.தங்கப்பா ஓர் இயற்கைக் கவிஞர் பாரதியாரின் ‘குயில்பாட்டு’ போல பாடியிருக்கிறார். பாட்டு என்பது இசையுடன் தொடர்பு கொண்டது. அப்போது தான் பாட்டு உயிர் பெறுகிறது. அத்தகைய உயிர்ப்பை இப்பாடலில் காண முடிகிறது.

திரண்ட கருத்து :

நெடுவானம், கடற்பரப்பு, பெருமலை, பள்ளத்தாக்கு, பொழிகின்ற, புனலருவி அழகில், காட்டில், புல்வெளியில், நல் வயலில், விலங்கில், பறவைகளில் இன்னும் தெரிகின்ற பொருள்களில். எல்லாம் பயின்று எம் நெஞ்சில் தெவிட்டாத நுண்பாட்டே! மக்கள் மனத்திலும் நீ குடியிருக்க வேண்டும். தூய்மை ஊற்றே, அழகு என்னும் பெருமை கொண்ட ஒழுங்கே மக்கள் மனத்தில் நீ குடியிருக்க வேண்டுவேன்.

எதுகை நயம் :

இப்பாடலில் எதுகை நயம் அழகுற அமைந்து விளங்குகிறது எனலாம். அடிதோறும், சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை நயம் ஆகும்.

சீர் எதுகை :

பொழிகின்ற பொழிலில்

புல்வெளியில் நல்வயலில்

மோனை நயம் : அடிதோறும், சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை நயம் ஆகும்.

விரிகின்ற – விண்ணோங்கு

பொழிகின்ற – புனலருவி பொழிலில்

தெரிகின்ற – திகழ்ந்து

தெவிட்டாத – தூய்மை

அழகு – அகத்திலும்

சொல் நயம் :

கவிஞர், நுண்பாட்டு என்ற சொல்லில் ‘நுட்பமான பாட்டு’ என்றே குறிப்பிடுகிறார். பாட்டுக்கு, ‘அழகு என்னும் பேரொழுங்கு’ என்ற அடை கொடுத்துப் பாடுகிறார்.

பொருள் நயம் :

விண்ணோங்கு, புனலருவிப் பொழில், தெவிட்டாத நுண்பாட்டே என்று பொருள் நயம் புலப்படப் பாடுகிறார்.

நிறைவுரை :

இயற்கையை வருணிப்பதில் தலை சிறந்து விளங்கும் ம.இலெ.தங்கப்பாவை அழகியல் கவிஞர்’ என்று கூறினால் அது மிகையாது.

Question 2.

அகராதியில் காண்க.

நயவாமை, கிளத்தல், கேழ்பு, புரிசை,செம்மல்

Answer:

  1. நயவாமை – விரும்பாமை
  2. கிளத்தல் – எழுப்பல், சொல்லுதல், பேசுதல்
  3. கேழ்பு – நன்மை
  4. புரிசை – மதில்

செம்மல் – அரசன், அருகன், தலைமகன், பழம்பூ, புதல்வன், பெருமையிற் சிறந்தோம், உள்ளநிறைவு, நீர், தருக்கு.

9th Tamil திராவிட மொழிக்குடும்பம் ( Thiravida mozhikudumbam ) Book back Question and answer - New syllabus (Reduced)

Question 4.

தா, காண், பெறு, நீந்து, பாடு, கொடு போன்ற வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி மேற்கண்ட கட்டத்தினைப் போன்று காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை அமைத்து எழுதுக.

Answer:

Question 5.

அடைப்புக்குள் உள்ள சொற்களைக் கொண்டு எழுவாய், வினை அடி, வினைக்குப் பொருத்தமான தொடர் அமைக்க. (திடலில், போட்டியில், மழையில், வேகமாக, மண்ணை )

எ.கா: நான் திடலில் ஓடினேன். (தன்வினை)

நான் திடலில் மிதிவண்டியை ஓட்டினேன். (பிறவினை )

Answer:

  1. காவியா – வரை காவியா போட்டியில் வரைந்தாள். (தன்வினை)
  2. காவியா போட்டியில் ஓவியத்தை வரைவித்தாள். (பிறவினை )
  3. கவிதை – நனை கவிதை மழையில் நனைந்தேன். (தன்வினை)
  4. இரகு கவிதை மழையில் நனைவித்தான். (பிறவினை )
  5. இலை – அசை இலை வேகமாக அசைந்தது. (தன்வினை)
  6. காற்று இலையை வேகமாக அசைவித்தது. (பிறவினை )
  7. மழை – சேர் மழை மண்ணை சேர்ந்தது. (தன்வினை)
  8. மழைநீரை மண்ணில் சேர்த்தான். (பிறவினை )

கலைச்சொல் அறிவோம்

  1. உருபன் – Morpheme
  2. ஒலியன் – Phoneme
  3. ஒப்பிலக்கணம் – Comparative Grammar
  4. பேரகராதி – Lexicon

பாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.

செய்வினையை, செயப்பாட்டுவினையாக மாற்றும் துணை வினைகள் இரண்டினை சான்றுடன் எழுதுக.

Answer:

செய்வினையை, செயப்பாட்டு வினையாக மாற்ற பயன்படும் துணை வினைகள் படு, பெறு ஆகும்.

Question 2.

வீணையோடு வந்தாள், கிளியே பேசு தொடர் வகையைச் சுட்டுக.

Answer:

வீணையோடு வந்தாள் – செய்தித் தொடர்; கிளியே பேசு – கட்டளைத் தொடர்

சிறுவினா

Question 1.

தன்வினை, பிறவினை, காரணவினைகளை எடுத்துக்காட்டுடன் வேறுபடுத்திக் காட்டுக.

Answer:

தன்வினை : வினையின் பயன் எழுவாயைச் சேருமாயின் அது தன்வினை எனப்படும். எ.கா: பந்து உருண்டது.

பிறவினை :

வினையின் பயன் எழுவாயை இல்லாமல் அடையாக வருவது பிறவினை எனப்படும். எ.கா. பந்தை உருட்டினான்

காரணவினை :

எழுவாய் தானே வினையை நிகழ்த்தாமல் வினை நிகழ்வதற்குக் காரணமாக இருப்பது காரணவினை

எ.கா. பந்தை உருட்ட வைத்தான்.


கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.

‘நான் வந்தேன்’ இதில் வரும் பயனிலை…………………

அ) பெயர்ப் பயனிலை

ஆ) வினைப் பயனிலை

இ) உரிப் பயனிலை

ஈ) வினா பயனிலை

Answer:

ஆ) வினைப் பயனிலை

Question 2.

‘சொன்னவள் கலா’ இதில் வரும் பயனிலை ………..

அ) வினைப் பயனிலை

ஆ) வினாப் பயனிலை

இ) இடைப் பயனிலை

ஈ) பெயர்ப் பயனிலை

Answer:

ஈ) பெயர்ப் பயனிலை

9th Tamil திராவிட மொழிக்குடும்பம் ( Thiravida mozhikudumbam ) Book back Question and answer - New syllabus (Reduced)

Question 3.

‘அவன் திருந்தினான்’ எவ்வகைத் தொடர்?

அ) செவினைத் தொடர்

ஆ) வினாத்தொடர்

இ) தன்வினைத் தொடர்

ஈ) பிறவினைத் தொடர்

Answer:

இ) தன்வினைத் தொடர்

Question 4.

ஒரு சொற்றொடரில் அமையும் வினைச்சொல் ………… ஆகும்.

விடை: பயனிலை

Question 5.

எழுவாய் ஒரு வினையைச் செய்ய அடிப்படையாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளே …………. ஆகும்.

Answer:

செயப்படுபொருள்

பகுபத உறுப்பிலக்கணம்

பதம் (சொல்) இரு வகைப்படும். அவை பகுபதம், பகாப்பதம் ஆகும்.

பிரிக்கக்கூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல் பகுபதம் எனப்படும்.

  • இது பெயர்ப் பகுபதம், வினைப் பகுபதம் என இரண்டு வகைப்படும்.


பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.

எழுத்துப்பேறு

பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு ஆகும்.

பெரும்பாலும் ‘த்’ மட்டுமே வரும்.

சாரியை வரும் இடத்தில் ‘த்’ வந்தால் அது எழுத்துப்பேறு. எ.கா:

1. வந்தனன் – வா(வ)+த்(ந்)+த்+அன்+அன்

வா – பகுதி (‘வ’ ஆனது விகாரம்)

த்(ந்) – சந்தி (‘ந்’ ஆனது விகாரம்)

த் – இறந்தகால இடைநிலை

அன் – சாரியை

அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

2. செய்யாதே – செய்+ய்+ஆ+த்+ஏ

செய் – பகுதி

ய் – சந்தி

ஆ – எதிர்மறை இடைநிலை

த் – எழுத்துப்பேறு

ஏ – முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று விகுதி

9th Tamil திராவிட மொழிக்குடும்பம் ( Thiravida mozhikudumbam ) Book back Question and answer - New syllabus (Reduced)

Important இலக்கணக் குறிப்புகள்

1. பெயரெச்சம் :

  • வினை முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் எச்சம் பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிவது. பெயரெச்சம் (எ.கா) படித்த மாணவன், படித்த ………… (அ) நடந்த (த் + அ) அ என்ற விகுதியுடன் முடியும்.

2. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் :

  • ஓர் எதிர்மறைப் பெயரெச்சத்தின் கடைசியில் ‘த’ கெட்டு விடுவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். இது ‘ஆ’ என்ற ஒசையுடன் முடியும்.

(அணையாத விளக்கு) (அணையா விளக்கு) அணையா …………… (ஆ) (யா = யா + ஆ)

3. வினையெச்சம் :

  • வினை முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் ஒரு எச்சம் வினைச்சொல்லக் கொண்டு முடிவது. வினையெச்சம். இது “உ” “இ” விகுதிகளுடன் முடியும்.

படித்து முடித்தான் படித்து …………. (ஊ) நடந்து ……………. கூறி (த் + உ)

4. வியங்கோள் வினைமுற்று :

  • வாழ்த்துதல், வைதல், வேண்டல் பொருளில் வருவது. காலம் காட்டாது. இது க, இய, இயர் – என்ற விகுதிகளுடன் முடியும்

(எ.கா) செல்க, வாழ்க, வாழி, வாழிய, வாழியர்.

5. வினையாலணையும் பெயர் :

  • ஒரு வினைமுற்று வினையைக் குறிக்காமல் வினையைச் செய்த கருத்தாவைக் குறிக்கும் பெயராய் வருவது வினையாலணையும் பெயர். எழுதினான் – எழுதியவன் என வரும். அது அன், ஆன், அர், ஆர், ஒர், நர் ஆகிய ஓசைகளுடன் முடியும்

(எ.கா) இழந்தவன், சென்றனர், அனுப்புநர்.

6. சொல்லிசை அளபெடை :

  • மூன்று மாத்திரை அளவில் வினையெச்சப் பொருளில் வரும் அளபெடை இது ‘இ’ என்று எழுத்துடன் முடியும்.

(எ.கா) ஓரீஇ, நம்பெழீஇ, உரனசை இ.

7. இன்னிசை அளபெடை :

  • மூன்று மாத்திரை அளவில் மூன்று அசைச் சொற்களில் அமைவது இன்னிசை அளபெடை

(எ.கா) உண்பதூம் (உண்/பதூ/உம்) உடுப்பதூஉம்.

8. செய்யுளிசை அளபெடை :

  • மூன்று மாத்திரை அளவில் இரண்டு அசை சொற்களில் அமைவது செய்யுளிசை அளபெடை (எ.கா) ஆஅதும், கழுஉமணி, படாஅபறை, தொழா அர்.

9. அடுக்குத் தொடர் :

  • அர்த்தமுள்ள சொற்கள் பலமுறை அடுக்கி வருவது

(எ.கா) எண்ண எண்ண , பலப்பல, தீ தீ தீ

9th Tamil திராவிட மொழிக்குடும்பம் ( Thiravida mozhikudumbam ) Book back Question and answer - New syllabus (Reduced)

10. இரட்டைக் கிளவி :

  • அர்த்தமுள்ள சொற்கள் வினையைச் சிறப்பிக்க இரட்டையாக மட்டும் அமைவது.

(எ.கா) மடமட, சலசல.

11. ஒரு பொருட் பன்மொழி :

  • ஒரே பொருள் தரும் இரண்டு சொற்களுடன் அமைவது ஒரு பொருட் பன்மொழி. (எ.கா) தீயழல், நடுமையம், ஒரு தனி.

12. பண்புத் தொகை :

  • இணைந்த தொகைச் சொல்லை விரித்தால் இடையில் மை மறைந்திருப்பது.

(எ.கா) சிற்றில் (சிறுமை + இல்) பைந்தமிழ் = (பழமை + தமிழ்), செங்கோல் = (செம்மை + கோல்).

13. வினைத் தொகை :

  • இணைந்த தொகைச் சொல்லை விரித்தால் இடையில் காலம் காட்டும் இடைநிலை கின்ற மறைந்திருப்பது.

(எ.கா) தொடுகடல் (தொடுகின்ற கடல்)

14. உவமைத் தொகை :

  • இணைந்த தொகைச் சொல்லை விரித்தால் இடையில் போன்ற’ அல்லது ‘போல’ உவம உருபு மறைந்திருப்பது.

(எ.கா) பவளவாய் (பவளம் போன்ற வாய்)

15. வேற்றுமைத் தொகை :

  • இணைந்த தொகைச் சொல்லை விரித்தால் இடையில் வேற்றுமை உருபுகளில் (ஐ, ஆல், இன், கு, அது, கண்) ஏதேனும் ஒன்று மறைந்திருப்பது.

(எ.கா) கூலி வேலை (கூலிக்கு வேலை).

16. உம்மைத் தொகை :

  • இணைந்த தொகைச் சொல்லை விரித்தால் இடையில் “உம்” மறைந்திருப்பது (எ.கா) செடி கொடிகள் (செடிகளும், கொடிகளும் என்பதில் உம் மறைந்தது).

17. எண்ணும்மை :

  • உம்மைத் தொகையைப் போல் உம் மறையாமல் எண்ணிக்கை காண்பதற்காக வெளிப்படையாக இருப்பது எண்ணும்மை

(எ.கா) கற்பும் காதலும் (உம் – வெளிப்படை)

18. அன்மொழித் தொகை :

  • ஆகுபெயர் போல் ஒரு தொகைச் சொல் வேறு அல்லாத ஒன்றைக் குறிப்பது அன்மொழித் தொகை (எ.கா) செந்தாமரை (பண்புத் தொகை) செந்தாமரை வந்தாள் (அன்மொழித் தொகை)

19. உருவகம் : 

  • உம்மைத் தொகையை முன் பின்னாக மாற்றுவது உருவகம். இது, உவமையைப் பொருள் மேல் ஏற்று இடையில் ஆகிய என்ற சொல் மறைந்து வரும்.

(எ.கா) மதிமுகம் (மதி போன்ற முகம் – உவமைத் தொகை) முகமதி (முகமாகிய மதி உருவகம்)

20. தன்மை பன்மை வினைமுற்று :

  • அம் ஓம் என்ற விகுதிகளுடன் முடிவது (எ.கா) போற்றுதும்.

21. செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்று :

  • செய்யும் என்ற சொல்லைப் போன்றே தொனிப்பது

(எ.கா) படும்.

22. செயின் என்னும் வாய்ப்பாடு வினைமுற்று :

  • செயின் என்ற சொல்லைப் போன்றே தொளிப்பது.

(எ.கா) பெறின்.

23. ஆகுபெயர் :

  • ஒன்றின் இயற்பெயர் மற்றொன்றுக்கு ஆகி வருவது.

(எ.கா) உலகு (உலக மக்களைக் குறிக்கும்) ஊர் சிரித்தது.

9th Tamil திராவிட மொழிக்குடும்பம் ( Thiravida mozhikudumbam ) Book back Question and answer - New syllabus (Reduced)

24. தொழிற்பெயர் :

  • ஒரு தொழிலைக் குறிக்கும் பெயர், காலம் காட்டாது. இது தல், அல், கை, மை, ஐ, சி, பு என்ற விகுதிகளுடன் அமையும்.

(எ.கா) பாடுதல், பாடல், ஆட்டம், வீற்றிருக்கை, கொல்லாமை, எஞ்சாமை.

25. முதல் நிலை திரிந்த தொழிற்பெயர் :

  • ஒரு தொழிற்பெயரின் விகுதி கெட்டு, முதல் எழுத்தும் மாறி ஒலிப்பது (எ.கா) கெடுதல்.

கெடுதல் – கெடு – கேடு

பெறுதல் – பெறு – பேறு

26. இலக்கணப் போலி :

  • ஓர் இலக்கண அமைப்புடைய சொல்லுக்கு போலியாக அமைவது (எ.கா) தசை (சதை)

27. எழுத்துப் போலி :

  • ஒரு சொல்லில் எழுத்து மாறினாலும் பொருள் மாறாது. இது முதல், இடை, கடைசியில் அமையும். முற்றிலும் மாறுபட்டு அமையும்.

(எ.கா) நலன் (நலம்) கடைப்போலி, அஞ்சு (ஐந்து) முற்றுப்போலி

28. உரிச் சொல் தொடர் :

  • தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாத, சால, உறு, தவ, நனி, கூர், கழி, வான், மா, தட, வை, மழு, கடி போன்ற சொற்கள் வேறு ஒரு சொல்லுடன் உரிமை பெற்றுத் தொடர்ந்து வருவது இது அதன் பண்பை விளக்கும்.

(எ.கா) மாநாடு, உறுபசி, சாலப் பேசினான்.

29. மருஉச் சொல் :

  • காலப்போக்கில் மருவி மாறி வருபவை (எ.கா) எந்தை (என் தந்தை ) பேர் (பெயர்)

30. இடைக்குறை விகாரம் :

  • ஒரு சொல்லின் இடையில் ஓர் எழுத்து குறைந்து மாறுபட்டாலும் அதே பொருளைத் தருவது (எ.கா) உளம் (உள்ளம்) கணீர் (கண்ணீ ர்),
9th Tamil திராவிட மொழிக்குடும்பம் ( Thiravida mozhikudumbam ) Book back Question and answer - New syllabus (Reduced)

31. இரு பெயரொட்டுப் பண்புத் தொகை :

  • இரு சொற்களில் முதல் சொல் சிறப்புப் பெயராகவும் அடுத்துள்ள சொல் பொதுப் பெயராகவும் இருப்பது.

(எ.கா) தமிழ்மொழி, இமயமலை.

32. தன்மை ஒருமை வினைமுற்று :

  • என், ஏன் என்ற விகுதிகளுடன் முடிவது. (எ.கா) கொள்வேன்.

33. முற்றெச்சம் :

  • ஒரு வினைமுற்றுச் சொல் வினையெச்சப் பொருளில் வந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடியும். (எ.கா) படித்தனன் தேறினான்.

Share:

0 Comments:

Post a Comment