Samacheer Guide 10th social science Book Answers Guide History 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின் விளைவுகளும்.
Tamilnadu state board Samacheerbook 10th social science Book Answers Guide History 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின் விளைவுகளும் Book back Questions and answer guide
I சரியான விடையைத் தேர்வு செய்யவும்
Question 1
முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?
அ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்
ஆ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, ரஷ்யா
இ) ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி
ஈ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி
விடை: அ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்
Question 2.
பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?
அ) சீனா இ) கொரியா
ஆ) ஜப்பான் ஈ) மங்கோலியா
விடை: ஆ) ஜப்பான்
Question 3
ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?
அ) லெனின்
ஆ) மார்க்ஸ்
இ) சன் யாட் சென்
ஈ) மா சே துங்
விடை: அ) லெனின்
Question 4
மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது
அ) ஆகாயப் போர்முறை
ஆ) பதுங்குக் குழிப்போர்முறை
இ) நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை
ஈ) கடற்படைப் போர்முறை
விடை: ஆ) பதுங்குக் குழிப்போர்முறை
Question 5.
பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்
அ) பிரிட்டன்
ஆ) பிரான்ஸ்
இ) டச்சு
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
விடை: அ) பிரிட்டன்
Question 6
பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
அ) ஜெர்மனி இ) இத்தாலி
ஆ) ரஷ்யா ஈ) பிரான்ஸ்
விடை ஆ) ரஷ்யா
II கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1
__________ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது.
விடை: 1894
Question 2
1913 ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட __________உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது .
விடை. லண்டன் கொண்டது
Question 3
பால்கனில்_______நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது.
விடை: மாசிடோனியா
Question 4
டானென்பர்க் போரில்_________பேரிழப்புகளுக்கு உள்ளானது
விடை: ரஷ்யா
Question 5
_______ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து
விடை: 1902
Question 6
பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர் ஆவார்.
விடை: கிளமென்
Question 7
_______ஆம் ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
விடை: 1925
III சரியான கூற்றைத் தேர்வுசெய்யவும்
1. i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத
பல இனமக்களைக் கொண்டிருந்தது.
ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்று போரிட்டது.
iii) பிரிட்டன் துருக்கியைத் தாக்கி
கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றியது.
iv) சூயஸ் கால்வாயைத் தாக்க துருக்கி
மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்ட து.
அ) i), ii) ஆகியன சரி
ஆ) i), iii) ஆகியன சரி
இ) iv) சரி
ஈ) i), ii), iv) ஆகியன சரி
விடை : ஈ) i), ii), iv) ஆகியன சரி
2. கூற்று: ஜெர்மனியும் அமெ ரிக்கா வும் மலிவான தொழிற்சாலைப் பொருள்களை உற்பத்தி செய்து இங்கிலாந்தின் சந்தையைக் கைப்பற்றின.
காரணம்: இருநாடுகளும் தங்கள் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்தன.
அ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி.
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.
இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு
ஈ) காரணம் சரி, ஆனால் கூற்று தவறு.
விடை : ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.
3. கூற்று: ஆப்பிரிக்காவில் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கா க ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட முதற்கட்ட முயற்சிகள் ரத்தக்களரியான போர்களில் முடிந்தன.
காரணம் : சொந்தநாட்டு மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது.
அ) காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி.
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.
இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
ஈ) காரணம் சரி ஆனால் கூற்று தவறு.
விடை: அ) காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி.
விடை: 1.இ 2.ஈ 3.ஆ 4.உ 5.அ
V. சுருக்கமாக விடையளிக்கவும்
Question 1.
சீனா - ஜப்பானியப் போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?
- சீன - ஜப்பானிய போரில் (1894 - 1895) சீனாவை சிறிய நாடான ஜப்பான் தோற்கடித்தது
- ஜப்பான் லியோடங் தீபகற்பத்தை ஆர்தர் துறைமுகத்துடன் சேர்த்து இணைத்துக் கொண்டது
- இந்நடவடிக்கை மூலம் கிழக்கு ஆசியாவில் தானே வலிமை மிகுந்த அரசு என ஜப்பான் மெய்ப்பித்தது
Question 2
மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக
- இங்கிலாந்து
- பிரான்ஸ்
- ரஷ்யா
Question 3
ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் எவை?
இங்கிலாந்தின் - ஆரவாரமான நாட்டுப்பற்று
பிரான்சின்
-அதி தீவிரப்பற்று
ஜெர்மனியின் - வெறிகொண்ட நாட்டுப்பற்று
0 Comments:
Post a Comment