> 12th Tamil Public Exam Model Question paper 2021 ~ Kalvikavi - Educational Website - Question Paper

12th Tamil Public Exam Model Question paper 2021

 12th Tamil Public Exam Model Question paper 2021

(2020 -2021) 12ᵀʰ STANDARD

தமிழ் 

New Reduced Syllabus Based

வினாத்தாள் தயாரிப்பு : பா.சிவசாமி.,

Time Allowed : 15 minutes +3.00 hours.                         Maximum Marks :90

Instructions: 1) Check the question paper for fairness of printing. If there is any lack of fairness, inform the Hall Supervisorimmediately.

2) எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் ஊதா அல்லது கருப்பு நிற மையினை மட்டும் பயன்படுத்தவும்



    12th Tamil Public Exam Model Question papers - PDF Download - Reduced syllabus based

    PART – I

    Note : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளி 6x1 =6

    (ii)சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எளிதாக:- 

    Question 1-6 [ Answer)

     1.இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்

    அ) யாப்பருங்கலக்காரிகை  

    ஆ)தண்டியலங்காரம்

    இ) தொல்காப்பியம்   

     ஈ) நன்னூல்

    Answer : இ) தொல்காப்பியம்

    2.நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது

    அ) சூரிய ஒளிக்கதிர்.    ஆ) மழைமேகங்கள்

    இ) மழைத்துளிகள்            ஈ) நீர்நிலைகள்

    Answer : இ) மழைத்துளிகள்

    3.செற்றார் என்பதன் பொருள்____    

    அ)நண்பர்         ஆ)பகைவர்    

     இ)உறவினர்.          ஈ)தம்பி

    Answer : ஆ)பகைவர்

    4.ஏமம் என்பதன் பொருள் _________

    அ)பகைமை      ஆ)நன்மை      இ)பாதுகாப்பு

    Answer : இ)பாதுகாப்பு

     5.“காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை” – இத்தொடரில் ‘கலன்’ உணர்த்தும் பொருள்

    அ) போர்க்கருவி.        ஆ) தச்சுக்கருவி

    இ) இசைக்கருவி.         ஈ) வேளாண் கருவி

    Answer : இ) இசைக்கருவி

    6.இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தீன் ரூமிகுறிப்பிடுவது

    அ) வக்கிரம் ஆ) அவமானம்

     இ) வஞ்சனை ஈ) இவைஅனைத்தும்

    Answer : ஈ) இவைஅனைத்தும்

    Note :(ii)சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதுக:- 8x1 =8

    Question 7-14[ Answer)

    7.யார்? எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே _____

    அ) அஃறிணை, உயர்திணை   

     ஆ)உயர்திணை, அஃறிணை

    இ) விரவுத்திணை, அஃறிணை     

    ஈ) விரவுத்திணை, உயர்திணை

    Answer : ஆ)உயர்திணை, அஃறிணை

    8.வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக.

    அ) பாலை பாடினான் -     1) தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான்.

    ஆ) பாலைப் பாடினான்.   - 2) தேரினைப் பார்த்தான்

    இ) தேரை பார்த்தான்.      - 3) பாலினைப் பாடினான்

    ஈ) தேரைப் பார்த்தான்.       - 4) பாலைத் திணை பாடினான்

    (அ) 4, 1, 3, 2 (ஆ) 2, 3, 1, 4

    (இ) 4, 3, 1, 2 (ஈ) 2, 4, 1, 3

    Answer : (இ) 4, 3, 1, 2

    9.சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

    ஏமப் புணையைச் சுடும். - இக்குறளில் பயின்றுவரும் அணி?

    அ)உவமையணி.    ஆ)நிரல்நிரையணி.  

    இ)ஏகதேச உருவகணி.   

    ஈ)எடுத்துகாட்டு உவமையணி

    Answer : இ)ஏகதேச உருவகணி.   

    10.'கண்டான்' -  என்பதன் பகுதி ______

    அ)கண்.     ஆ)ஆன்.      இ)காண்.      ஈ)கண்டு

    Answer : இ)காண்

    Explanation: காண்(கண்)+ட்+ஆன்

    11.'உவகை' எனும் என்பது _____

    அ)துன்பம்.       ஆ)இகழ்ச்சி.       

     இ)உவமை.       ஈ)மகிழ்ச்சி

    Answer :   ஈ)மகிழ்ச்சி

    12.தண்டியலங்காரம் என்பது எவ்விலக்கணம் கூறும் நூல்?

    அ)எழுத்து.        ஆ)சொல்.     

     இ)யாப்பு.        ஈ)அணி

    Answer : ஈ)அணி

    13.'நேர்பு' என்பதன் ஓரசை வாய்ப்பாடு______

    அ)நாள்.      ஆ)மலர்.     இ)காசு.     ஈ)பிறப்பு

    Answer : இ)காசு

    14.'மலரடி ' என்பதன் இலக்கணக் குறிப்பு ______

    அ)பண்புத்தொகை.      ஆ)வினைத்தொகை.   

     இ)உவமைத்தொகை.      ஈ)உருவகம்

    Answer : இ)உவமைத்தொகை

    12th Tamil இயல் 1 லிருந்து இயல் -8 வரை Book back Questions and answer GuideClick Here

    PART – II

    Note  : i) ஏதேனும் ஏழனுக்கு விடையளி:-             [7 × 2 =14]

    Question 15-23 [ Answer)

    15.வெண்பாவிற்குரிய தளைகள் யாவை?

    Answer : 

    1. இயற்சீர் வெண்டளை,
    2. வெண்சீர் வெண்டளை.

    16.திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் – இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?

    • திருவளர் செல்வன்’ என்பதே சரியான தொடராகும்.
    • திருவளர் செல்வன் என்பது வினைத்தொகை.
    • வினைத் தொகைக்கு சொல்லுக்கிடையில் வல்லினம் மிகக்கூடாது என்ற இலக்கண விதியின் படி திருவளர்செல்வன் என்பதே சரியான தொடராகும்.

    17.பகுபத உறுப்பிலக்கணம் தருக:-̅

    • அ)உயர்ந்தோர்.    = உயர்+த்(ந்)+த்+ஓர்

    உயர் = பகுதி,

    த் = சந்தி , ந் ஆனது விகாரம்,

    த் = இறந்தகால இடைநிலை,

    ஓர் = படர்க்கை பலர்பால் வினைமுற்று விகுதி.

    • ஆ)பொலிந்தான்.    = பொலி+த்(ந்)+த்+ஆன்

    பொலி = பகுதி

    த் = சந்தி , ந் ஆனது விகாரம்,

    த் = இறந்தகால இடைநிலை,

    ஆன் = ஆண்பால் வினைமுற்று விகுதி.

    • இ)விம்முகின்ற = விம்மு+கின்று+அ

    விம்மு=பகுதி

    கின்று=நிகழ்கால இடைநிலை

    அ= பெயரெச்ச விகுதி

    18.புணர்ச்சி விதி தருக:

    அ)இனநிரை.       = இனம்+நிரை

    விதி:1 

    • மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் எனும் விதியின்படி 

    இனம்+நிரை = இனநிரை என்றானது  

    ஆ)பிறகொரு.      = பிறகு+ஒரு 

    • உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் 

    எனும விதியின்படி : பிறக்+ஒரு என்றானது.

    • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுதல் இயல்பே 

    எனும  விதியின்படி : பிற(க்+ஒ)ரு = பிறகொரு என்றானது.

    இ)மீனாக = மீன்+ஆக

    • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுதல் இயல்பே 

    எனும  விதியின்படி : மீ(ன்+ஆ)க = மீனாக என்றானது.

    19.மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

    1.தலை, தளை, தழை

    • ஆட்டிற்குத் தழை திருடப்போன இடத்தில் மரத்தில் தலை தட்டி விழுந்தவனைத் தோட்டக்காரன் தளையிட்டு ஊர்த்தலைவரிடம் அழைத்துச் சென்றான்

    20வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.:-

     அ)என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதியத் தலைமுறை மீதுதான்; அவர்கள் எல்லா பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தை போல எதிர்கொண்டுத் தீர்ப்பார்கள்.

    Answer : என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதியத் தலைமுறை மீதுதான்; அவர்கள் எல்லாப் பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தைப் போல எதிர்கொண்டுத் தீர்ப்பார்கள்.

    21.தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக

     மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.

    Answer : 

    வானம் பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.

    22.பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக

    வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனார்.

    Answer : 

    வீட்டின் அருகே விளையாடிய குழந்தையை அப்பா எங்கே அழைத்துக் கொண்டு போனார்.

    23.கீழ்க்காணும் தொடர்களில் அடைப்புக்குள் உள்ள பெயர்ச்சொல்லைத் தொடர்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுக:-

    அ)உங்களுக்கு ____________ (யார்) நன்மை என நினைக்கிறீர்கள்.

    Answer : 

    அ)உங்களுக்கு யாரால் (யார்) நன்மை என நினைக்கிறீர்கள்

    ஆ) முருகன் வேகமாகச் (வேகம்) சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை.

    12th Tamil இயல் 1 லிருந்து இயல் -8 வரை Book back Questions and answer GuideClick Here

    PART – III

    Note : i) ஏதேனும். மூன்றனுக்கு விடையளி:-(உரைநடை[ 3 × 2 =6]

    Question 24-36[ Answer)

    பகுதி I

    24.கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார் ?

    Answer:

    • செந்நிறத்து வானம் போல் சிவந்த கைகள் உடைய உழைக்கும் தொழிலாளர்களின் திரண்ட தோள் மீது வீற்றிருக்கும் வியர்வை முத்துக்களைப் பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி.

    25.நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?

    Answer:

    நிலையாமை என்பது உலக வாழ்வு நிலை இல்லாதது என்பதைக் குறிக்கும்.

    • “என் பொய்யான உலகப்பற்று அழிந்தது; என் பிறவி ஒழிந்தது” என்று சவரி நிலையாமை குறித்துக் கூறுகிறாள்.

     26.தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே’ தொடருக்குப் பதவுரை எழுதுக.

    Answer:

    அறம் செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தக்கோட்டத்துக் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே!.

    27.‘நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது’ – விளக்கம் தருக.

    Answer:

    • மழை மேகத்தால் நகரம் இருள் சூழ்ந்தது. பெய்யென மழை பெய்தது.
    • திடீரென சூரியன் தோன்ற மழைமேகத்தால் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க் காட்சியளிக்கிறது.
    • சில மழைத்துளிகளின்மீது படுகின்ற சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே வெள்ளை வைரமாகக் காட்சியளிக்கிறது.

    PART – III

    Note : i) ஏதேனும் இரண்டுக்கு விடையளி:-(உரைநடை) [2 × 2 =4]

    பகுதி I

    28.நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.

    Answer:

    • நடைபெற்றியலும் (கிளவியாக்கம், 26) என்றும் நடை நவின்றொழுகும் (செய் 135) என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது.
    • கவிதையின் இயங்காற்றல்தான் நடை என்கிறது தொல்காப்பியம்.
    • மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே நடை எனப்படும்.

    29.புக்கில், தன்மனை – சிறு குறிப்பு எழுதுக.

    Answer:

    புக்கில் :

    • ‘புக்கில்’ என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிப்பதாகும்.

    “துகள் அறுகேள்வி உயர்ந்தோர் புக்கில்” என்ற புறநானூறு பாடல் (222 : 6) சான்றாகும்.

    தன்மனை :

    • திருமணத்திற்குப் பின் கணவனும், மனைவியும் பெற்றோர்களிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் ‘தன்மனை’ என அழைக்கப்பட்டது.

    30.சங்ககாலத்தில் தாய்வழிச் சமூகமுறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?

      Answer:

      • தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும், வளங்களும் பெண்களுக்கே போய்ச் சேர்ந்தன.
      • தாய்வழிக் குடும்பங்களில் பெண்களே குலத் தொடர்ச்சிக்கு உரியவர்களாக இருந்தனர்.

    PART – III

    Note : i) ஏதேனும். இரண்டுக்கு  விடையளி:-(செய்யுள்) [2 × 4 =8]

    31‘செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்’ தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.

    Answer:

    • கதிரவன் தன் கதிர்களைச் சுருக்கிக் கொண்டு மேற்கு நோக்கி மறைவது இயற்கை.
    • ஆனால் கவிஞர் செம்மைமிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் தன் தலை சாய்க்கிறான் என்கிறார்.
    • கதிரவனின் கதிரொளி பட்டு வானமெனும் காடெல்லாம் பூக்காடாய் மாறின என்று சிற்பி நயம்பட விளக்குகிறார்.

    32.‘நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து

    உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்” – இக்கவிதையின் அடி,

    ‘தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே’ என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக.

    Answer:

    ‘தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோன்’

    • ஏற்றம் இறைப்பவர்கள் அலுப்புத் தெரியாமல் இருக்க பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று.
    • விடியும் போது மூங்கில் இலை நுனியில் ஒரு சொட்டு பனிநீர் வைரம் வைத்தது போல இருக்கும். சூரியனின் ஒளிக்கதிர்கள் அந்த ஒருதுளி நீரையும் விட்டு வைக்காமல் தானே எடுத்துக் கொள்வான்.
    • அதிகாலையில் மூங்கில் இலையில் இருக்கும் பனிநீரை மீண்டும் சூரியன் வாங்கிக் கொள்கிறான். இஃது ஓர் நீர்வட்டம்.

    “நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குறித்து

    உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்”

    • நீர் நிலைகளை வந்தடையும் மழை நீரைச் சூரியன் தன் ஒளிக்கதிர் என்ற உதடுகளால் உறிஞ்சுகிறான்.
    • வானில் இருந்து விழும் மழை நீரை மீண்டும் வானுக்கே எடுத்துக் கொள்கின்றான் சூரியன். இது ஒரு நீர் வட்டம்.

    நயம் :

    • நாட்டுப்புறப்பாடலில் ஒரு துளி பனி நீரைக்கூட சூரியன் விடுவதில்லை தன் ஒளிக்கதிர்களால் எடுத்துக் கொள்கிறான் எனக் குறிப்பிடப்படுகிறது.
    • பிறகொரு நாள் கோடை’ கவிதையில் கவிஞர் மழையாக வந்து நீர்நிலைகளை நிரப்பும் நீரைத் தன் கதிர்களால் இதழ் குவித்து உறிஞ்சுகிறது சூரியன் என்கிறார்.
    • பனித்துளியை வாங்கிக் கொண்டான் கதிரவன் – நாட்டுப்புறப்பாடல்.
    • நீர்நிலை மழைத்துளிகளை உறிஞ்சுக் கொண்டான் கதிரவன் – பிறகு ஒரு நாள் கோடை.

    33.சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.

    Answer:

    • நமக்கு ஏற்படும் தீமையான விளைவுகள் அனைத்தும் நாம் கொள்ளும் சினத்தால் வரும். அதனால், நாம் யாரிடமும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும்.
    • சினம் என்னும் பகை, முகத்தில் அழகு கூட்டுகின்ற சிரிப்பையும், உள்ளத்தில் அருளைக் கூட்டுகின்ற மகிழ்ச்சியையும் கொள்ளும்.
    • சினமானது தன்னைக் கொண்டவனையே அழித்து விடும். எனவே தன்னைக் காத்துக் கொள்ள விரும்புகிறவன் சினத்தைக் காக்க வேண்டும்.
    • சினமானது, தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பாகும். அஃது ஒருவருடைய சுற்றம் என்கின்ற பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழித்து விடும்.

    PART – III

    Note : i) ஏதேனும். இரண்டுக்கு விடையளி:-(செய்யுள்) [2 × 4 =8]

    34.சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் – விளக்குக.

    Answer:

    • எந்தத் தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும் தான் தோன்றுகிறது.
    • சங்கப்பாடல்களில் ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன.
    • இதனையே அந்தப் பனுவல் பாடல்களின் ஒலிப்பின்னல் என்கிறோம். இந்த ஒலிக்கோலங்கள் உணர்ச்சிகளைக் காட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன.

    கடந்தடு தானை மூவிருங் கூடி

    உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே;

    முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன்னாடு;

    முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;

    • உயிர் ஒலிகள் குறிப்பாக நெடில் ஒலிகளின் வருகையும், சில ஒலிகளும் சில சொற்களும் திரும்பவரல் தன்மை பெற்றிருப்பதும், இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாக விளங்கியதை உணர்த்தும்.

    சான்று : ‘படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசை கடாஅ யானைக்’ 

    • – இவ்வரிகள் ஒலிக்கோலத்தின் பண்பை உணர்த்துகிறது.

    35.பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக்குடும்பம் – விளக்கம் எழுதுக.

    Answer:

    தந்தையும் உடன் வாழ்ந்தனர்

    • (i) சங்க காலத்தில் முதல் நிலை உறவை மட்டும் காணமுடிகிறது.
    • (ii) நற்றாய் ஒருபுறம் செவிலியும், மகளின் தோழியும் குடும்பத்தில் முதன்மைப் பெற்றனர். இம்முறை பண்டை இனக்குழு மரபின் மாறுபட்ட தொடர்ச்சி பண்டைய காலத்தில் காண முடிகிறது.

    • (iii) இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் மக்களோடு நிறைந்து. அறம் செய்து, சுற்றத்தாரோடு சேர்ந்து வாழ்தலே தலைவன் தலைவின் இல்லறப் பயன் ஆகும்.
    • (iv) சங்கச் சமூகம் குடும்பம் என்ற அமைப்பை அடிப்படை அலகாகக் கொண்டு அதன் தொடர்ச்சியாக இன்றைய சமூகமும் கூட்டுக் குடும்பம், தனிக்குடும்பம் கொண்டதாக, தந்தைவழிக் குடும்ப அமைப்பைக் கொண்டதாகவும் அமைகிறது.

    36.மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.

    Answer:

    • முதலில் ஆசிரியர் தரையில் எழுத அதன் மேல் பிள்ளைகள் எழுதினர். மணலில் எழுதிப் பழகுவர்.
    • எழுத்துகள் வரிசையாகவும் நன்றாகவும் அமைந்திருந்தன.
    • பழங்காலத்தில் கல், களிமண்பலகை, உலோகத்தகடு, துணி, இலை, பனைஓலை, பூர்ஜ மரப்பட்டை, மரப்பலகை, தோல், மூங்கில் பத்தை போன்றவையும் எழுதுபடுபொருட்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
    • இலை, மரப்பட்டை, களிமண் பலகை போன்றவை விரைவில் அழியக்கூடியவை.
    • மரப்பலகை, மூங்கில் பத்தை இவைகளின் பெரிய நூல்களை எழுதிக் கையாள்வது கடினமாக இருந்தன. தோல், துணி, உலோகத்தகடு போன்றவை மிகுந்த பொருட்செலவினை உண் டாக்கின.
    • கருங்கல்லில் எழுதினால் பிற இடங்களுக்குக் கொண்டு செல்வது கடினமாகும். ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளைக் கொண்டு எழுதினர். கல்வெட்டுகளில் கல்தச்சர்களால் சிற்றுளி கொண்டு எழுத்துகள் பொறிக்கப்பட்டன. களிமண் பலகைக் கணிதம் எழுத்தாணி கொண்டே எழுதினர்.
    • எழுத்துகளின் உருவம் பல காலமாக மாறாமல் இருந்தது. காலம் செல்லச் செல்ல எழுதுகோலைப் பயன்படுத்திக் காகிதத்தில் எழுதும் முறையைக் கற்றுக்கொண்டனர்.

    PART – III

    Note : i) ஏதேனும். மூன்றனுக்கு விடையளி:-(செய்யுள்) [2 × 4 =8]

    Question 37-40[ Answer)

    37.பொருள் வேற்றுமை அணியைச் சான்றுடன் விளக்குக

    அணி விளக்கம் : 
                               இருவேறு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை முதலில் கூறி பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி. 
    சான்று : 
    ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
    ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள் 
    மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது 
    தன்னே ரிலாத தமிழ் .
    (தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்)
    பொருத்தம்
      ஒற்றுமை : 
                    கதிரவனும் தமிழும் இருளைப் போக்குகிறது 
    வேற்றுமை : 
                   கதிரவன், உலகின் புற இருளைப் போக்குகிறது.
    தமிழ், மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குகிறது.
    எனவே, கதிரவனை விட தமிழ் உயர்ந்தது.

    (OR)

    ஆ)நிரல்நிறை அணி சான்று தந்து விளக்குக.
    அணி விளக்கம் : 
                           சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்படியே பொருள் கொள்ளச் செய்வது நிரல்நிறை அணி.
    சான்று :  
    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
    பண்பும் பயனும் அது.
    பொருத்தம் :
     'அன்பும் அறனும் உடைய இல்வாழ்க்கை
    பண்புடையதாகவும் பயன் மிக்கதாகவும் அமையும் என வரிசை முறைப்படி பொருள் கொள்ளப்படுவதால், இது நிரல்நிறை அணி ஆயிற்று.

    38.இலக்கிய நயம் பாராட்டுக. ( மையக்கருத்துடன் ஏதேனும் 3 நயங்கள்)

    முச்சங்கங் கூட்டி

    முது புலவர் தமைக் கூட்டி

    அச்சங்கத் துள்ளே

    அளப்பரிய பொருள்கூட்டி

    சொற்சங்க மாகச்

    சுவைமிகுந்த கவிகூட்டி

    அற்புதங்க ளெல்லாம்

    அமைத்த பெருமாட்டி!

      – கண்ண தாசன்

    முன்னுரை :

    • இப்பாடலைப் பாடியவர் கவியரசு கண்ணதாசன் ஆவார். புகழ்பெற்ற தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

    திரண்ட கருத்து :

    • தமிழன்னையானவள், மூன்று சங்கங்கள் அமைய காரணமானவள். முச்சங்கங்களிலும் நல்ல அனுபவமும் நல்ல அறிவும் கொண்ட புவர்களை ஒன்றாகக் கூட்டியவள். அச்சங்கத்திற்குள் அளவிடமுடியாத பொருள்களைக் கூட்டி நீ உன்னுடைய சொற்களை அதிகரித்து அதே நேரத்தில் சுவை மிக்க கவிதைகளை எல்லாம் ஒரே இடத்தில் கூடிவருமாறு புதுமைகள் எல்லாம் அமைந்த பெருமகளே! தமிழன்னையே!

    தொடை நயம் :

    மோனை :

    காட்டுக்கு யானை

    பாட்டுக்கு மோனை

    முதலெழுத்து ஒன்றி வருவது மோனையாகும்.

    சான்று:

    முச்சங்கங்

    அச்சங்கத்

    சொற்சங்க

    அற்புதங்க

    முதுபுலவர்

    அளப்பரிய

    சுவைமிகுந்த

    அமைத்த

    எதுகை :

    மதுரைக்கு வைகை

    செய்யுளுக்கு எதுகை

    முதலெழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகையாகும்.

    சான்று:

    முச்சங்க - அச்சங்க

    சொற்சங்க - அற்புதங்க

    இயைபு : கடைசி எழுத்தோ ஓசையோ ஒன்றி வருவது இயைபு ஆகும்.

    சான்று:

    • பெருமாட்டி - பொருள்கூட்டி
    • கவிகூட்டி - பொருள்கூட்டி

    அணி நயம் :

    அணியற்ற பாக்கள்

    பிணியுள்ள வணிதை

    தமிழ் மொழியானது சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழி என்று இயல்பான வார்த்தைகளால் இப்பாடல் அமைந்துள்ளதால் இயல்பு நவிற்சியணி இடம் பெற்றுள்ளது.

    சந்த நயம் :

    சந்தம் தமிழுக்குச் சொந்தம்

    ஏற்ற கருவியுடன் பாடினால் கேட்போருக்கும், பாடுவோருக்கும் இனிமையத் தரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது இப்பாடல்.

    சுவை நயம் :

    நா உணரும் சுவை ஆறு

    மனம் உணரும் சுவை எட்டு

    என்ற வகையில் இப்பாடலில் சொற்சங்க மாகச் சுவைமிகுந்த கவிகூட்டி பெருமிதச் சுவை மிகுந்துள்ளது.

    முடிவுரை:

    கற்றாருக்கும், கல்லாருக்கும் ஏற்ற வகையில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.

    39.தமிழாக்கம் தருக

    1. Learning is a treasure that will follow its owner everywhere. (Chinese Proverb).

    கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

    2. A new language is a new life. (Persian Proverb).

    புதிய மொழி புதிய வாழ்க்கை.

    3. If you want people to understand you, speak their language. (African Proverb).

    பிறர் உன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் அவர் மொழியில் பேசு.

    4. Knowledge of languages is the doorway to wisdom. (Roger Bacon).

    மொழிகளின் அறிவு ஞானத்தின் வழித்தடம்

    புயல் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்துகிடக்கும் மின் இணைப்புகளைச்

    சரிசெய்யக் கோரி உங்கள் ஊர் மின்வாரியப் பொறியாளர்களுக்குக் கடிதம் எழுதுக.

    PART – III

    Note : i) ஒவ்வோர் தலைப்பிலும் ஏதேனும். ஒன்றுக்கு விடையளி:-)            [3 × 6 =18]

    Question 41-44[ Answer)

    41.பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.

    Answer:

    குகனுடன் கொண்ட உறவுநிலை :

    • (i) தன்மீது அளவற்ற அன்பு கொண்ட குகன் தன்னைப் பிரிய விருப்பமின்மை என்பதை உணர்ந்து ‘என் உயிர் அணையாய்’ என்றான். “நீ என் உயிர் போன்றவன்’ என்று கூறியது மட்டுமல்லாது, நீ சொல்லும் வேலைகளைச் செய்யும் பணியாளனாய் இருக்கின்றேன்.
    • (ii) குகனின் அன்பால் தன்னை அவனுடைய பணியாளாய்’ கருதும் உரிமையை இராமன்குகனுக்குக் கொடுத்திருந்தான். சகோதரனாக ஏற்றுக் கொள்கிறான் இராமன்.

    சடாயுடன் கொண்ட உறவு நிலை :

    • (i) தனது மனைவிசீதையை இராவணன் சிறையெடுத்தபோது தடுத்து, சண்டையிட்டுக் காயப்பட்டு இறந்தான் சடாயு என்பதை அறிந்து அவனது உயிர்த்தியாகத்தின் உத்தமத்தை உணர்கிறான்.
    • (ii)  தனக்காக உயிரைவிட்ட சடாயுவின் உடலை இறுதிச் சடங்கிற்குத் தயார்படுத்தும்போது, தந்தைக்கு மகன் ஆற்றும் கடமையாகக் கருதுகிறான். சடாயுவின் தியாகத்தால் ‘மகனாய்’ கருதும் உரிமையை இராமன் சடாயுவுக்குக் கொடுத்தான்.

    சவரியுடன் கொண்ட உறவு நிலை :

    • (i) தன்னைக் கண்ட பிறகுதான் பிறவி ஒழிப்பேன் என்று தவம் இருந்த சவரியிடம் பரிவு காட்டி பேசினான் இராமன்.
    • (ii) இராமனைக் கண்டதால்தான் பிறந்ததின் பயனை அடைந்ததாக உணர்ந்த சவரி, இராமன், இலக்குவனுக்கு விருந்து அளித்து மகிழ்ந்தான். தனது அன்புக்குரியவராக விளங்கிய சவரியிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டினான் இராமன்.

    சுக்ரீவனிடம் கொண்ட உறவு நிலை :

    • (i) தனக்காக இலங்கை சென்று கடும்போர் புரிந்து இராவணனின் மணிமகுடத்தை எடுத்து வந்த சுக்ரீவனை நினைத்துப் பெருமைப்பட்டான் இராமன்.
    • (ii) நீ வேறு நான் வேறு அல்ல ; உன் பகைவர் என் பகைவர், உன் உறவினர், என் உறவினர் என் உறவினர் உன் உறவினர், ‘நீ என் இனிய உயிர் நண்பன்’ என்று கூறினான் இராமன்.

    • (iii) சுக்ரீவனைத் தன் உயிர்நண்பனாகக் கருதும் உரிமையைக் கொடுத்தான் இராமன், மேலும் அவனைச் சகோதரனாக ஏற்றுக் கொள்கிறான் இராமன்.

    வீடணனிடம் கொண்ட உறவு நிலை :

    • (i) தன் மனைவியைக் கவர்ந்து சென்ற இராவணனின் செயலைக் கண்டிக்கும் இராவணின் தம்பியாகிய வீடணின் இராமன் மிகுந்த அன்பு கொள்கிறான்.
    • (ii) தன்னிடம் அடைக்கலம் அடையும் வீடணனை உடன்பிறந்தவனாக ஏற்றுக் கொள்கின்றான்.
    • (iii)  தன்னை நம்பி வந்த வீடணனுக்கு இலங்கையைக் கொடுக்கின்றான்.
    • (iv) இலங்கையை வழங்குவதால் தன்னை நம்பும் யாவரும் நலம் பெறவேண்டும் என்று நினைக்கும் உரிமையைக் கொடுக்கின்றான் இராமன்.

    இவ்வாறாக, இராமபிரான் பணியாளனாய், சகோதரனாய், தந்தைக்கு உற்ற மகனாய், தாய்க்கு உற்ற மகனாய், நண்பனாய், உரிமையை வழங்கும் சகோதரனாய்ப் பிற உயிர்களுடன் பல உறவு நிலைகளைக் கொண்டு இராமன் பண்பின் படிமமாக விளங்குகிறார்.

    (OR)

    ஆ)செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைக்கொண்டு நிறுவுக.

    Answer:

    விண் மண் :

    “செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

    வானகமும் ஆற்ற லரிது”

    • நாம் பிறருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமலிருக்கும் நிலையில் பிறர் நமக்குச் செய்த உதவியை நினைத்துப் பார்த்தால் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது.

    உலகம் :

    “காலத்தி னால்செய்த நன்றி சிறிது எனினும்

    ஞாலத்தின் மாணப் பெரிது”

    • ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும் அது உலகத்தின் அளவை விடப் பெரியதாகும்.

    கடல் :

    “பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

    நன்மை கடலிற் பெரிது”

    • எந்தப் பயனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் நமக்குச் செய்த உதவியின் அளவை ஆராய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரியதாகும்.

    பனை :

    “தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

    கொள்வர் பயன்தெரி வார்”

    • ஒருவர் தினையளவு உதவியைச் செய்தாலும் அதன் பயனை அனுபவித்து அறிந்தவர்கள் அவ்வுதவியைப் பனையளவாகக் கொள்வர்.

    வாழ வழி :

    “நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது

    அன்றே மறப்பது நன்று”

    • ஒருவர் நமக்குச் செய்த நன்மையை ஒருநாளும் மறக்கக்கூடாது. ஒருவர் நமக்குச் செய்த தீமையை அப்பொழுதே மறந்துவிட வேண்டும். தப்பிக்க முடியாது.

    “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்;

    உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு”

    • எந்த அறத்தை அழித்தாலும் தப்பிப் பிழைக்கலாம். ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்குத் தப்பிப் பிழைக்கும் வழியே கிடையாது.
    • எனவே, செய்ந்நன்றியறிதலே சிறந்த அறம் என்பதனை வள்ளும் உணர்த்துகின்றது.

    42.கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.

    Answer:

    கவிதையின் நடையைக் கட்டமைப்பன:

    • பாட்டு அல்லது நடை அழகியியல் கூறுகளில் ஒலிக்கோலங்களும் சொற்களின் புலமும் தொடரியல் போக்குகளும் முக்கியமானவை.

    கவிதை – நடையியல்:

    • மொழியின் தனிச்சிறப்பான கூறுகளும், அவற்றைக் கையாளுகின்ற வகைமைகளும் கவிதையின் உந்து சக்தியாக அமைகின்றன. மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. கவிதையின் இயங்காற்றல்தான் நடை. நடைபெற்றியலும் (கிளவியாக்கம் – 26) என்று தொல்காப்பியம் கூறுகிறது.

    ஒலிக்கோலங்கள்:

    • தொன்மையான மொழிகள் யாவும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும்தான் தொடங்குகிறது. ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன. இதையே, அந்தப் பனுவலின் – பாடலின் ஒலிப்பின்னல் என்கிறோம்.

    சான்று: “கடந்தடு தானை மூவிருங்கூடி உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே”

    • இப்பாடலில் க, த, ட, ற முதலிய வல்லின மெய்கள் பிற மெல்லின் இடையின மெய்களைக் காட்டிலும் அதிகமாக வருகிறது. இதன் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்து ஒலிக்கோலத்தின் வலிமையை அறியலாம்.

    படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசை

    கடாஅ யானைக் கலிமான் பேக (புறம் – 145)

    • இதில் பல உயிர் ஒலிகள் வருகையும் திரும்பவரல் தன்மையும் இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் இங்கே கவனத்திற்குரியன. ஒலிக்கோலம் சங்கப்பாடல்களின் ஒரு முக்கியப்பண்பு.

    சொற்புலம் :

    • சொல்வளம் என்பது ஒருபொருள் குறித்த பல சொல், பல பொருள் குறித்த ஒரு சொல், பலதுறை, பலசூழல், பல புனைவுகளுக்கும் உரியதாய் வருதலும், உணர்வும், தெளிவும் கொண்டதாய் : 2 வருதலும், எனப் பலவாறு செழிப்பான தளத்தில் சொற்கள் விளைச்சல் கண்டிருப்பதைக் குறிக்கும். சான்றாக, முல்லைக்கலியில் காளைகளில் பல இனங்களைக் காட்டுகின்ற சொற்கள் உள்ளன. சொல்வளம் ஒரு பண்பாட்டின் அடையாளம். சொல்வளம் என்பது தனிச்சொற்களாய் நிறைந்து அமைவதையும் குறிக்கும்.

    தொகைநிலை :

    • சங்க இலக்கிய மொழியின் அடையாளமாக உள்ள ஒரு பண்பு இது. இதனைத் தொகைநிலை என்று தொல்காப்பிய எச்சவியல் பேசுகிறது. தொகைமொழி என்பது செறிவாக்கப்பட்ட ஒரு : வடிவமைப்பு.
    • அது வாக்கிய அமைப்பில் ஒரு சொல் போலவே நடைபெறும்.

    சான்று: வைகுறுவிடியல், கவினுறு வனப்பு, தீநீர் என்பன.

    தொடரியல் போக்குகள் :

    • ஒலிக்கோலமும், சொற்புலமும் சொற்றொடர் நிலையும் பாடலின் தளத்தை ஏர் நடத்திப் பண்படுத்திப் போகின்றன என்றால், பாத்தி கட்டி வரப்புயர்த்தும் பணிகளைத் தொடரியல் வடிவம் செய்கின்றது. பரிமாறப்படும் உணர்வுகளுக்கும் செய்திகளுக்கும் ஏற்பத் தொடர்கள் ஏறியும் இறங்கியும் திரும்பியும் சுழன்றும் இயங்குகின்றன.

    கவிதை மறுதலைத்தொடர் :

    • தொடரமைப்பு என்பது எழுவாய் + செயப்படுபொருள், அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு + பயனிலை என்று வருவது மரபு. இது சங்கப்பாடல்களில் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.

    சான்று: பேரெயின் முறுவலாரின், நம்பி நெடுஞ்செழியனுடைய சாவுச்சடங்கு பாடல்

    “இடுகவொன்றோ, சுடுகவொன்றோ

    படுவழிப்படுக இப்புகழ் வெய்யோன் தலையே” (புறம் – 239)

    • இதன் இறுதி அடி பிறழ்வோடு அமைந்துள்ளது. ஏனைய 20 அடிகளில் தொடர் வரிசையாகவும் நேர்படவும் செல்கின்றன. ஒவ்வோர் அடியும் வினைமுற்றுகளோடும், தன்னிறைவோடும் முடிகின்றன. இப்படி 18 பண்புகளை வரிசைப்படுத்திய பிறகு, தொகுத்துச் சொல்வதுபோல, : – (ஆங்குச் செய்பவையெல்லாம் செய்தனன் ஆதலின்) கூறிவிட்டுப் போடா போ – புதைத்தால் புதை; சுட்டால் சுடு என்று அலுத்துக் கொள்கிறது.

    நிரைவுரை :

    • நடையியல் என்பது வடிவமைப்பின் பகுதிகளையும் முழுமையினையும் சார்ந்தே இருக்கிறது. அத்தகைய நடை அழகியலைக் கட்டமைப்பதற்குச் சங்க இலக்கியமே முதன்மை ஆதாரம். மேலும் : வ சங்க இலக்கியம் அதனுடைய தனித்துவ மிக்க சமூக – பண்பாட்டுத்தளத்தில் குறிப்பிட்ட சில பண்புகளையும் போக்குகளையும் சொந்த மரபுகளாகக் கொண்டுவிட்டது. எனவே, கவிதையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகள் சங்க இலக்கியங்களில் பரவிக் காணப்படுகின்றன.

    (OR)

    ஆ)பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்து எழுதுக.

    Answer:

    • (i) பண்டைக்காலத்தில் ஆசிரியர்களிடையே மிகுந்த உறவுமுறை இருந்தது. ஆசிரியரை உபாத்தியார் என்றனர். உபாத்தியாரைக் கணக்காயர் என்பர். உபாத்தியாயருடைய வீடே குருகுலமாக இருந்தது.
    • (ii) ஊர்தோறும் பொதுவாக இடத்தில் மேடை அமைக்கப்பட்டிருக்கும். அம்மேடையை மன்றம் என்றும் அம்பலம் என்றும் கூறுவர். மன்றம் என்பது மரத்தடியில் உள்ள திண்ணை . அதுதான் : பிறகு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியது. மரத்தடிப் பள்ளிகள் நாளடைவில் குடிசைப் பள்ளியாக மாறியது.
    • (iii) பெற்றோர்கள் ஐந்து வயதில் பிள்ளைகளை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். ஒரு நல்ல நாளில் ஏட்டின் மீது மஞ்சள் பூசி பையனிடம் கொடுப்பர். உபாத்தியார் நெடுங்கணக்கைச் சொல்ல மாணவன் அதைப் பின்பற்றிச் சொல்வான். இப்படி மாணாக்கர்கள் பலர் சேர்ந்து சொல்வதை ‘முறை வைப்பது’ என்பர்.
    • (iv) சுவடியில் எழுத்துகள் தெளிவாகத் தெரிய மஞ்சள், மணத்தக்காளிச் சாறு, மாவிலைக் கரி, தர்ப்பைக் கரி தடவுவர். உபாத்தியாயர் மாணவர்களை முதலில் மணலில் எழுதிப் பழக்குவர். உபாத்தியாயர் எழுதியதின்மேல் மாணவர்கள் எழுதி எழுதிப் பயிற்சி பெறுவர்.
    • (v) எழுத்துகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், வரிகோணாமல் பழைய காலத்தில் எழுதும் முறையைக் கற்றுக் கொடுத்தனர். புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரியெழுத்தின் உறுப்புகளாகும். இதனை முறையாகக் கற்றுக் கொடுத்தனர்.
    • (vi) மனனம் செய்யும் முறையைச் சொல்லிக் கொடுத்தனர். மாணாக்கர்கள் அதிக முயற்சி எடுத்து மனனம் செய்தனர்.
    • (vii)  தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள் முதலியவற்றையும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய அகராதி வரிசையில் அமைந்த நூற்களை மனப்பாடம் செய்ய வைப்பதன் மூலமாகக் கற்றுக் கொடுத்தனர்.
    • (viii) கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள் மூ லம் கற்பித்தல் நடைபெற்றது. எல்லோரும் ஒன்றாகக் கூடி கேள்விகள் கேட்டும் விடைகூறியும் கற்றுவரும் முறையும் இருந்தது. சுவடியில் எழுத்துகளை எழுதும் முறையும், கற்றுக்கொடுத்தனர்.
    • (ix) ஆசிரியர்கள் மாணக்கர்களை அன்பினால் வழி நடத்தி வந்தார்கள். கற்றல் கற்பித்தல் முக்கியமாக விளங்கியவாதம் செய்யும் கற்றல் முறையும் இருந்தது. அரசவையில் கூடவாது புரியும் அளவிற்குக் :கற்றல் முறைகள் இருந்தன. பள்ளிக்கூடத்தில் மாணாக்கர்கள் நூல் பயிலும் இயல்பை நன்னூல் நூற்பா இவ்வாறு கூறும்.

    “வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
    கடனாக் கொளினே மடநனி இகக்கும்” 

    – நன்னூல் 41
    • (x) ஞாபகசக்தியை வளர்க்க தினமும் பூ, மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களில் வகைக்கு ஒவ்வொன்றை ஆசிரியர் சொல்லி அனுப்ப மாணாக்கர் அந்தப் பெயர்களை மறுநாள் மறவாமல் வந்து சொன்னார்கள்.
    • (xi) இவ்வாறு, மாணவர்களின் எல்லாத் திறமைகளையும் வளர்க்கும் விதமாக கற்பித்தல் இருந்தது. : மாணவர்களும் தங்களின் அறிவினை வளர்க்கும் விதமாகக் கற்றனர்.

     43.உரிமைத்தாகம்’ கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால் கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.

    Answer:

    கதைமாந்தர்கள்:

    • முத்தையா, வெள்ளைச்சாமி, பங்காருசாமி, முத்தையா மனைவி மூக்கம்மாள்.

    முன்னுரை :

    • ஆசிரியர் பூமணி எழுதிய உரிமைத்தாகம் என்னும் சிறுகதையில் அண்ணன், தம்பியின் மன விரிசலால், தம்பி படும் துன்பத்தை எழுத்தோவியமாக்கித் தந்திருக்கிறார். அண்ணன் முத்தையன், தம்பி வெள்ளைச்சாமி.

    தம்பி வெள்ளைச்சாமி கடன் வாங்குதல் :

    • வெள்ளைச்சாமி தன் திருமணத்திற்குப் பிறகு அண்ணனைவிட்டுப் பிரிந்து விடுகிறான். இந்நிலையில் ரூ.200நிலத்தின் மீது பங்காரு சாமியிடம் கடனாக வாங்குகிறான். இது முத்தையனுக்குத் தெரியாது. ஆனால், முத்தையனின் மனைவி இதைத் தெரிந்து கொண்டு முத்தையனிடம் கூறுகிறான். வெள்ளைச்சாமியால் கடனை அடைக்க முடியவில்லை. இதற்கிடையே முத்தையனின் மனைவி தன் நகைகளை அடகு வைத்துக் கடனை அடைக்கச் சொல்கிறாள்.

    முத்தையன் பங்காரு வீட்டிற்குச் செல்லுதல் :

    • முத்தையன் ரூ.200-யை எடுத்துக் கொண்டு பங்காருசாமி வீட்டுக்குச் செல்கிறான். அண்ணன் தம்பிக்காக வந்திருப்பதை அறிந்த பங்காரு ரூ.400 தந்தால் எழுதிக் கொடுத்த பத்திரத்தைத் தருவதாகக் கூறுகிறார். வீடு திரும்பிய முத்தையன் தம்பியோடு சென்று நிலத்தை உழுகிறான்.
    • செய்தியறிந்த பங்காரு முத்தையன் மற்றும் வெள்ளைச்சாமியுடன் சண்டை புரிகிறார். கடைசியில் நீதிமன்றத்திற்குப் போவேன் என்று மிரட்டுகிறார் பங்காரு. அதை ஏற்காத அண்ணன் தம்பிகள் பங்காருவை விரட்டுகிறார்கள். அவரும் பயந்து ஓடிவிடுகிறார். இது கதையின் முடிவு.

    அண்ணன் தம்பி இணையாதிருந்தால்…..

    • பங்காருசாமி நீதிமன்றத்திற்குச் சென்றார். வழக்கறிஞர் ஒருவரைப் பார்த்து வெள்ளைச்சாமி மீது வழக்குத் தொடுத்தார். இந்தச் செய்தியை வெள்ளைச்சாமி யாரிடமும் சொல்லவில்லை. நீதிமன்றத்திற்கு இரண்டு முறை சென்று வந்தான். ஒரு நாள் பங்காருசாமியைப் பார்த்து என் நிலத்தைத் திருப்பிக் கொடுங்கள். விவசாயம் செய்து கடனை அடைக்கிறேன் என்கிறான். பங்காருசாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மனம் உடைந்த வெள்ளைச்சாமி வீட்டின் வாயில் படியிலேயே விஷம் சாப்பிட்டு மயக்க மடைகிறான்.

    மருத்துவமனையில் வெள்ளைச்சாமி :

    • வெள்ளைச்சாமியை பங்காருசாமியே மருத்துவமனையில் சேர்க்கிறார். சிகிச்சை பெறுகிறான் வெள்ளைச்சாமி, செய்தியறிந்த முத்தையன் மருத்துவமனை சென்று விபரம் அறிகிறான். முத்தையன் தன் தம்பிக்காக, பணம் கேட்டு பங்காரு மிரட்டியதால்தான் விஷம் குடித்தான் என்று காவல் துறையில் புகார் கொடுக்கச் சென்றான் பங்காருசாமி முத்தையனை வழிமறித்து அடமானப் பத்திரத்தைத் திருப்பிக் கொடுப்பதாகவும் வாங்கிய 200 ரூபாயைக் கொடுத்தாலே போதும் என்று வேண்டுகிறார். ஒப்புக்கொண்ட முத்தையன் புகார் கொடுப்பதைத் தவிர்த்து தம்பி வெள்ளைச்சாமியோடு வீடு திரும்பினான்.

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

    (OR)

    ஆ)பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.

    Answer:

    மொழிப்பற்று :

    • யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதான மொழி எதுவுமில்லை என்று கூறிய பாரதி, சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலும் அதனை உறுதிப்படுத்துகின்றார். நெல்லையப்பரிடம் அவர் கூறும் போது, ‘நீ பிறமொழிகளை அறிந்திருந்தாலும், தமிழை வளர்ப்பதை கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார். புதிய புதிய செய்திகளும் புதிய புதிய உண் மைகளும், புதிய புதிய இன்பமும் தமிழ்மொழியில் ஏற்றம் பெற வேண்டும்.
    • தமிழ்நாட்டில் வீதிகள் தோறும் தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் பெருக வேண்டும். அந்தப் பள்ளிகளில் எல்லாம் புதிய புதிய கலைகள் பயிற்சி பெற்று வளர வேண்டும். தாய்மொழியிலே கற்பதால் தமிழ் உணர்வு அதிகமாகும், தாய்நாட்டின் மீது பற்று ஏற்படும். வடநாட்டு மொழிகள் எல்லாம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பார்த்த பின்பாவது நாம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது பற்றுக்கொள்ள முயல வேண்டும். புதிய புதிய சிந்தனைகள் தமிழ்மொழியில் தோன்றல் வேண்டும் என்கிறார்.

    சமூகப்பற்று :

    • சமூகத்தின் அவலமாக இருக்கின்ற ஆண் பெண் வேறுபாடு முற்றிலுமாக அழிய வேண்டும். ஆண் உயர்ந்தவன் பெண் அடிமை என்ற நிலை சமூக அவலமாகும். அந்நிலை மாறவே ஆணும் : 9 பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள்; அவற்றில் ஒன்றிலொன்று தாழ்வில்லை என்கிறார். பெண்ணைத் தாழ்த்தினால் சமூகமே சாபக்கேட்டிற்குள்ளாகும் என்பதை உணர்த்த பெண்ணைத் தாழ்த்தினவன், தன் கண்ணைக் குத்தியவனுக்குச் சமம் என்று ஆவேசத்துடன் கூறுகின்றார். பெண்ணை வீட்டிற்குள் அடைத்தவன் தன் கண்ணை இழந்த குருடன் போலப் பரிதவிப்பான் என்றும் கூறி, ஆணும் பெண்ணும் சமம் என்ற சமூக நீதியை வலியுறுத்துகின்றார்.
    • சமூகம் வளர்ச்சி அடைய தொழில் பெருகவேண்டும், வியாபாரம் சிறக்க வேண்டும், தொழிற்சாலைகள் வளர வேண்டும் என்கிறார். சமூக மாற்றம் காண சங்கீதம், சிற்பம், இயந்திரம், பூமி, வானம், இயற்கை சார்ந்த நூல்கள் ஆயிரம் ஆயிரமாகத் தாய்மொழியில் உருவாகிட வேண்டும். அதனைக் கற்று நம் தமிழ்ச்சமூகம் மாற்றம் பெற அனைவரும் எண்ணிட வேண்டும். அதற்குரிய சக்தியை அனைவரும் பெற்றிடவும் வேண்டுமென்று பாரதியார் சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் மூலம் தன் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துகின்றார்.

    44.அடிபிறழாமல் எழுதுக:6+2=8

    அ)"விண்வேறு..... "எனத்தொடங்கும் இதில் வெற்றிபெற பாடலை எளிதாக:-

    விண்வேறு விண்வெளியில் இயங்கு கின்ற

               வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு

    மண் வேறு மண்ணோடு கலந்தி ருக்கும்

               மணல்வேறு: பனித்துளியும் மழையும் வேறு

    புண் வேறு வீரர்களின் விழுப்புண் வேறு

               புகழ்வேறு செல்வாக்கு வேறு: காணும்

    கண் வேறு கல்விக்கண் வேறு கற்றார்

              கவிநடையும் உரைநடையும் வேறு வேறு

    ஆ)"சினம்" எனத் தொடங்கும் திருக்குறளை எளிதாக:- . 

    சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

    ஏமப் புணையைச் சுடும்

    Share:

    0 Comments:

    Post a Comment

    Popular Posts