> 11th Accountancy Guide அலகு 1 கணக்கியல் அறிமுகம் - Tamilnadu state board Samacheerguide ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

11th Accountancy Guide அலகு 1 கணக்கியல் அறிமுகம் - Tamilnadu state board Samacheerguide

11th Accountancy Guide அலகு 1 கணக்கியல் அறிமுகம் - Tamilnadu state board Samacheerguide 

Tamilnadu state board samacheer books guide 11th accountancy Guide Tamil Medium PDF Download Chapter 1 கணக்கியல் அறிமுகம் - new Reduced syllabus guide and full Syllabus guide solution.



    Tamilnadu state board accountancy 11th Books solutions

    I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்

    1. கணக்கியல் சமன்பாடு குறிப்பது

    (அ) வியாபாரத்தின் முதல், சொத்திற்கு சமமானது

    (ஆ) வியாபாரத்தின் பொறுப்புகள், சொத்திற்கு சமமானது

    (இ) வியாபாரத்தின் முதல், பொறுப்புகளுக்கு சமமானது

    (ஈ) வியாபாரத்தின் சொத்துகள், முதல் மற்றும் பொறுப்புகளுக்கு சமமானது

    Answer:

    (ஈ) வியாபாரத்தின் சொத்துகள், முதல் மற்றும் பொறுப்புகளுக்கு சமமானது

    2. சொந்த பயன்பாட்டிற்காக உரிமையாளரால் வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தொகையால் 

    ஏற்படும் நிலை...

    (அ) சொத்தின் மதிப்பு குறையும், உரிமையாளரின் முதலின் மதிப்பு குறையும்

    (ஆ) ஒரு சொத்தின் மதிப்பு உயரும், மற்றொரு சொத்தின் மதிப்பு குறையும்

    (இ) ஒரு சொத்தின் மதிப்பு உயரும், பொறுப்புகளின் மதிப்பு உயரும்

    (ஈ) சொத்தின் மதிப்பு உயரும், முதலின் மதிப்பு குறையும் 

    Answer:

    (அ) சொத்தின் மதிப்பு குறையும், உரிமையாளரின் முதலின் மதிப்பு குறையும்

    3. ஒரு நிறுவனத்தின் சொத்துக்கள் மதிப்பு ` 1,00,000 மற்றும் அதன் வெளியாட்களுடனான

    பொறுப்புகள் ` 60,000 எனில், அந்நிறுவனத்தில் முதல்____________

    (அ) ` 1,60,000 (ஆ) ` 60,000

    (இ) ` 1,00,000 (ஈ) ` 40,000

    Answer:

     (ஈ) ` 40,000

    4. கணக்கியல் சமன்பாட்டின்படி சரியாக இல்லாதது

    (அ) சொத்துக்கள் = பொறுப்புகள் + முதல் 

    (ஆ) சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள்

    (இ) பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல்

     (ஈ) முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்

    Answer:

    (இ) பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல்

    5. கணக்கியல் சமன்பாடு, எந்த கணக்கியல் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு 

    உருவாக்கப்பட்டுள்ளது?

    (அ) இரட்டைத் தன்மை 

    (ஆ) நிலைத்தன்மை

    (இ) நிறுவனத் தொடர்ச்சி

     (ஈ) நிகழ்வுத்தன்மை

    Answer:

    (அ) இரட்டைத் தன்மை 

    11th Accountancy Guide Tamilmedium

    6. சொத்து கணக்கு கையாள்வது

    (அ) தனிப்பட்ட நபர்கள் 

    (ஆ) செலவுகள் மற்றும் இழப்புகள்

    (இ) சொத்துகள் 

    (ஈ) வருமானம் மற்றும் இலாபங்கள்

    Answer:

    (இ) சொத்துகள்

    7. பின்வருனவற்றில் பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு எது?

    (அ) கட்டடம் கணக்கு

     (ஆ) கொடுபட வேண்டிய சம்பள கணக்கு

    (இ) மகேஷ் கணக்கு 

    (ஈ) பாலன் நிறுவனம்

    Answer:

     (ஆ) கொடுபட வேண்டிய சம்பள கணக்கு

    8. முன் கூட்டிச் செலுத்திய வாடகை ஒரு

    (அ) பெயரளவு கணக்கு

     (ஆ) ஆள்சார் கணக்கு

    (இ) சொத்துக் கணக்கு

     (ஈ) பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

    Answer:

    (ஈ) பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

    9. உரிமையாளரால், வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தொகை வரவு வைக்கப்படும் கணக்கு

    (அ) எடுப்புகள் கணக்கு 

    (ஆ) ரொக்கக் கணக்கு

    (இ) முதல் கணக்கு 

    (ஈ) கொள்முதல் கணக்கு

    Answer:

    (ஆ) ரொக்கக் கணக்கு

    10. இரட்டைப் பதிவு முறையில் கணக்குகளைப் பதிவு செய்யும் போது நடவடிக்கைகள் பாதிப்பது

    (அ) குறைந்தபட்சம் இரண்டு கணக்குகள்

     (ஆ) ஒரே கணக்கில், வெவ்வேறு தேதிகளில்

    (இ) ஒரே கணக்கின் இரு பக்கங்களில்

     (ஈ) குறைந்த பட்சம் மூன்று கணக்குகள்

    Answer:

    (அ) குறைந்தபட்சம் இரண்டு கணக்குகள்

    மிகக் குறுகிய வினாக்கள்

    1. கணக்கியலை வரையறு.

    •  அமெரிக்ககணக்கியல் கழகத்தின் கூற்றின்படி, "கணக்கியல் என்பது பொருளாதார தகவல்களைக் கண்டறிந்து, அளவிட்டு, தகவல் தெரிவிக்கக்கூடிய ஒரு செயல்பாடாகும் .
    • இதன்மூலம், தகவல்களைப் பயன்படுத்துவோர் தக்கதீர்வு காண்பதற்கும் மற்றும் முடிவெடுப்பதற்கும் வகை செய்கிறது.
    • 11th Accountancy Guide Tamilmedium
    2. கணக்கியலின் ஏதேனும் இரண்டு பணிகளைக் கூறுக.
    அளவிடுதல்:
    •  வணிக நடவடிக்கைகள் குறித்து முறையான ஆவணங்களை வைத்திருத்தல், பதிவு செய்தல், எடுத்தெழுதுதல், கடைசியாக இறுதிக் கணக்குகளைத் தயாரித்தல் ஆகியவையே கணக்கியலின் முதன்மையான பணியாகும்
    ii) முன்னறிதல்:
    • வணிக நிறுவனங்களின் எதிர்கால செயல் திறன் மற்றும் நிதிநிலை பற்றி கணக்கியலின் பல்வேறு கருவிகளின் மூலம் முன்கூட்டியே அறிந்து கொள்ளுதல்
    ஒப்பிடுதல்:
    • கணக்கியல், நிகழ்ந்த செயல் திறனுடன், திட்டமிட்ட செயல் திறனை ஒப்பிட உதவுகிறது.
     3. கணக்கியல் செயல்பாட்டிலுள்ள படிநிலைகள் யாவை
    1. நடவடிக்கைகளை இனம் கண்டு குறிப்பேட்டில் பதிவு செய்தல்.
    2.  எடுத்தெழுதுதல் ,
    3. இருப்புக் கட்டுதல்,
    4.  இருப்பாய்வு தயாரித்தல் வியாபாரக் கணக்கு தயாரித்தல்
    5. இலாபநட்டக் கணக்கு தயாரித்தல்
    6. இருப்பு நிலைக்குறிப்பு தயாரித்தல்
    4.கணக்கியல் தகவல்களில் ஆர்வமுடைய நபர்கள் யாவர்?
    • உரிமையாளர்கள், பணியாளர்கள், நிர்வாகம் (அகப் பயனீட்டாளர்கள் ).
    • முதலீடாளர்கள், வாடிக்கையாளர்கள், கடனீந்தோர், வரிவிதிப்பு அதிகாரிகள் ஆராய்ச்சியாளற்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் (புறப் பயனீட்டாளர்கள் )
    5. கணக்கியல் தகவல்களைபதிவு செய்யும் எவையேனும் இரண்டு அடிப்படைகளின் பெயர்களைத் தருக?
    • பொதுவான பயன்பாட்டிற்காக கணக்கியலில் கீழ்கண்ட மூன்று அடிப்படைகள் உள்ளன.
    1. ரொக்க அடிப்படை . 
    2. நிகழ்வு அடிப்படை அல்லது வணிக அடிப்படை 
    3.  கலப்பு அல்லது கலப்பின அடிப்படை
    6.கணக்கியல் எத்தகைய தவல்களைத் தருகின்றன 
    1.  பெற்றிருக்கக் கூடிய வளங்கள்.
    2. பெற்றிருக்கக் கூடிய வளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன.
    3. அவற்றின் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள்.

    குறுகிய வினாக்கள் 


    1. கணக்கியலின் பொருளை விளக்குக:-

    • கணக்கியல் என்பது நிதியியல் தகவல்களை, இனம்காணுதல் அளவிடுதல் பதிவுசெய்தல் வகைப்படுத்துதல், சுருக்கமுணர்தல், உய்த்துணர்தல் மற்றும் தகவல்களைத் தெரிவித்தல் போன்ற முறையான செயல்பாடுகளை உள்ளடக்கியது.
    2. கணக்கியலின் பிரிவுகளை சுருக்கமாக கூறுக.
    நிதி நிலைக் கணக்கியல்
    • இது நிதியியல் நடவடிக்கைகளையும், நிகழ்வுகளையும் பதிவு செய்யக்கூடியது
    •  இது வரலாற்றுத் தன்மையுடையது.
    • ஏற்கனவே நடந்து முடிந்த நடவடிக்கைகளை மற்றும் நிகழ்வுகளை கணக்கேடுகளில் பதிவு செய்து பராமரிப்பதே நிதிநிலை கணக்கியலாகும்.
    • இது பயனாளர்கள் முடிவுகள் எடுக்க தேவையான நிதியியல் தகவல்களை தருகிறது.
     2) அடக்கவிலைக் கணக்கியல்
    • பொருட்கள் அல்லது சேவைகளின் அடக்க விலையைக் கணக்கிடுவதற்கு செலவு விவரங்களை சேகரித்து, பதிவு செய்து, வகைப்படுத்தி, செலவினங்களை ஒதுக்கீடு செய்வது அடக்க விலை கணக்கியல் ஆகும்
    • மேலும் இது, செலவுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நிர்வாக முடிவுகளை எடுத்தல் போன்றவற்றிற்கான விவரங்களையும் தருகிறது .
    மேலாண்மைக் கணக்கியல்
    • கணக்கியல் தகவல்களை நிர்வாகத்திற்கு தருவதன் மூலம் முடிவு எடுப்பதற்கும் W நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளுக்கும் துணைசெய்வதே மேலாண்மைக் கணக்கியல் ஆகும்.
    4) சமூகப் பொறுப்பு கணக்கியல்
    • இது வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் கணக்கியல் தகவல்களை சமூகத்தின் பார்வையில் வழங்குவதாகும் .
    • இது உதாரணமாக உள் கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை தெரிவிக்கப்படும் 
    5) மனிதவளக் கணக்கியல்
    • இது ஒரு நிறுவனம், அதன் மனித வளத்தில் செய்த முதலீடுகளை இனம் காணுதல் அளவிடுதல், மற்றும் அறிவித்தல் ஆகியவற்றைச் சார்ந்ததாகும்
    • 11th Accountancy Guide Tamilmedium
    3. கணக்கியலின் முக்கியத்துவத்தினை விரிவாக விளக்குக. ( ஏதேனும் 5)
    1)முறையானபதிவேடுகள்:
    • அனைத்து நிதிசார்ந்த நடவடிக்கைகளும் கணக்கேடுகளில், முறையாகவும், பொதுவான தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டும் தொகுக்கப் படுகின்றன
     2) நிதிநிலை அறிக்கைகள் தயாரித்தல்
    • வருமான அறிக்கை அல்லது இறுதிக் கணக்குகளை, உரிய காலங்களில் தயாரிப்பதன் மூலம், வணிகத்தின் இயக்க முடிவுகளையும், நிதி நிலையையும் அறிய முடியும்.
    •  இது உரிமையாளர்களுக்கு இலாபத்தை வழங்கவும், வணிகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு நிதியை அளிக்கவும் உதவுகிறது.
    3.வளர்ச்சியை மதிப்பிடல்
    • நிதிசார் விவரங்களைப் பகுப்பாய்வு மற்றும் உய்த்துணர்வு செய்வதன் மூலமாக பல்வேறு செயல்களின் வளர்ச்சியை மதிப்பிடவும் பலவீனங்களைக் கண்டறியவும் இயலும்.
    • வணிகத்தின் நீர்மைத்தன்மை இலாபத்தன்மை மற்றும் கடன் தீர்க்கும் திறன் ஆகியவற்றின் முழுமையான நிலையினை நிர்வாகத்திற்கு கணக்கியல் அளிக்கிறது.
    4.முடிவெடுக்க உதவுதல்:
    •  நிர்வாகம் அதன் பணிகளை நிறைவேற்றுவதற்கு தேவையான, உரிய தகவல்களை கணக்கியல் அளிக்கிறது.
    • அந்தத் தகவல்களின் அடிப்படையில் எதிர்காலக் கொள்கைகளையும் திட்டங்களையும் நிர்வாகம் உருவாக்குகிறது .
    5) சட்டத் தேவைகளைப்புர்த்தி செய்தல்
    • பணியாளர் வருங்கால வைப்பு நிதி பராமரிப்பு. தொழிலாளர் ஈட்டுறுதிக் காப்பீட்டுப் பங்களிப்பு, வருமானவரிப் பிடித்தம் மற்றும் வரி அறிக்கைகள் தாக்கல் செய்தல் போன்றவை கணக்கியல் மூலம் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படுகின்றன.
    • சட்டத் தேவைகளின்படி, கணக்குகள் மற்றும் நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கவும் உதவுகிறது.
    6.பயனீட்டாளர்களுக்கு தகவல் தருதல்
    • உரிமையாளர்கள், நிர்வாகம், கடனீந்தோர் பணியாளர்கள், நிதி நிறுவனங்கள், வரிவிதிப்பு அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் போன்ற பல்வேறு பயனீட்டாளர்களுக்கு கணக்கியல் தகவல்களைத் தருகிறது.
    7.சட்டச் சான்றாக இருக்கல்:
    • பொதுவாக நீதிமன்ற வழக்குகளிலும் இதர ஆணையங்களிலும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண கணக்கேட்டுப்பதிவுகள் சான்றாக ஏற்கப்படுகின்றன.
    8.வரி கணக்கிடுதல்
    • வருமானவரி மற்றும் இதரவரிகள் கணக்கிடுதல் மற்றும் செலுத்தலில் கணக்கேடுகள் அடிப்படை ஆதாரமாக இருக்கின்றன.
    4. கணக்கியல் தகவல்களில் பின்வரும் பயனீட்டாளர்கள் ஏன் ஆர்வமாக உள்ளனர்
    {அ} முதலீட்டாளர்கள் (ஆ) அரசு
    Answer:
    அ. முதலீட்டாளர்கள்:
    • ஒரு நிறுவனத்தில், தங்களது நிதியை முதலீடு செய்யும் ஆர்வமுள்ளவர்கள் முதலீட்டாளர்கள் 
    • தாங்கள் இடும் முதல்,இலாபகரமாக தங்களது கைக்கு திரும்ப வரவேண்டும் என நினைப்பத்து முதலீட்டாளர்களின் இயல்பே எனவே, நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளவும், எதிர்கால இலாபம் மற்றும் இடர் ஏற்கும் திறன் போன்றவற்றை தெரிந்து கொள்ளவும் அதிக ஆர்வம் கொண்டிருப்பர்.
     ஆ. அரசு
    • வணிக நிறுவனங்கள், நாட்டின் அரிதான வளங்களைப் பயன்படுத்துகின்றன.
    • அரசாங்கம், வணிக நிறுவனங்களின் செயல் திறனை அறிந்து வைத்திருந்தால் மட்டுமே, அரிதான வளங்களை ஒதுக்கீடு செய்தல், வணிகம் மற்றும் தொழில் துறைச் சார்ந்த கொள்கை முடிவுகளை உருவாக்குதல், மானியம் மற்றும் சலுகைகள் வழங்குதல் போன்றவற்றிற்கான முடிவுகளை எடுக்க முடியும்.
    •  மேற்கண்ட காரணத்தாலேயே, அரசு கணக்கியல் தகவல்களில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றது.
    5.நவீன வணிக உலகில் கணக்காளரின் பங்களிப்பு பற்றி விளக்குக.
    I.எடுகளைப் பராமரிப்பவர்
    •  நிதிச் சார்ந்த நடவடிக்கைகளை முறையாக பதிவு செய்து ஏடுகளைப் பராமரிக்கிறார் நிதிநிலை அறிக்கைகளையும் பிற நிதி அறிக்கைகளையும் தயாரிக்கிறார்.
    II.நிர்வாகத்திற்குத் தகவல்களைத் தருபவர்:
    •  முடிவுகளை எடுக்கவும் மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்கவும், நிர்வாகத்திற்குத் தேவையான நிதிச் சார்ந்த தகவல்களை அளித்து உதவுகிறார். 
    III.வணிகச் சொத்துக்களின் காப்பாளர்
    • சொத்துக்களுக்கான பதிவேடுகளைப் பராமரிப்பதன் மூலம், நிர்வாகம் அந்தச் சொத்துக்களைப் பாதுகாத்து கட்டுப்படுத்த முடிகிறது.
    • சொத்துக்களுக்கான காப்பீடு மற்றும் சொத்துகள் பராமரிப்பைப் பற்றிய ஆலோசனையை நிர்வாகத்திற்கு வழங்குகிறார்.
    iv) நிதி ஆலோசகர்:
    • நிதிச் சார்ந்த தகவல்களை பகுப்பாய்வு செய்து , முதலீட்டுக்கான வாய்ப்புகள், செலவைக் குறைப்பதற்கான உத்திகள், எதிர்கால வளர்ச்சி மற்றும் விரிவு படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து வணிக மேலாளர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
    v. வரி மேலாளர்:
    • குறித்த காலத்தில் வருமானவரி விவரம் தயாரிப்பு செய்தல், மற்றும் வருமானவரி செலுத்துதல் முதலியவற்றை உறுதி செய்கிறார்.
    •  வரி மேலாண்மை வரிச் சுமையை குறைத்தல், வரிவிலக்கு பெறுதல் போன்றவற்றில் மேலாளர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
    Vi. பொது தொடர்பு அலுவலர்:
    • தேவைப்படும் பயனீட்டாளர்களுக்கு, கணக்கியல் பகுப்பாய்வு செய்யத் தேவைப்படும் விவரங்களை வழங்குகிறார்.
    6.குறிப்பு வரைக
    நடவடிக்கை :
    • இது பணம் அல்லது பணமதிப்பு, ஒரு நபரிடம் இருந்து மற்றொருவருக்கு மாற்றம் செய்வதைக் குறிக்கும் ஒரு செயல்பாடு
    முதல் :
    • ஒரு நிறுவனத்தில், அதன் உரிமையாளர் செய்த முதலீட்டைக் குறிக்கும் 
    எரிப்புகள்:



    Share:

    0 Comments:

    Post a Comment