அட்டவணையை, பள்ளி கல்வித் துறை தயார் செய்துள்ளது. முதல்வர் ஒப்புதலை பெற்று, அட்டவணையை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால், பள்ளிகளில் ஒன்பது முதல், பிளஸ் ௨ வரையிலான மாணவர்களுக்கு, வகுப்புகள் துவங்கியுள்ளன.பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, ஆறு நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடங்கள் முடிக்கப் படு கின்றன. செய்முறை வகுப்புகளும், வாரத்தில் இரண்டு நாட்கள் நடத்தப்படுகின்றன.
இதையடுத்து, பொதுத்தேர்வை நடத்துவதற்கான கால அட்டவணையை, அரசு தேர்வுத்துறை தயாரித்துள்ளது. மே முதல் ஜூன் வரை, பல்வேறு தேதிகளை குறிப்பிட்டு, பொது தேர்வுக்கான அட்டவணையை பள்ளி கல்வி அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.தேர்தல் பணிகள் பாதிக்காத வகையில், இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அலுவலகம், தேர்தல் கமிஷன் ஒப்புதல் பெற்ற பின், அட்டவணை வெளியிடப்படும் என, பள்ளி கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
0 Comments:
Post a Comment