Tamilnadu New syllabus Samacheer Kalvi 12th History Guide unit 1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி
Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi "12th History Guide Pdf Download" Chapter 1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி Text Book Back Questions and Answers, Notes.
Tamilnadu Samacheer Kalvi 12th History Book back Answers Chapter 1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி
"12th History Guide இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி Text Book Questions and Answers"
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?
அ) 1915
ஆ) 1916
இ) 1917
ஈ) 1918
Answer: அ) 1915
Question 2.
இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? (மார்ச் 2020 )
அ) 1825
ஆ) 1835
இ) 1845
ஈ) 1855
Answer: ஆ) 1835
Question 3.
மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.
அ) வில்லியம் ஜோன்ஸ்
ஆ) சார்லஸ் வில்கின்ஸ்
இ) மாக்ஸ் முல்லர்
ஈ) அரவிந்த கோஷ்
Answer: ஈ) அரவிந்த கோஷ்
Question 4.
“சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்” – எனக் கூறியவர்.
அ) பாலகங்காதர திலகர்
ஆ) தாதாபாய் நௌரோஜி
இ) சுபாஷ் சந்திர போஸ்
ஈ) பாரதியார்
Answer: அ) பாலகங்காதர திலகர்
Question 5.
பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
அ) பாலகங்காதர திலகர் – 1 இந்தியாவின் குரல்
ஆ) தாதாபாய் நௌரோஜி – 2. மெட்ராஸ் டைம்ஸ்
இ) மெக்காலே – 3. கேசரி
ஈ) வில்லியம் டிக்பை – 4 இந்தியக் கல்விக் குறித்த குறிப்புகள்
அ) 2, 4, 1, 3
ஆ) 3, 1, 4, 2
இ) 1, 3, 2, 4
ஈ) 4, 2, 3,1
Answer: ஆ) 3, 1, 4, 2
Question 6.
பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?
அ) ஆங்கிலக் கல்விச் சட்டம் – 1843
ஆ) அடிமைமுறை ஒழிப்பு – 1859
இ) சென்னைவாசிகள் சங்கம் – 1852
ஈ) இண்டிகோ கலகம் – 1835
Answer:இ) சென்னைவாசிகள் சங்கம் – 1852
Question 7.
பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான கால வரிசையைத் தேர்வு செய்க.
(i) கிழக்கிந்தியக் கழகம்
(ii) மெட்ராஸ் மகாஜன சங்கம்
(iii) சென்னைவாசிகள் சங்கம்
(iv) இந்தியச் சங்கம்
அ) ii, i, iii, iv
ஆ) ii, iii, i, iv
இ) iii, iv, i, ii
ஈ) iii, iv, ii, i
Answer:
இ) iii, iv,i,ii
Question 8.
இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர் –
அ) சுபாஷ் சந்திர போஸ்
ஆ) காந்தியடிகள்
இ) A.O.ஹியூம்
ஈ) பாலகங்காதர திலகர்
Answer:
இ) A.O.ஹியூம்
Question 9.
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் (மார்ச் 2020 )
அ) சுரேந்திரநாத் பானர்ஜி
ஆ) பத்ருதீன் தியாப்ஜி
இ) A.O.ஹியூம்
ஈ) W.C.பானர்ஜி
Answer:
ஈ) W.C.பானர்ஜி
Question 10.
“இந்தியாவின் முதுபெரும் மனிதர் ” என அழைக்கப்படுபவர்
அ) பாலகங்காதர திலகர்
ஆ) M.K.காந்தி
இ) தாதாபாய் நௌரோஜி
ஈ) சுபாஷ் சந்திர போஸ்
Answer:
இ) தாதாபாய் நௌரோஜி
Question 11.
“வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும் ” (Povertyand Un-British Rule in India) என்ற நூலை எழுதியவர்
அ) பால கங்காதர திலகர்
ஆ) கோபால கிருஷ்ண கோகலே
இ) தாதாபாய் நௌரோஜி
ஈ) எம்.ஜி.ரானடே
Answer:
இ) தாதாபாய் நௌரோஜி
Question 12.
கூற்று : ஆங்கில அரசாங்கம் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றியது. –
காரணம்: இங்கிலாந்தின் தடையற்ற வணிகக் கொள்கையினால் இந்தியா நன்மையைப் பெற்றது.
அ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
இ) கூற்று சரி; காரணம் தவறு
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு
Answer:
இ) கூற்று சரி; காரணம் தவறு
Question 13.
ஒரிசா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுக்களில் சரியானவை எவை/எது?
கூற்று 1: 1866 ஆம் ஆண்டில் ஒன்றரை மில்லியன் மக்கள் ஓரிசாவில் பட்டினியால் இறந்தனர்.
கூற்று 2: பஞ்ச காலத்தில் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு ஆங்கில அரசு ஏற்றுமதி செய்தது.
கூற்று 3: ஓரிசா பஞ்சமானது தாதாபாய் நௌரோஜியை இந்திய வறுமை குறித்து வாழ்நாள் ஆய்வை மேற்கொள்ள தூண்டியது.
அ) 1, 2
ஆ) 1, 3
இ) இவற்றுள் எதுவுமில்லை
ஈ) இவை அனைத்தும்
Answer:
ஈ) இவை அனைத்தும்
Question 14.
கூற்று : தாதாபாய் நௌரோஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
காரணம் : 1905 ஆம் ஆண்டு வரையில் இந்திய விடுதலை இயக்கம் அரசமைப்;பஸவாதிகளின் கட்டுபாட்டிலிருந்தது.
அ) கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
Answer:
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
II. சுருக்கமான விடையளிக்கவும்
Question 1.
தேசியம் என்றால் என்ன?
Answer:
- தேசியம் என்பது ஒரு நாட்டிற்கு விசுவாசமாகவும், பக்தியோடும் இருத்தல் எனப்பொருள்.
- தனது நாட்டை ஏனைய நாடுகளைக் காட்டிலும் உயர்வான இடத்தில் வைத்து பார்ப்பது அல்லது ஏனைய நாடுகளுக்கு போட்டியாக தனது நாட்டின் பண்பாடு மற்றும் விருப்பங்களின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தும் ஒரு தேசிய உணர்வு ஆகும்.
Question 2.
புதிய நிலவுடைமை உரிமைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை எழுதுக?
Answer:
- இந்தியாவின் மரபு சார்ந்த நிலவுடைமை முறையை ஆங்கிலேயர் சிதைத்தனர்.நிலத்தை விற்பனை பொருளாக்குவது, இந்தியாவில் வேளாண்மையை வணிகமயமாக்குவது ஆகியவற்றால் விவசாயிகளின் வாழ்க்கை நிலையில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.ஒரு புதுவகையான நிலபிரபுக்கள் வர்க்கம் உருவானது.விவசாயிகளிடையே மன நிறைவின்மையை ஏற்படுத்தி அமைதி இழந்தவர்களாகவும், கட்டுப்பாடுகளை மீறுபவர்களாகவும் ஆக்கியது.
Question 3.
” அவுரி கலகம்” குறித்து குறிப்பு வரைக.
Answer:
- 1859-60ல் நடைபெற்ற இண்டிகோ புரட்சியே அவுரி புரட்சியாகும்.
- ஐரோப்பியர்களுக்குச் சொந்தமான நிலங்களில் இந்திய குத்தகை விவசாயிகள் அவுரியை பயிரிட கட்டாயப்படுத்தப்பட்டனர்.
- சிறிய தொகையை முன்பணமாக பெற்றுக் கொண்டு, சாதகமற்ற ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்ள விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
- அவரிபண்ணையார் விவசாயிகளுக்கு சந்தை விலையை விட குறைவாக கொடுத்தனர். இது நிலங்களுக்கான வரி பாக்கியை கூட விவசாயிகளால் செலுத்த முடியவில்லை .
- ஆட்சியாளர்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்வார்கள் என பலமுறை மனுக்கள் எழுதுவதன் மூலம் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
- அமைதியான முறையில் போராடி பயனற்று போனதால் முன் பணம் பெறவும், புது ஒப்பந்தக் போடவும் மறுத்து கலகத்தில் இறங்கினர்.
- இப்புரட்சியின் மூலம் விவசாயிகள் பண்ணையார்களை வடக்கு வங்காளத்திலிருந்து விரட்டினர்
Question 4.
இல்பர்ட் மசோதாவின் முக்கியத்துவத்தை விவாதி?
Answer:
- 1833ல் இல்பர்ட் மசோதாவிற்கு ஆதரவாக 1883ல் கிளர்ச்சிகள் நடைபெற்றன.
- போராட்டங்களும் கிளர்ச்சிகளும்ஒருங்கிணைக்கப்படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே நடைபெற்றன.தேசிய அளவிலான ஒரு அரசியல் சார் அமைப்பு உருவாக்கப்படாத நிலையில் ஆட்சியாளர் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என கிளர்ச்சியாளர்கள் உணர்ந்தனர்.இந்த உணர்வில் இருந்து உதித்ததே இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியா ஒரே நாடு என்னும் கருத்து இவ்மைப்பின் பெயரில் உதித்தது.
Question 5.
நவீன கல்வியில் சமயப்பரப்புக் குழுக்களின் பங்கினை விளக்குக?
Answer:
- இந்திய மக்களிடையே நவீனக் கல்வியைக் கற்றுக் கொடுக்க கிறித்துவ சமய பரப்பு நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டது.
- நவீன மதமாற்ற கல்வியின் மூலமாக கிறித்துவத்தை போதிப்பது என்பதை சமய பரப்புக்குழுக்கள் கையாண்டன.
- மரபு சார்ந்த கல்வி முறையில், கல்வி கற்பதற்கான உரிமைகள் மறுக்கப்பட்ட அடித்தட்டு மக்களும் விளிம்பு நிலை மக்களும் கல்வி பெறுவதற்கான வாய்ப்பை இவை வழங்கின.
Question 6.
ஆங்கிலப் பாராளுமன்றத்திற்குச் சென்னைவாசிகள் சங்கத்தினர் அளித்த கோரிக்கைகள் என்ன?
Answer:
- 1852 பிப்ரவரி 26ல் சென்னைவாசிகள் சங்கம்’ என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
- இவ்வமைப்பு தனது குறைகளை இங்கிலாந்து பாராளுமன்றத்தின் முன் வைத்தது.
- 1852 டிசம்பரில் சமர்ப்பித்த மனுவில் ரயத்துவரி, ஜமீன்தாரி முறைகள் வேளாண் வர்க்கத்தினரை கடும் துன்பங்களுக்கு உள்ளாக்கியதை சுட்டிக் காட்டியது.
- பண்டைய கிராமமுறையை மீட்டெடுக்கப்பட வேண்டும் என வற்புறுத்தியது.
- வட்டார மொழிகளில் திறமையின்மையினால் நீதிபதிகளின் தாமத செயல்பாடு பற்றியும், நீதித்துறையின் – திறமை பாதிக்கப்படுவதையும் சுட்டிக் காட்டியது.
Question 7.
இந்திய தேசிய காங்கிரசுக்கு முன்னர் தொடங்கப்பட்ட அமைப்புகளின் பட்டியலைத் தயார் செய்க.
Answer:
- 1852 பிப்ரவரி 26 – சென்னைவாசிகள் சங்கம்
- சென்னை மகாஜன சங்கம் – 1884
- இந்திய சீர்திருத்த கழகம்
- கிழக்கிந்தியக் கழகம் – 1866
- லண்டனில் இந்திய சங்கம்’ – 1865
ஆகிய அமைப்புகள் இந்திய தேசிய காங்கிரசுக்கு முன்னர் தொடங்கப்பட்டவைகளாகும்.
Question 6.
தொடக்க காலத்தில் இலங்கைக்குத் தொழிலாளர்களை அனுப்பிவைக்கப்பட்டது குறித்து எழுதுக.
Answer:
- ஆங்கிலேயப் பேரரசின் காலனி நாடான இலங்கையில் காபி, தேயிலை, கரும்பு ஆகிய தோட்டப்பகுதிக்கு பணியாளர்கள் தேவைப்பட்டனர்.
- 1815ல் சிலோன் ஆளுநர் சென்னை மாகான ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் பெருந்தோட்டங்களில் வேலைசெய்யக் கூலிகளை” அனுப்பிவைக்கக் கேட்டுக்கொண்டார்.
- ஒப்பந்த கூலித் தொழிலாளர் முறையின் கீழ் இலங்கையின் காபி, தேயிலை தோட்டங்களில் இந்தியர்கள் கூலிகளாக வேலை செய்யச் சென்றனர்.
- 1843ல் பிரிட்டிஷ் இந்தியாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதால் பேரரசின் காலணிகளுக்கு குடிபெயரும் செயல்பாடுகள் ஊக்கம் பெற்றனர்.
- 1873ல் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கூலித் தொழிலாளியாக சென்றவர்கள் 10,000 பேர். 1846ல் 80,000 பேர், 1855ல் 1,28,000 பேர், 1877ல் 3,80,000 பேர், இலங்கையில் கூலித் தொழிலாளர்களாக அமர்த்தப்பட்டனர்.
Question 7.
இந்திய நிர்வாகச் செலவின விவரங்களைக் கூறுக.
Answer:
- எந்த நாடாக இருந்தாலும் வசூலிக்கப்பட்ட வரியை அந்நாட்டு மக்களின் நல்வாழ்விற்காகவே செலவழிக்கவேண்டும். ஆனால் பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேயர் வசூலிக்கும் வரி இங்கிலாந்தின் நலனுக்காகச் செலவு செய்யப்பட்டது.
- 1835 முதல் 1872 முடிய ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 13 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடையப் பொருட்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் ஆனால் அந்த அளவிற்கானப் பணம் இந்தியா வந்து சேரவில்லை.
- லண்டனில் வாழும் கம்பெனியின் பங்குதாரர்களுக்கு லாபத்தில் வழங்கப்பட வேண்டிய பங்கு, இருப்புப்பாதைத் துறையில் (Railways) முதலீடு செய்தவர்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டவாறு தரப்பட வேண்டிய வட்டி, பணி நிறைவு பெற்றுவிட்ட அதிகாரிகளுக்கும் தளபதிகளுக்கும் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியிலும் நாடுகளைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்டப் போர்களுக்காக இங்கிலாந்திடமிருந்து பெற்ற கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி ஆகிய இவையனைத்துக்கும் பதிலாகவே அப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.
- இவையனைத்தும் தாயகக் கட்டணம் (Home Charges) எனும் பெயரில் ஆண்டொன்றுக்கு 30 மில்லியன் பவுண்டுகள் நஷ்டம் ஏற்படுத்துவதாக நௌரோஜி உறுதிபடக் கூறினார்.
IV. விரிவான விடையளிக்கவும்
Question 1.
இந்திய நடுத்தர வர்க்கத்தில் மேற்கத்தியக் கல்வியின் தாக்கத்தையும், பின்னர் அது இந்திய சமூகத்தைச் சீர்திருத்தவும் மற்றும் மீட்டுருவாக்கம் செய்திட ஆற்றிய பங்கினை விவாதிக்கவும்.
Answer:
- மேற்கத்திய கல்வியின் வளர்ச்சி ஒரு நவீன இந்திய கற்றறிந்தோம் பிரிவை உருவாக்கியது.
- இந்த நவீன சமூக வர்க்கம் “இந்தியாவின் வணிக வர்த்தக சமூகங்கள், நிலபிரபுக்கள், பேவாதேவி செய்யவும்,ஆங்கிலம் பயின்ற ஏகாதிபத்திய அரசில் நிர்வாகப்பிரிவில் பணிஅமர்த்தப்பட்டோர், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரை உள்ளடக்கியதால் இருந்தது.
- ஆரம்பகாலத்தில் இவர்கள் ஆங்கிலேய நிர்வாகத்தோடு இனக்கமான அணுகுமுறையை கொண்டிருந்தனர்.
- மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்ப்பதில் சிறப்பாக பங்காற்றினர்.
- நவீன இந்திய கற்றறிந்தோம் பிரிவைச்சார்ந்த ராஜாராம் மோகன்ராய். ஈஸ்வரசந்திர வித்யாசாகர் சுவாமி விவேகானந்தர், அரவிந்தகோஷ், கோபாலகிருஷ்ண கோகலே. பிபிபாய் நௌரோஜி, பெரோஷா மேத்தா, சுரேந்திரநாத்பானர்ஜி ஆகியோரும் மற்றோரும் இந்திய அரசியல். சமுதாய மத இயக்கங்களுக்கு தலைமையேற்றனர்.
- மேலைநாட்டு அறிஞர்களான ஜான்லாக், ஜேம்ஸ் ஸ்டுவர்ட்மில், மாஜினி, கரிபால்டி, ரூசோ, தாமஸ்பெயின், மார்க்ஸ் ஆகியோராளும் மற்றவர்களாலும் கூறப்பட்ட தேசியம், மக்களாட்சி, சோசலிசம் போன்ற தத்துவக் கருத்துக்களைக் கற்றறிந்த இந்தியர்கள் அறிந்து கொண்டனர்.
- சுதந்திரமான பத்திரிகை உரிமை, பொதுக்கூட்டங்களில் சுதந்திரமாய் பேசும் உரிமை, சுதந்திரமாக ஒன்று கூடும் உரிமை ஆகிய இயக்கையான உரிமைகளை கற்றறிந்த இந்தியரின் ஐரோப்பியக் கூட்டாளிகள் தங்கள் நெஞ்சுக்கு நெருக்கமாக வைத்து கடைபிடிக்கவிரும்பினர்.அதற்கு பல அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
- இச்செயல் போக்குவரத்து வசதியின் மிகப்பெரும் விரிவாக்கம்.
- இந்தியாமுழுவதும் நிறுவப்பட்ட அஞ்சல், தந்தி சேவைகள் ஆகியன இதுபோன்ற விவசாயங்களை சாத்தியமாக்கின.
Question 2.
பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வு தோன்ற காரணமான சமூகப் பொருளாதார காரணிகளை ஆய்க.
Answer:
சமூகம்:
- அரசியல் செயல்பாடுகளில் மக்களை ஈடுபடுத்தும் முன்னர் சமூகத்தை சீர்திருத்த வேண்டியதை ஆங்கிலக் கல்வியை கற்றறிந்தோம் உணர்ந்தனர்.
- 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த சீர்திருத்தவாதிகள் மூலம் தூண்டப்பட்ட சிந்தனையின் விளைவே இந்திய – தேசிய உணர்வு உதயமானது.
- காலப்போக்கில் அரசியல் தன்மை கொண்ட அமைப்புகளும் கழகங்களும் பிரிட்டிஷ் இந்தியாவின் பல 1 பகுதிகளில் தோன்றி மக்களின் குறைகளைப் பேசத் தொடங்கினர்.
பொருதாதாரக் காரணங்கள்:
- ஆங்கிலேயர் இந்தியாவிலிருந்து கச்சாப் பொருள்களை மிகக்குறைந்த விலையில் பெற்றனர் இவை செய்பொருளாக மாற்றப்பட்டு இந்தியாவில் மீண்டும் அதிக விலைக்கு விற்கப்பட்டன
- இறக்குமதி பொருள்களுக்கு சுங்கவரி விதிக்கப்படவில்லை. ஆனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருளுக்கு அதிக சுங்கவரி விதிக்கப்பட்டது.
- இந்தியாவில் ஆங்கிலேயர் பின்பற்றிய நிலவரித்திட்டம் இந்திய விவசாயிகளை பெரிதும் பாதித்தது.
- புதிய நிலவுடமை உரிமைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆங்கில அரசு கட்டுபாடுகளற்ற சுதந்திர வணிகத்தை பின்பற்றியது.
- இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்குத் தேவையான தொழிற்சாலை பயிர்களான அவரி மற்றும் ஏனைய பயிர்களை உற்பத்தி செய்ய விவசாயிகள் வற்புறுத்தப்பட்டனர். இதன் விளைவாக இந்தியர்களிடையே பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.இது பிரிட்டிஷ் இந்திய பகுதியில் தேசிய உணர்வை ஏற்படுத்தியது.
Question 3.
இந்தியாவில் தேசிய விழிப்புணர்வுக்குப் பிரிட்டிஷாரின் அடக்குமுறை மற்றும் இனவெறிக் கொள்கைகள், எந்த அளவிற்குக் காரணமாக இருந்தன? (மார்ச் 2020 )
Answer:
அ) இந்தியர்களுக்கு எதிரான அடக்குமுறை:
- அரசுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டும் முயற்சிகளை மேற்கொள்வோரை தண்டனைக்குள்ளாக்கும் இந்திய தண்டனைச் சட்டம் (1870) பிரிவு 124A அடக்கு முறைச் சட்டம் பத்திரிகைகளைத் தணிக்கைக்கு உட்படுத்திய பிராந்திய மொழிச் சட்டம் (1878) ஆகியன எதிர்ப்புகளைத் தூண்டின.
- இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தியிழைத் துணிகளின் மீதான சுங்கவரி குறைக்க பட்டதும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பருத்தியிழைத் துணிகள் மீதான உள்நாட்டுத் தீர்வை உயர்த்தப்பட்டதும் நாடுமுழுவதும் மனநிறைவின்மையை ஏற்படுத்தியது.
ஆ) இனவெறிக் கொள்கைகள்:
- ஆங்கிலேயர் இனப்பாகுபாட்டுக் கொள்கையைப் பின்பற்றினர்.
- அரசு உயர்பதவிகளில் இந்தியர்களைப் பணியமர்த்தாமல் திட்டமிட்டு விலக்கி வைக்கப்பட்டதை மக்கள் இந்திய எதிர்ப்புக் கொள்கையின் நடவடிக்கையாக கருதினர்.
- இதன் விளைவாக இந்திய உயர் வகுப்பாரிடையே ஏற்பட்ட வெறுப்பு ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக இந்தியர்கள் புரட்சி செய்ய இட்டுச் சென்றது.குடிமைப் பணிக்காணத் தேர்வுகள் அறிமுகமானபோது இந்தியர்கள் அத்தேர்வுகள் அதிகம் பேர் வெற்றிபெற்றனர்.
- இதனைத்தடுக்கும் விதமாக வயது வரம்பு 21லிருந்து 19 ஆகக் குறைந்தது.
- இதைப்போலவே குடிமைப் பணித்தேர்வுகளை ஒரே நேரத்தில் இந்தியாவிலும் நடத்த வேண்டுமேன இந்தியாவின் கற்றறிந்த நடுத்தர வர்க்கம் வைத்த வேண்டுகோளை ஆங்கில அரசு ஏற்றுக் கொள்ள மறுத்தது.
Question 4.
இந்திய தேசிய காங்கிரசின் நோக்கங்களையும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆரம்ப கால தேசியவாதிகள் அளித்த பங்கினையும் விளக்குக.
Answer:
இந்திய தேசிய காங்கிரஸின் நோக்கங்கள்:
- நாடெங்குமுள்ள தேசிய உணர்வுள்ள தொண்டர்களை இணைத்து நட்புறவை வளர்த்தல்.
- இனம், மதம் மற்றும் வாழுமிடம் ஆகிய வேறுபாடு இல்லாது தேசிய உணர்வை பெருக்குதல் மற்று ஒருமைபாட்டுணர்வை வளர்த்தல்.
- திட்டங்களை முறையுடன் வகுத்து மக்களின் தேவைகளை அரசு அறியும்படி செய்தல்.
- நீதித்துறையையும், நிர்வாகத்துறையையும் தனித்தனியாகப்பிரித்தல் .
- இந்திய மாகாணங்களில் பிரதிநிதித்துவ சட்டசபை நிறுவி சுயாட்சி வளர்த்தல்.
- இராணுவ செலவினங்களைக் குறைத்தல், பத்திரிக்கைகளுக்குச் சுதந்திரம் வழங்குதல்.
- சட்ட சபைகளை விரிவுபடுத்துதல், ஆகியனவாகும்.
தொடக்ககால தேசியவாதிகளின் பங்களிப்பு:
- நாம் ஒரே நாடாக என்ற கருத்து வடிவம் பெற உதவியவர்கள் இத்தொடக்ககால தேசியவாதிகளே.அவர்கள் உண்மையாகவே இம்மண்சார்ந்த காலணிய எதிர்ப்புச் சித்தாந்தத்தையும் தாங்களாகவே தங்களுக்கென ஒரு செயல்திட்டத்தையும் உருவாக்கி கொண்டனர்.
- பிபின் சந்திரபால்,
- பாலகங்காதரதிலகர்,
- லாலா லஜபதிராய் போன்ற தலைவர்கள் தீவரமான அணுகுமுறைகளை பரிந்துரைந்தனர். இவர்கள் தீவிரதேசியவாதிகள்’ என்று அழைக்கப்பட்டனர்.
- “சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என திலகர் முழங்கினார்.
- 1905 இல் வங்கப்பரிவினையை ஆவேசமாக எதிர்த்தனர். சுதேசியக்கம் ஆங்கிலேய ஆட்சியை நேரடியாக எதிர்த்ததோடு, சுதேசித்தொழில்கள், தேசியக்கல்வி, சுய உதவி, இந்திய மொழிகளை பயன்படுத்துதல் ஆகிய கருத்துகளை ஊக்குவித்தது.
- மித தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகிய இருதரப்பினரும் அவர்கள் வழிகாட்டிகளாகப் பொறுப்புவகித்து பத்திரிக்கைகள் முதலான பல்வேறு வகைகளில் தேசிய உணர்வை ஊட்டினர்.
V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)
1. இந்தியாவில் மேற்கத்தியக் கல்வி அறிமுகப்படுத்தப்படாமலிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை விவரிக்கவும்.
2. தமிழ்நாட்டிலிருந்த ஆரம்ப கால தேசியவாதிகளின் வாழ்க்கை வரலாறு மற்றும் உருவப் படங்களைத் தொகுக்கவும்.
VI. வரைபடம்
Question 1.
இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற பின்வரும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
1. பம்பாய் 2. கல்கத்தா 3. சென்னை |4. அகமதாபாத் 5. லக்னோ 6. கான்பூர் 7. சூரத் 8. லாகூர் 9. பூனா 10. அலகாபாத்

12th History Guide இந்தியாவில் தேசியத்தின் எழுச்ச Additional Questions and Answers
1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
“இந்தியாவின் குரல் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் ………..
அ) சுரேந்திர நாத் பானர்ஜி
ஆ) அன்னி பெசன்ட் அம்மையார்
இ)தாதாபாய் நௌரோஜி
ஈ) லோகமான்ய திலகர்
Answer:
இ) தாதாபாய் நௌரோஜி
Question 2.
இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது …………….
அ) 1885 டிசம்பர் 28
ஆ) 1885 நவம்பர் 28
இ)1885 அக்டோபர் 28
ஈ) 1884 டிசம்பர் 26
Answer:
அ) 1885 டிசம்பர் 28
Question 3.
மாறுபட்ட ஒன்றை தேர்வு செய்க.
அ) டல்ஹௌசி பிரபு
ஆ) கானிங் பிரபு
இ)வாரன் ஹேஸ்டிங்ஸ்
ஈ) சுப்பிரமணிய பாரதியார்
Answer:
ஈ) சுப்பிரமணிய பாரதியார்
Question 4.
பாலகங்காதர திலகர் வெளியிட்ட பத்திரிக்கை …………
அ) இந்தியாவின் குரல்
ஆ) பெங்காலி
இ)ஆனந்தமடம்
ஈ) மராட்டா
Answer:
ஈ) மராட்டா
Question 5.
பின்வருவன பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க …….
அ) சூரத்பிளவு – 1878
ஆ) வங்கப் பரிவினை – 1852
இ) வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் – 1907
ஈ) சென்னை வாசிகள் சங்கம் – 1905
அ) 3,2,1,4
ஆ) 3,4,1,2
இ) 4,3,1,2
ஈ) 4,1,3,2
Answer:
ஆ) 3,4,1,2
Question 6.
பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?
அ) சென்னை மகாஜன சங்கம் – 1852
ஆ) இந்திய தேசிய காங்கிரஸ் – 1884
இ) திலகர் கைது – 1897
ஈ) இலபர் மசோதா கிளர்ச்சி – 1885
Answer:
இ) திலகர் கைது – 1897
Question 7.
பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான காலவரிசையை தேர்வு செய்க.
அ) இன்டிகோ புரட்சி
ஆ) பிரிட்டிஷ் இந்தியா அடிமை முறை ஒழிப்பு
இ) சென்னை பல்கலைக்கழகம்
ஈ) இந்திய தேசிய காங்கிரஸ்
அ) iv, ii, iii, i
ஆ) iv, iii, ii, i
இ) ii, iii, i, iv
ஈ) i, iii, ii, iv
Answer:
இ) ii, iii, i, iv
Question 8.
இராஜாராம் மோகன்ராயின் வங்க மொழி பத்திரிக்கை
அ) மிராத்-உல்- அக்பர்
ஆ) சம்வத்கௌமதி
இ)மராத்தா
ஈ) சுதேசமித்திரன்
Answer:
ஆ) சம்வத்கௌமதி
Question 9.
‘மெட்ராஸ் டைம்ஸ்’ பத்திரிக்கையின் ஆசிரியர்
அ) T.B மெக்காலே
ஆ) பாரதியார்
இ) கேசவசந்திரசென்
ஈ) வில்ப்பா டிக்பை
Answer:
ஈ) வில்லியம் டிக்பை
Question 10.
‘பெங்காலி’ என்னும் நூலின் ஆசிரியர் ……………
அ) தாதாபாய் நௌரோஜி
ஆ) சுரேந்திரநாத் பானர்ஜி
இ)W.C. பானர்ஜி
ஈ) திலகர்
Answer:
ஆ) சுரேந்திரநாத் பானர்ஜி
Question 11.
1835ல் புகழ்பெற்ற இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள்” எனும் குறிப்புகளை வெளியிட்டவர் …….
அ) சார்லஸ் உட்ஸ்
ஆ) வில்லியம் டிக்பை
இ)T.B. மெக்காலே
ஈ) எல்பின்ஸ்ட ன்
Answer:
இ) T.B.மெக்காலே
Question 12.
1856-57ல் கல்கத்தாவிலிருந்து டிரினிடாட் சென்ற கப்பலில் பயணம் செய்தவர்கள் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை/எது?
கூற்று 1 : நீண்ட கடல் பயணத்தில் தொழிலாளர்கள் பலர் வழியிலேயே இறந்தனர்.
கூற்று 2 : ஆண்கள் 12.3 விழுக்காட்டினரும், பெண்களில் 18.5 விழுக்காட்டினரும் இறந்துவிட்டனர்.
கூற்று 3 : சிறுவர்கள், சிறுமிகள், குழந்தைகள் 40 விழுக்காட்டினர் இறந்துவிட்டனர்.
அ) 1,2
ஆ) 1,3
இ) 2,3
ஈ) இவை அனைத்தும்
Answer:
அ) 1,2
Question 13.
கூற்று : இல்பர்ட் மசோதாவிற்கு ஆதரவாக 1883ல் கிளர்ச்சிகள் நடைபெற்றன.
காரணம் : ஆனால் இப்போராட்டங்களும் கிளாச்சிகளும் ஒருங்கிணைக்கப்படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே நடைபெற்றன.
அ) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது. ஆ)கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று சரி. காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
Answer:
ஆ) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
II. சுருக்கமான விடையளிக்கவும்
Question 1.
இந்திய தேசிய இயக்கம் மிகப்பெரும் மக்கள் இயக்கமாக எப்போது மாறியது?
Answer:
- 1915ல் மோகன்தாஸ் கரம்சந் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி தலைமையேற்றதிலிருந்து இந்திய தேசியம் மிகப்பெரும் மக்கள் இயக்கமாக மாறியது.
Question 2.
1857ல் ஆங்கிலப் படைகளால் டெல்லி முற்றுகை குறித்து பம்பாய் மாகாண முன்னாள் ஆளுநர் எல்பின்ஸ்டனின் கூற்றுகளை ஆய்க.
Answer:
- 1857 ஜூன் – செப்டம்பர் மாதங்களில் ஆங்கிலப்படைகளால் டெல்லி முற்றுகையிடப்பட்டது.
- இதனைகுறித்து பம்பாய் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எல்பின்ஸ்டன் அப்போதைய இந்தியாவின் எதிர்கால வைஸ்ராய் சார்ஜான் லாரன்சுக்கு கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்.
- நண்பன் பகைவன் என்று வேறுபாடின்றி முழுவீச்சிலான பழிவாங்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- கொள்ளையடிப்பதைப் பொறுத்தமட்டில் நாம் உண்மையாகவே நாதிர்ஷாவை மிஞ்சிவிட்டோம்” என – கூறியுள்ளார்.
Question 3.
இந்தியாவின் பழம் பெருமையை வணங்குதல் – ஆய்க.
Answer:
- வில்லியம் ஜோன்ஸ் சார்லஸ் வில்கின்ஸ், மேக்ஸ்முல்லம் போன்ற கீழையுலக அறிஞர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு அராபிய, பாரசீக சமஸ்கிருத மொழிகளிலிருந்து மத வரலாற்று இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர்.
- இந்தியாவின் மரபு, புலமை ஆகியவற்றின் செழுமையால் கவரப்பட்ட பல தொடக்க கால தேசியவாதிகள் இந்தியாவின் பண்டையப் பெருமையை மீட்டெடுக்க ஆர்வத்துடன் வேண்டினர்.
- “தேசியத்தின் குறிக்கோளானது இந்தியச் சிந்தனையை, இந்திய குறைநலன்களை, இந்திய உணர்வுகளை, இந்திய ஆற்றலை, இந்தியாவின் உன்னதத்தை மீட்டெடுப்பதாகும்.மேலும் உலகைத் தடுமாறச் செய்யும் பிரச்சனைகளை இந்திய மனப்பாங்குடன் இந்திய நிலைப்பாட்டில் தீர்த்து வைப்பதாகும்” என அரவிந்கோஷ் எழுதியுள்ளார்.
III. குறுகிய விடையளிக்கவும்
Question 1.
ஆங்கிலேயருக்கு முந்தைய இந்தியாவில் கல்வியின் நிலை எவ்வாறு இருந்தது?
Answer:
- காலனிய காலத்திற்கு முந்திய இந்தியாவில் கல்வியானது சாதி, மத அடிப்படையில் இருந்தது.
- இந்துக்களிடையே பிராமணர்கள் உயர்நிலை சார்ந்த சமய, தத்துவ அறிவினைப்பெறும் தனி உரிமை பெற்றிருந்தனர்.
- புனிதமான மொழி என கருதப்பட்ட சமஸ்கிருத மொழி வழியில் கல்விகற்றனர்.
- கட்டடக்கலை – உலோகவியல் சார்ந்த அறிவுத்திறன் பரம்பரை ஆக்கப்பட்டது.
- பெண்களும் ஒடுக்கப்பட்டோரும் ஏனைய ஏழை மக்களும் கல்வி கற்க தடை இருந்தது.
Question 2.
பாலகங்காதர திலகரின் ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பு பற்றி கூறுக.
Answer:
- தேசிய இயக்கத்தில் மத்தியதர வகுப்பினரும் விவசாயிகளும், கைவினைஞர்களும் தொழிலாளர்களும் ப மிக முக்கியமான பங்கினை வகிக்கமுடியும் என பாலகங்காதரதிலகர் உறுதியாக நம்பினார்.
- இந்தியாவில் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக தேசந்தழுவிய எதிர்ப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
“சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்”
- என முழங்கினார்.
- 1897 ஜூலை 27ல் திலகர் கைது செய்யப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124A யின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.
- திலகர் தீவிர காங்கிரஸ் தேசவாதியாக இருந்தாலும் இவர் கைது செய்யப்பட்டதை அனைவரும் எதிர்த்தனர்.
- கருத்துச் சுதந்திரம், பத்திரிக்கைச் சுதந்திரம் ஆகிய இரு உரிமைகளும் இந்திய விடுதலைப்போராட்டத்தின் முக்கிய கூறுகளாய் விளங்கின.
Question 3.
சமூக, சமய சீர்திருத்த இயக்கங்களின் வகைகளை கூறுக.
Answer:
1. சீர்திருத்த இயக்கங்கள் :
- ராஜாராம் மோகன்ராயால் நிறுவப்பட்ட பிரம்ம சமாஜம்,டாக்டர் ஆத்மராம் பாண்டுரங் உருவாக்கிய பிரார்த்தனை சமாஜம்,சர் சையத் அகமது கானால் பிரதிநிதித்துவம் பட்ட அலிகார் இயக்கம் ஆகியவை சீர் திருத்த இயக்கங்கள் ஆகும்.
II. மீட்பு இயக்கங்கள் :
- ஆரியசமாஜம்
- ராமகிருஷ்ண இயக்கங்கள்
- தியோபந்த் இயக்கங்கள்
III. சமூக இயக்கங்கள் :
- புனேயில் ஜோதிபா பூலே,
- கேரளாவில் நாராயணகுரு,
- அய்யன்காளி
- தமிழ்நாட்டில் இராமலிங்க அடிகள், வைகுண்டசாமிகள்
- அயோத்திதாசர்
IV. விரிவான விடையளிக்கவும்
Question 1.
“தாதாபாய் ” நௌரோஜியும் அவர் முன்வைத்த சுரண்டல் கோட்பாடும் பற்றி விவரி?
Answer:
முதுபெரும் தலைவர்:
- இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவர் என அறியப்படும் தாதாபாய் நௌரோஜி தொடக்க கால தேசிய இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் ஆவார்.
- 1870 இல் பம்பாய் நகராட்சி கழகத்திற்கும், நகரசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1892 ல் இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் லண்டனில் ‘இந்தியச்சங்கம்’ (1865), ‘கிழக்கிந்திய கழகம்’ (1866) எனும் அமைப்புகளை உருவாக்கினார்.
- மூன்று முறை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செல்வச்சுரண்டல் கோட்பாடு:
- 1901ல் “வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும்” என்னும் புத்தகமே இந்திய போராட்டத்திற்கு அவர் செய்த முக்கிய பங்களிப்பு ஆகும்.
- இதில் செல்யச் சுரண்டல் எனும் கோட்பாட்டை முன் வைத்தார்.
- வசூலிக்கப்பட்டவரியை அந்நாட்டு மக்களின் நல்வாழ்விற்கே செலவழிக்கவேண்டும் ஆனால் பிரிட்டிஷ் இந்தியாவில் வசூலிக்கப்பட்டவரி இங்கிலாந்தின் நலனுக்காகச் செலவு செய்யப்படுகிறது என்றார்.
- 1835 முதல் 1872 முடிய ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 13 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடையப் பொருட்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
- ஆனால் அந்த அளவிற்கு பணம் இந்தியா வந்து சேரவில்லை எனவும் கூறினார்.
- லாபத்தில் வழங்கப்பட வேண்டியபங்கு இருப்பு பாதைத் துறையில் முதலீடு செய்தவர்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டவாறு தரப்படவில்லை .
- பணிநிறைவு பெற்றுவிட்ட அதிகாரிகளுக்குள் தளபதிகளுக்கும் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம், இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியிலும் நாடுகளைக் கைப்பற்ற நடைபெற்ற போர்களுக்காக இங்கிலாந்திடம் செலுத்த வேண்டிய வட்டி எல்லாவற்றிற்கும் பதிலாகவே பொருட்கள் ஏற்றுமதிசெய்யப்பட்டதாக கூறினார்.
- தாயகக்கட்டணம் என்னும் பெயரில் ஆண்டொன்றுக்கு 30 மில்லியன் பவுண்டுகள் நஷ்டம் ஏற்படுத்துவதாக நௌரோஜி உறுதிபடக் கூறினார்.
- தாதாபாய் நௌரோஜியால் முன்வைக்கப்பட்ட செல்வச் சுரண்டல் கோட்பாடு இந்தியாவின் செல்வவளத்தை ஆங்கிலேயர் கொள்ளையடிப்பதை வெட்ட வெளிச்சமாக்கியது.
0 Comments:
Post a Comment