12th Tamil Solution 6 நடிகர் திலகம் Book Back Answers
Tamilnadu state board Samacheerkalvi 12th tamil book back Questions and answer guide, important question, model Question paper,guide,notes,study materials
Tamilnadu Samacheer book 12th Tamil Solutions Chapter 6.5 நடிகர் திலகம்
கற்பவை கற்றபின்
Question 1.
பராசக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், திருவிளையாடல் போன்ற திரைப்படங்களில் இடம் பெற்ற சிவாஜிகணேசனின் வசனங்களை உரிய உச்சரிப்புடன் பேசி வகுப்பறையில் நடித்துக் காட்டுக.
Answer:
கப்பலோட்டிய தமிழன் – வசனம் :
விஞ்ச்துரை : நெருப்பைக் கக்கும் எரிமலை நீங்கள். நீங்க நடந்தா பூமியே நடக்குது. பேசினா புரட்சியே வருது. எழுதினா கலகம் வருது. மந்திரவாதிங்க மாதிரி ஜனங்கள ஆட்டிவைக்கிறீங்க. என்னாமேன் என்ன? நான்ஸென்ஸ்.
வ.உ.சி : அப்படி நான் என்னய்யா பேசினேன்? எந்நாட்டு மக்கள் சுதேசி பக்தி கொள்ளச் சொன்னேன்.
விஞ்ச்துரை : சொன்னே மேன். சொன்னே. சுதேசி பொருளை வெறுக்கச் சொன்னே.
வ.உ.சி : ஆம். வியாதிக்கு மருந்தொன்று சொன்னேன்.
விஞ்ச்துரை : சும்மாகிடந்த ஜனங்கள தூண்டிவிட்ட மேன். தூண்டிவிட்ட மேன்.
வ.உ.சி : இல்ல. பயமென்னும் பள்ளத்தை தாண்டச் சொன்ன.
விஞ்ச்துரை : அதிகாரத்தை அவமானப்படுத்துன.
வ.உ.சி. : இல்ல. அகம்பாவத்தை அழிக்கச்சொன்ன.
திருவிளையாடல் – வசனம்
கூத்தன் : கேள்விகளை நீ கேட்கிறாயா…….? அல்லது நான் கேட்கட்டுமா…..?
தருமி : நீ கேக்காதே. நான் கேக்கிறேன். எனக்கு கேக்கத்தான் தெரியும்.
கூத்தன் : கேளும்….
தருமி : சற்று பொறும்.
கூத்தன் : ம்ம்ம் ….. கேளும்….
தருமி : பிரிக்கமுடியாதது என்னவோ…?
கூத்தன் : தமிழும் சுவையும்.
தருமி : பிரியக்கூடாதது…?
கூத்தன் : எதுகையும் மோனையும்.
தருமி : சேர்ந்தே இருப்பது…?
கூத்தன் : வறுமையும் புலமையும்.
Question 2.
உங்கள் பகுதியில் வாழ்ந்து வரும் கலைஞர் ஒருவரை நேரில் கண்ட அனுபவத்தை எழுதுக.
Answer:
- கலைகளை வளர்த்த பெருமைக்கு உரிய ஊர் கும்பகோணம். அவ்வூரில் பரதம், இசை, கருவி இசை முதலான கலைகள் இன்றளவும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த ஊரில்தான் மாபெரும் :6 கலைஞர்கள் கே.ஆர். இராமசாமி, எம்.ஜி.இராமச்சந்திரன், காளி.என். இரத்தினம் போன்றவர்கள் வாழ்ந்தார்கள்.
- இது கும்பகோணத்திற்கே பெருமை தரக்கூடிய ஒன்று. கும்பகோணம் பக்தகோடித் தெருவில் வசிக்கும் பரதநாட்டிய கலைஞர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவர் பெயர் மாலா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அப்பா இல்லை; அம்மா மட்டும் உண்டு. கும்பகோணம் பள்ளிகளில் படிக்கின்ற பிள்ளைகளுக்கு பரதம் கற்றுக்கொடுத்து வருகிறார்.
- எனது மகளுக்குக் பரதம் கற்றுத்தர அனுமதி கேட்டு, அவரிடம் சென்றிருந்தேன். ஒத்துக்கொண்ட அவர் தான் நாட்டியம் ஆடியபொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை என்னிடம் காட்டினார்.
- எண்வகை மெய்ப்பாடுகளையும் வெளிக்கொணர்ந்து அவர் பரதம் ஆடிய அழகு பாராட்டுதற்குரியது. அபிநயம், பாவனை, புருவ வளைவுகள், கைவிரலின் அசைவுகள் முதலானவற்றைப் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. இப்படியொரு நல்ல கலைஞர் சாதாரண வீட்டில் வாழ்கிறாரா என்ற கேள்வி எங்களுக்குள் எழுந்தது.
- தில்லானா மோகனாம்மாள் என்ற திரைப்படத்தில் கதாநாயகி பத்மினி ஆடிய ‘மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன’ என்ற பாடல் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றோம். ஒரு பத்து நிமிடம் எங்களை அமரச் சொல்லிவிட்டு அந்த அறையிலேயே அபிநயம் பிடித்து அழகாக ஆடினார். அத்தகைய ஆட்டத்தை நாங்கள் இதுவரை பார்த்ததேயில்லை.
- வாழும் கலைஞர் அவர். இவர் போன்ற கலைஞர்களை வாழ வைக்க நமது அரசு ஒரு அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இத்தகைய கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பது எனது வேண்டுகோளும் கூட. அரசு நாட்டியப் பள்ளிகள் தொடங்க வேண்டும். கலையையும், கலைஞரையும் போற்ற வேண்டும்.
- இறுதியாக, அந்தக் கலை ஞானி கொடுத்த கும்பகோணம் டிகிரி காபியோடு வீடு திரும்பினோம்.
பாடநூல் வினாக்கள்
நெடுவினா
Question 1.
மகாநடிகரைக் கண்ட பாலசந்திரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக.
Answer:
சுள்ளிக்காட்டுப் பாலச்சந்திரன், முப்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு கூலி. திரையரங்கில் வெளியாகும் திரைப்படத்தை ஆட்டோ ரிக்சாவில் விளம்பரப்படுத்தும் பையன்.
இருபது வருடங்களுக்குப் பின்:
- இருபது வருடங்களுக்குப் பின், கேரள வீதிகளில் அன்று குரல் விற்றுப்பிழைத்த பையன் சிவாஜிகணேசன் வீட்டில் அவரோடு உணவருந்தும் அற்புதச் சூழல் இன்று.
சிவாஜியும் மோகன்லாலும்:
- 1995இல் வி.பி.கெ.மேனன் படத்தில் சிவாஜியும் மோகன்லாலும் நடிக்க சம்மதித்தனர். அப்படத்தின் இயக்குநர் ராஜிவ் நாத். ஜான்பால் என்பவர் திரைக்கதை. படம் பற்றிப் பேச நடிகர் திலகம் வீட்டிற்குச் செல்ல நேரிட்டது.
வீட்டின் தோற்றம்:
- ஒரு நாள் சிவாஜியின் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றோம். சிவாஜியின் வீடல்ல அது அரண்மனை. கதவில் அழகிய வேலைப்பாடுகள்; தங்கத்தால் இழைத்த வேலைப்பாடுகள்; தங்கத்தால் இழைத்த இரண்டு பெரிய யானைத் தந்தங்கள். மாடிக்குச் சென்றோம். மாடி ஏறும்போது கட்டபொம்மனின் கம்பீரத் தோற்றத்தில் சிவாஜி. அடுத்து சத்ரபதி சிவாஜி. இன்னொரு புறத்தில் பிரஞ்சு அரசு வழங்கிய செவாலிய விருது கண்ணாடிப் பெட்டியில் இருந்தது.
சிவாஜியின் வரவேற்பும் உபசரிப்பும்
- மாடியில் ரசித்தபடியே சென்ற எங்களை மாம்பழச் சாறு கொடுத்து வரவேற்றனர் தலைவனும், தலைவியும். அப்போது அங்கே சிங்க நடை நடந்து வரும் ராஜராஜ சோழனைப் பார்த்து அவர் கால்தொட்டு வணங்கினோம். பதிலுக்கு ஆசிர்வாதம் செய்தார். உட்காரச் சொன்னார். ராஜிவ் நாத்தும் ஜான்பாலும் சிவாஜியிடம் கதை – கதாபாத்திரம் பற்றிப் பேசினர்.
சிவாஜியின் அங்க அசைவுகள்:
- அவர்களிடம் பேசும்போது புருவ அசைவு, கண்நோக்கு, முக அபிநயம், உதடு, கைவிரல், இவற்றின் செயல்பாடு கண்டு பாலச்சந்திரன் மெய்மறந்தார் ருத்ரன், கர்ணன், காளிதாசன், பாரதி, கட்டபொம்மன், ராஜராஜசோழன் இன்னபிற கதாபாத்திரங்களில் சிவாஜி பாலச்சந்திரனின் கண்களில் மின்னினார்.
சிவாஜி விசாரித்தல்:
- ராஜிவ் நாத்திடம் பாலச்சந்திரனைக் காட்டி “இந்தப்பையன் யாரு என்றார் சிவாஜி. மலையாளக் கவிஞன் என்று அறிமுகப்படுத்தப்பட்டார். சுள்ளிக்காட்டுப் பாலசந்திரன் சிவாஜி பாலச்சந்திரனைப் பார்த்து வணக்கம் என்றார். எங்களை உள்ளே அழைத்தார்.
சிவாஜியின் புகைப்படங்கள்:
- எகிப்தின் முன்னாள் அதிபர் நாசர் முதல் ராஜ்நபூர் வரை உள்ள முன்னோடிகளுடன் சிவாஜி 1 எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் கண்டோம்.
சிவாஜி-பட்டம்:
- விழுப்புரத்தில் ஏழையாகப் பிறந்த சிவாஜி ஐந்து வயதிலேயே நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தவர். அண்ணாதுரையின் சத்ரபதி சிவாஜியாக நடித்ததன் காரணமாக சிவாஜி பட்டம் கிடைத்தது. பராசக்திக்குப் பிறகு வெற்றியாளரானார் சிவாஜி. வீரபாண்டிய கட்டபொம்மனால் உலகப் பிரசித்திப் பெற்றார்.
சிவாஜியிடம் ராஜிவ்நாத்தின் கேள்வி:
- சிவாஜியிடம் கட்டபொம்மனின் வசனம் ஞாபகம் இருக்கிறதா என்றார். ஒரு வசனம் சொல்ல முடியுமா என்றார்.
சிவாஜியின் வசனம்:
- ஏர்பிடித்தாயா, களை வெட்டினாயா… மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே என்று சிங்கக் கர்ஜனை செய்தார் சிவாஜி. எல்லாம் ஒரே மூச்சில் மயங்கிப் போனோம் நாங்கள்.
சிவாஜயின் கேள்வி:
- மலையாளத்தில் சரித்திர புராணம், நாடகங்கள் இல்லையா என்றார் சிவாஜி. இருக்கிறது என்றனர். உடனே ராஜிவ், பாலச்சந்திரனை ராவணனின் வசனத்தைச் சொல்லச் சொன்னார். சிவாஜியை வணங்கி, இராவணனாக மாறினார் பாலன். இலங்கையின் போர்க்கொடிகள் பறக்கட்டும்…. நானே வெல்வேன் என்று முடித்தார் பாலன். கைதட்டிப் பாராட்டினார்.
- இராவண வேடத்தில் நீங்கள் (சிவாஜி) நடித்தால் நன்றாக இருக்கும். ராஜிவ்நாத் சிவாஜியிடம் சொன்னார். என்ன பண்றது எனக்கு மலையாளம் தெரியாதே என்றார் சிவாஜி. வயசும் ஆயிடுச்சி என்றாா சிவாஜி. அதன்பிறகு அன்னை கமலாவின் கைகளால் விருந்து சாப்பிட்டோம். எல்லாம் முடிந்து புறப்பட்டோம். வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தனர் சிவாஜி-கமலா தம்பதியினர். வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டே திரும்பினோம்.
Question 2.
உங்கள் ஊர்ப்பகுதியில் வாழும் கலைஞர் ஒருவரை நேரில் பார்த்த அனுபவத்தை விவரித்துக் கட்டுரையாக்குக.
Answer:
வாழும் கலைஞர் :
- இன்றும் இசை மும்மூர்த்திகளின் ஒருவரான தியாகராஜருக்கு இசை விழா தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் நிகழ்ந்து வருகிறது. தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறைப் பகுதிகளில் இசையின் பற்பல துறைகளில் கலைஞர்கள் இன்றும் இருக்கிறார்கள். தஞ்சை மாவட்டம் என்றாலே நன்செய் மட்டுமல்ல. நல்லிசையிலும் கலைஞர்கள் இருப்பது சிறப்பு.
திருவிசநல்லூர் ஜெயராமன் :
- கும்பகோணத்தின் கிழக்கே 5 கி,மீட்டர் தொலைவில் உள்ள ஊர் திருவிசநல்லூர். அவ்வூரில் எல்லாராலும் அறியப்பட்ட திரு.ஜெயராமன். நாதஸ்வரக் கலைஞரைப் பார்க்கச் சென்றேன். ஓட்டு வீடு, வீட்டின் முற்பகுதியில் இரண்டு நாற்கலிகள், ஒரு நீண்ட மேசை அவ்வளவுதான். வீட்டின் முன்புறச் சுவரில் காருக்குறிச்சி அருணாச்சலம், மதுரை M.P.M. பொன்னுச்சாமி சகோதரர்கள், ராஜரத்தினம் பிள்ளை இவர்களின் புகைப்படங்கள், பார்த்துக் கொண்டிருக்கும் போதே வணக்கம், வாங்க தம்பி என்ற குரல். நானும் எழுந்து வணங்கி நின்றேன். எழுபது வயதிருக்கும்.
- வறுமையின் சாயல் தெரிந்தது. ஐயா, உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன் என்றேன். எங்கள் வீட்டில் நாதஸ்வரம் செய்வது தொழிலாக இருந்தது. எனது தாத்தா காலத்தில் இருந்தே நாதஸ்வரத்தைக் கையில் எடுத்து விட்டேன். எனக்கு என் தந்தை மூச்சை அடக்கும் பயிற்சியை நீருக்குள் மூழ்கிக் கற்றுக் கொடுத்தார். பலூன்களில் காற்றை ஒரே மூச்சில் ஊதப் பயிற்சி அளித்தார். நாதஸ்வரத்தைப் பிடிக்கும் முறையைச் சொன்னார். மன ஒருமைப்பாடு பற்றிக் கூறினார். கீர்த்தனங்களில் ஏற்ற இறக்கம், ஒவ்வொன்றிற்கும் இடைவெளி நேரம் சொல்லிக் கொடுத்தார்.
- எனது தந்தை சொல்லிக்கொடுத்த அடிப்படைப் பயிற்சியும், எனக்குள் இருந்த இசை அறிவும், ஆவலும் என்னை மக்களுக்குப் பரிச்சயம் ஆக்கின. வருமானம் என்பது போதுமானதாக இருந்தாலும் தேவைகளை பூர்த்திச் செய்ய பற்றாக்குறைதான். இப்பொழுது எனக்குள்ளே ஒரே ஒரு ஏக்கம்தான் என்னவென்றால் நான் கற்ற கொஞ்சம் அதாவது குறைவான கலையை யாருக்காவது சொல்லிக் கொடுக்கணும். அதுதான் என் ஜீவனுடைய ஆவல் என்றார். தில்லானா மோகனாம்பாள் படத்தின் நலம்தானா வாசித்துக்காட்டினார்.
- அப்படியொரு வாசிப்பு. எங்களாலான ஒரு அன்பளிப்பை அவருக்கு அளித்து வீடு திரும்பினோம். அந்த இசைமேதை – நாமெல்லாம் படிக்காத ஒரு மேதை.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
‘நடிகர் திலகம்’ என்னும் பாடப்பகுதி மலையாளக்கவிஞரும் நடிகருமான பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதிய …………… என்னும் நுலில் இடம்பெற்றுள்ளது.
அ) சிதம்பரசித்த
ஆ) சிதம்பர ஸ்மரண
இ) பாலச்சந்திர ஸ்மரண
ஈ) சிவாஜி ஸ்மரண
Answer:
ஆ) சிதம்பர ஸ்மரண
Question 2.
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய நூலை ‘சிதம்பர நினைவுகள்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர்
அ) கே.வி. சைலஜா
ஆ) ராஜீவ்நாத்
இ) ஜான்பால்
ஈ) வெ.ஸ்ரீராம்
Answer:
அ) கே.வி. சைலஜா
Question 3.
நடிப்புலகின் சக்கரவர்த்தி எனப்படுபவர்
அ) மார்லன் பிராண்டோ
ஆ) சார்லி சாப்ளின்
இ) சிவாஜி கணேசன்
ஈ) அர்னால்டு
Answer:
இ) சிவாஜி கணேசன்
Question 4.
‘என்னைப் போல் சிவாஜி நடிப்பார். ஆனால் என்னால்தான் சிவாஜிபோல் நடிக்க முடிக்க முடியாது’ என்று குறிப்பிட்ட நடிகர்
அ) மார்லன் பிராண்டோ
ஆ) அமிதாப் பச்சன்
இ) அர்னால்டு
ஈ) ஜாக்கிசான்
Answer:
ஆ) அமிதாப் பச்சன்
Question 5.
சிவாஜி கணேசனுக்குச் செவாலியர் விருதளித்த அரசு
அ) ஆங்கில அரசு
ஆ) பிரெஞ்சு அரசு
இ) இந்திய அரசு
ஈ) இலங்கை அரசு
Answer:
ஆ) பிரெஞ்சு அரசு
Question 6.
பொருத்திக் காட்டுக.
அ) ஊழித்தாண்டவம் – 1. பாரதி
ஆ) கவச குண்ட லம் – 2. காளிதாசன்
இ) காளமேகம் – 3. கர்ண ன்
ஈ) உன்னதக்கவி – 4. ருத்ரன்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 2, 1, 4, 3
ஈ) 2, 3, 4, 1
Answer:
அ) 4, 3, 2, 1
Question 7.
சிவாஜி கணேசன் பிறந்த ஊர்
அ) தஞ்சாவூர்
ஆ) விழுப்புரம்
இ) அரியலூர்
ஈ) வடலூர்
Answer:
ஆ) விழுப்புரம்
Question 8.
சிவாஜி கணேசனின் கல்வித் தகுதி
அ) பள்ளிக்கூடத்தில் படித்ததேயில்லை
ஆ) இளங்கலை பட்டம்
இ) முனைவர் பட்டம்
ஈ) மூன்றாம் வகுப்பு
Answer:
அ) பள்ளிக்கூடத்தில் படித்ததேயில்லை
Question 9.
சிவாஜி கணேசன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக நாடகக் கமம்பெனியில் சேர்ந்த போது வயது
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) எட்டு
Answer:
ஆ) ஐந்து
Question 10.
அண்ணாத்துரையின் நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக வேடமேற்று நடித்தவர்
அ) எம்.ஜி.ஆர்.
ஆ) சின்னையா கணேசன்
இ) ஜெமினி கணேசன்
ஈ) எம்.ஆர்.இராதா
Answer:
ஆ) சின்னையா கணேசன்
Question 11.
வி.சி. கணேசனுக்கு ‘சிவாஜி கணேசன்’ என்று பெயரிட்டவர்
அ) அறிஞர் அண்ணா
ஆ) கு.காமராசர்
இ) தந்தை பெரியார்
ஈ) மு. கருணாநிதி
Answer:
இ) தந்தை பெரியார்
Question 12.
சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம்
அ) தங்கப்பதக்கம்
ஆ) வீரபாண்டிய கட்டபொம்மன்
இ) பராசக்தி
ஈ) பாசமலர்
Answer:
இ) பராசக்தி
Question 13.
சிவாஜி கணேசனை உலக பிரசித்தி பெற்ற நடிகனாய் மாற்றிய திரைப்படம்
அ) பராசக்தி
ஆ) ஞானஒளி
இ) ராஜபாட் ரங்கதுரை
ஈ) வீரபாண்டிய கட்டபொம்மன்
Answer:
ஈ) வீரபாண்டிய கட்டபொம்மன்
Question 14.
(கெய்ரோ) ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்ட விருது
அ) சிறந்த நடிகருக்கான விருது
ஆ) செவாலியர்
இ) தாதாசாகெப்
ஈ) ஆஸ்கார்
Answer:
அ) சிறந்த நடிகருக்கான விருது
Itha pdf a kudunga bro
ReplyDelete