> 12th Tamil Solutions Chapter 4 இதில் வெற்றி பெற ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

12th Tamil Solutions Chapter 4 இதில் வெற்றி பெற

12th Tamil Solutions Chapter 4.2 இதில் வெற்றி பெற

Tamilnadu state board Samacheerkalvi book 12th Tamil unit-6 Book back back Questions and answer Guide, notes,important Questions, model Question paper



    Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.2 இதில் வெற்றி பெற

    கற்பவை கற்றபின்

    Question 1.

    பேச்சு வழக்கில் பயன்படுத்துகின்ற உவமைச் சொற்களைத் தொகுக்க. இவை கருத்தை வெளிப்படுத்துவதற்கு எவ்வாறு பயன்படுகின்றன என்பது குறித்துக் குழுவாக உரையாடுக.

    Answer:

    பாலு : ஓடறவனுக்கு ஒம்பதாம் இடத்தில் சுக்கிரன்னு சொல்கிறார்களே அதன் அர்த்தம் என்ன?

    வேலு : ஓடறவன்னா, ஓய்வில்லாமல் உழைக்கிறவன். ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன்னா

    – சுக்கிரதிசை என்பது மக்களுக்குச் செல்வத்தை அள்ளிக் கொடுப்பான் என்று சொல்வார்கள்.

    பாலு : நல்ல விளக்கம் இது. இன்னும் ஒரு சந்தேகம்?

    வேலு : என்ன?

    பாலு : காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதை. இதன் பொருளென்ன?

    வேலு : பனைமரத்தில் பனம்பழம் பழுத்தவுடன் தானே விழும். ஆனால் காக்கா போய் பனை மரத்தில் உட்காரவும் அதனால் பனம்பழம் விழுந்ததாம் என்பது கருத்து. இதன் விளக்கம் குழந்தை ஒன்று மழையே மழையே வா என்று பாடியதும் மழை வந்துவிட்டதாம். மழை தானேதான் பொழியும் யாரும் வரவைக்க முடியாது.

    பாலு : கடைசியாக, ஒரு விளக்கம் தேவைப்படுகிறது. சாண் ஏற முழம் சறுக்கும் என்பதன் விளக்கம் கூறு.

    வேலு : வரவு இரண்டணா என்றால் செலவு ஒரு அணாவாக இருக்க வேண்டும். அது இயல்பான வாழ்க்கை. வரவு இரண்டணா என்றால் செலவு நாலணாவாக இருந்தால், அச்செய்கைதான் சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதாகும்.

    பாடநூல் வினாக்கள்

    பலவுள் தெரிக

    Question 1.

    சுரதா நடத்திய கவிதை இதழ்

    அ) இலக்கியம்

    ஆ) காவியம்

    இ) ஊர்வலம்

    ஈ) விண்மீன்

    Answer:

    ஆ) காவியம்

    Question 2.

    “விண்வேறு ; விண்வெளியில் இயங்கு கின்ற

    வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு” – தொடர் தரும் முழுமையான பொருள்

    அ) விண்ணும் வெண்மதியும் வேறு வேறு

    ஆ) விண்வெளியும் செங்கதிரும் வேறு வேறு

    இ) வெண்மதியும் முகிலும் வேறு வேறு

    ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு

    Answer:

    ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு

    குறுவினா

    Question 1.

    வசனம், கவிதை வேறுபாடு தருக.

    Answer:

    வசனம் : 

    • எதுகை, மோனை சேர்க்காமல், அடி என்ற அளவு இல்லாமல் எழுதுகின்ற வடிவம் வசனமாகும்.

    கவிதை :

    • எதுகை, மோனை சேர்க்க வேண்டும். அடிக்கென்று எல்லைவைத்து எழுதப்படுவதே கவிதையாகும்.

    நெடுவினா

    Question 1.

    கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்க.

    Answer:

    கவிதை :

    • சொல்லைச் சிறந்த முறையில் தேர்வு செய்து எதுகை மோனை அமைத்து எழுத வேண்டும்.
    • அடியளவு தெரிந்து கவிதை எழுத வேண்டும்.
    • சொற்களை அதற்குரிய இடங்களில் பொருத்தி வைத்து கவிதையினை உருவாக்குதல் வேண்டும்.

    கவிதைக்குரிய உறுப்புகள் :

    • எழுத்துகளைக் கொண்டு சிறந்த அசைகளை உருவாக்குதல் வேண்டும்.
    • அசைகளைக் கொண்டு சீர்களை உருவாக்குதல் வேண்டும்.
    • சீர்களை முறையாக உருவாக்கினோம் என்றால் இரண்டு சீர்களுக்கு இடையே தளைகள் உருவாகும். தளைகளை அந்தந்தந்த பாவுக்குரிய முறைப்படி அமைத்தால் கவிதையில் பிழைகள் தோன்றாது. தளைகள் ஒன்றாகச் சேர்ந்தால் அடிகள் உருவாகும்.
    • இளமைத் அடிகளை ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி வைத்தோம் என்றால் தொடைகள் தோன்றும்.
    • அதிக அளவில் சிறந்த தொடைகள் அமைந்து கவிதை வரிகள் இருந்தால் அது சிறந்த கவிதையாக இருக்கும்.

    சிறந்த கவிதை :

    • (i) கவிதைக்குரிய உறுப்புகளை வைத்துக் கவிதை எழுதும் போது, கவிதையின் உறுப்பாகிய சீர்களில் மாச்சீர், விளச்சீர் வரும்படி எழுதினால் பாடல்களிலும் தேமா, புளிமா காய்க்கும்.
    • (ii) தவறாக சீர்கள் அமைந்தால் பாடல் தவறாக மாறிவரும்.
    • (iii) செடியில் பூத்தப் பூவில் உள்ள தேனைக் குடிக்க வண்டுகள் தேடி வருவது போல, சிறப்புடன் எழுதிய புலவரின் பாடல் வரிகளில் எப்போதும் புகழ் தங்கும். . இவைகளை அறிந்து கொண்டு கவிதை எழுத வேண்டுமென்று கவிஞர் சுரதா கூறுகிறார்.

    கூடுதல் வினாக்கள்

    பலவுள் தெரிக

    Question 1.

    மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவது

    அ) கவிதை

    ஆ) கொச்சைச் சொற்கள்

    இ) பாட்டு

    ஈ) உரைநடை

    Answer:

    ஈ) உரைநடை

    Question 2.

    சிறந்த படைப்புகள் உருவாக பெரும் துணையாக இருப்பது

    அ) கவிதை

    ஆ) கட்டுரை

    இ) கல்வி

    ஈ) பள்ளிக்கூடம்

    Answer:

    இ) கல்வி

    Question 3.

    அடியின் கீழே அடியிருந்தால் வருவது

    அ) சீர்

    ஆ) அசை

    இ) தளை

    ஈ) தொடை

    Answer:

    ஈ) தொடை

    Question 4.

    இரண்டுசீரின் இடைவெளியில் வருவது

    அ) தளை

    ஆ) அசை

    இ) எதுகை

    ஈ) மோனை

    Answer:

    அ) தளை

    Question 5.

    எதுகை, மோனை இல்லாமல் அடியளவு அறிந்திடாமல் வருவது

    அ) உரைநடை

    ஆ) செய்யுள்

    இ) தளை

    ஈ) தொடை

    Answer:

    அ) உரைநடை

    Question 6.

    வெள்ளைப்பாட்டின் இறுதிச்சீர் தருவது

    அ) நாள்

    ஆ) காசு

    இ) மோனை

    ஈ) இயைபு

    Answer:

    ஆ) காசு


    Question 7.

    முன்னோர் போல் கற்று வந்தால் உள்ளத்தில் விளைவது

    அ) அருள், அறம்

    ஆ) அறம், மறம்

    இ) அறம், பொருள்

    ஈ) பொருள், இன்பம்

    Answer:

    இ) அறம், பொருள்

    Question 8.

    சுரதாவின் இயற்பெயர்

    அ) கோபால்

    ஆ) இராசகோபால்

    இ) துரைகோபாலன்

    ஈ) இராசகோபாலன்

    Answer:

    ஈ) இராசகோபாலன்

    Question 9.

    கூற்று 1 : பழுத்திருந்தால் சாறு வரும் ; வயலில் தண்ணீர் பாய்ந்திருந்தால் ஏர் வரும்.

    கூற்று 2 : அடியின் கீழ் அடியிருந்தால் தொடை வரும்.

    அ) கூற்று இரண்டும் தவறு

    ஆ) கூற்று இரண்டும் சரி

    இ) கூற்று 1 சரி 2 தவறு

    ஈ) கூற்று 1 தவறு 2 சரி

    Answer:

    ஆ) கூற்று இரண்டும் சரி


    Question 10.

    கூற்று : எதுகை மோனை சேர்க்காமல், அடியளவை அறிந்திடாமல் வார்க்கின்ற வடிவந்தான் வசனம்.

    காரணம் : எளிய மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவதே உரைநடை.

    அ) கூற்று சரி காரணம் தவறு

    ஆ) கூற்று தவறு காரணம் சரி

    இ) கூற்று சரி காரணம் சரி

    ஈ) கூற்று தவறு காரணம் தவறு

    Answer:

    இ) கூற்று சரி காரணம் சரி


    Question 11.

    கூற்று 1 : எழுத்தெண்ணி முன்னோர் போல் கற்றுவந்தால் அறம் பொருள் உள்ளத்தில் விளையும்.

    கூற்று 2 : தேமாவும், புளிமாவும் மரத்தில் காய்க்கும் ; சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்.

    அ) கூற்று இரண்டும் சரி

    ஆ) கூற்று 1 சரி 2 தவறு

    இ) கூற்று 1 தவறு 2 சரி

    ஈ) கூற்று இரண்டும் தவறு

    Answer:

    அ) கூற்று இரண்டும் சரி

    Question 12.

    சரியானதைத் தேர்க.

    அ) பூக்கும் வரை பூ என்போம்.

    ஆ) ஆக்கிய பின் அரிசி என்றும்.

    இ) யாப்பில் வந்தடங்கும் வார்த்தைகளே செய்யுள்.

    ஈ) கவிநடையும் உரைநடையும் வேறுவேறு அல்ல.

    Answer:

    இ) யாப்பில் வந்தடங்கும் வார்த்தைகளே செய்யுள்.

    Question 13.

    சரியானதைத் தேர்க.

    அ) சிறந்த கேள்வி எழ்புவதால் படிப்பு வரும்

    ஆ) நுணுக்கத்தோடே முன்னோர் போலக் கற்க வேண்டாம்.

    இ) மொழியை அறியாமல் எழுதுவோரே புகழ் அடைவார்.

    ஈ) வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு.

    Answer:

    ஈ) வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு.

    Question 14.

    பொருந்தாததைத் தேர்க.

    அ) கண்வேறு ; கல்விக் கண் வேறு.

    ஆ) புகழ் வேறு ; செல்வாக்கு வேறு.

    இ) வெண்மதியும், செங்கதிரும் முகிலும் வேறுவேறல்ல.

    ஈ) மண்வேறு மண்ணோடு கலந்திருக்கும் மணல் வேறு.

    Answer:

    இ) வெண்மதியும், செங்கதிரும் முகிலும் வேறுவேறல்ல.

    Question 15.

    பொருந்தாததைத் தேர்க.

    அ) பழம் – சாறு

    ஆ) தண்ணீ ர் – எர்

    இ) அடி – இரண்டுசீர் இடை

    ஈ) பா தொடை நன்கு அமை

    Answer:

    இ) அடி – இரண்டுசீர் இடை

    Question 16.

    பொருத்துக.

    அ) தொடைகள் – 1. அசைகள்

    ஆ) தளைகள் – 2. தொடைகள்

    இ) எழுத்துகள் – 3. பாக்கள்

    ஈ) அடியின் கீழ் அடிகள் – 4. சீரின் இடைவெளியில்


    அ) 3, 4, 1, 2

    ஆ) 3, 1, 2, 4

    இ) 3, 1, 4, 2

    ஈ) 4, 3, 2, 1

    Answer:

    அ) 3, 4, 1, 2

    Question 17.

    பொருத்துக.

    அ) எரு – 1. ஆராய்ச்சி

    ஆ) கேள்வி – 2. குளிர்

    இ) அத்தி இரவு – 3. பயிர்

    ஈ) கற்றால் விளையும் – 4. அறம் பொருள்

    அ) 3, 2, 1, 4

    ஆ) 3, 1, 2, 4

    இ) 2, 4, 3, 1

    ஈ) 4, 2, 1, 3

    Answer:

    ஆ) 3, 1, 2, 4

    Question 18.

    இதில் வெற்றிபெற என்னும் சுரதாவின் பாடலில் இடம்பெற்றுள்ள பாவகை

    அ) அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    ஆ) எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    இ) கலிவிருத்தம்

    ஈ) நேரிசை ஆசிரியபா

    Answer:

    ஆ) எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    Question 19.

    இதில் வெற்றிபெற என்னும் சுரதாவின் கவிதை இடம்பெற்றுள்ள காதைத் தொகுப்பு

    அ) தேன்மழை

    ஆ) துறைமுகம்

    இ) அமுதும் தேனும்

    ஈ) மங்கையர்க்கரசி

    Answer:

    ஆ) துறைமுகம்

    Question 20.

    உவமைக்கவிஞர் என்று சிறப்பிக்கப்படுபவர்

    அ) சுரதா

    ஆ) வெ.ராமலிங்கனார்

    இ) அப்துல் ரகுமான்

    ஈ) மு.மேத்தா

    Answer:

    அ) சுரதா

    Question 21.

    சுரதா நடத்திய இதழ்

    அ) காவியம்

    ஆ) தென்றல்

    இ) குயில்

    ஈ) எழுத்து

    Answer:

    அ) காவியம்

    Question 22.

    சுரதா என்பதன் விரிவாக்கம்

    அ) சுப்புரத்தினதாசன்

    ஆ) சுதாரகுநாததாசன்

    இ) சுப்பிரமணியரத்தினதாசன்

    ஈ) இவற்றில் எதுவுமில்லை

    Answer:

    அ) சுப்புரத்தினதாசன்


    Question 23.

    இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இலக்கிய ஏடுகளை நடத்தியவர்

    அ) சுரதா

    ஆ) அப்துல் ரகுமான்

    இ) கண்ண தாசன்

    ஈ) பாரதிதாசன்

    Answer:

    அ) சுரதா

    Question 24.

    சுரதா பெற்றுள்ள விருதுகள்

    i) தமிழக அரசின் கலைமாமணி விருது

    ii) பாரதிதாசன் விருது

    iii) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது

    அ) i), ii) சரி

    ஆ) ii), iii) சரி

    இ) iii) மட்டும் தவறு

    ஈ) மூன்றும் சரி

    Answer:

    ஈ) மூன்றும் சரி

    Question 25.

    தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும்;

    சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்; – என்று எழுதியவர்

    அ) சுரதா

    ஆ) அப்துல் ரகுமான்

    இ) கண்ண தாசன்

    ஈ) பாரதிதாசன்

    Answer:

    அ) சுரதா

    Question 26.

    விண்வேறு; விண்வெளியில் இயங்கு கின்ற

    வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு – என்னும் அடிகளில் இடம்பெற்றுள்ள இலக்கிய நயம்

    அ) எதுகை

    ஆ) இயைபு

    இ) அந்தாதி

    ஈ) இவற்றில் எதுவுமில்லை

    Answer:

    அ) எதுகை

    Question 27.

    சுரதாவின் ‘காவியம்’ என்னும் இதழ்

    அ) முழுக்க முழுக்கக் கவிதைகளைக் கொண்டது.

    ஆ) முழுக்க முழுக்க சிறுகதைகளைக் கொண்டது.

    இ) குறும்புதினங்களின் தொகுப்பினைக் கொண்டது.

    ஈ) இவற்றில் எதுவும் கொண்டதில்லை.

    Answer:

    அ) முழுக்க முழுக்கக் கவிதைகளைக் கொண்டது.

    Question 28.

    தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் உள்ளிட்ட நூல்களைப் படைத்தவர்

    அ) சுரதா

    ஆ) அப்துல் ரகுமான்

    இ) வாணிதாசன்

    ஈ) மு.மேத்தா

    Answer:

    அ) சுரதா

    குறுவினா

    Question 1.

    புண் வேறு ; வீரர்களின் விழுப்புண் வேறு ;

    புகழ் வேறு ; செல்வாக்கு வேறு ; காணும் – இப்பாடல் வரிகளில் அமைந்துள்ள நயங்களை எடுத்து

    எழுது.

    Answer:

    சீர் மோனை – புண்வேறு – புகழ்வேறு

    இயைபு – ‘வேறு’ என்ற சொல் ஓசை நயத்துடன் சீர்களில் இடம் பெற்றுள்ளது.

    Question 2.

    ‘இதில் வெற்றி பெற’ என்ற சுரதாவின் கவிதையில் இடம் பெற்றுள்ள உவமை எடுத்து எழுதுக.

    Answer:

    • ‘செடியில் பூத்த பூமீது வண்டுவந்து தங்கும்’.

    Question 3.

    புண் வேறு, விழுப்புண் வேறு – விளக்குக.

    Answer:

    புண்:

    • உடலில் காயத்தால் ஏற்படுவது. இது இயல்பாகவோ, விபத்து மூலமாகவோ நோய் மூலமாகவோ ஏற்படலாம்.

    விழுப்புண் :

    • விழுப்புண்ணும் உடலில் ஏற்படுவதுதான். ஆனால் இது வீரத்தினை வெளிப்படுத்தும் எதிரியுடன் போரிட்டு பெற்ற புண்ணைக் குறிக்கும்.


    Question 4.

    கவிஞர் சுரதா நடத்திய இதழ்கள் யாவை?

    Answer:

    • இலக்கியம், விண்மீன், ஊர்வலம், காவியம்.

    Question 5.

    கவிஞர் சுரதா அவர்கள் பெற்றுள்ள விருதுகள் யாவை?

    Answer:

    • தமிழக அரசின் கலைமாமணி விருது.
    • பாரதிதாசன் விருது.
    • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது.

    Question 6.

    உரைநடை, கவிதை – வேறுபடுத்துக.

    Answer:

    • உரைநடை என்பது மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவது.
    • கவிதை என்பது அச்சொற்கள் எதுகை, மோனை, இயைபு, முரண், சந்தம் முதலிய யாப்பிலக்கண நெறிகளுக்கு உட்பட்டு அடைவது.

    Question 7.

    அறம்பொருள்கள் உள்ளத்தில் விளைய என்ன செய்ய வேண்டும் என்கிறார் சுரதா?

    Answer:

    • நுட்பமான எழுத்தை எண்ணி முன்னோர்கள் போன்று கற்று வரும் பட்சத்தில், அறம் பொருள்கள் உள்ளத்தில் விளையும் என்று சுரதா கூறுகிறார்.

    Question 8.

    விண்வெளியில் இயங்குவனாகச் சுரதா கூறுவன யாவை?

    Answer:

    • வெண்மதி (வெண்ணிலவு)
    • செங்கதிரோன் (சூரியன்)
    • முகில் (மேகம்)

    சிறுவினா

    Question 1.

    ‘வேறு’ என்ற சொல்லைப் பயன்படுத்தி கவிஞர் கவிதை புனைத்துள்ள கவித்திறமையை விளக்குக.

    Answer:

    • வானம் வேறு, ஆனால் வானத்தில் இயக்கும் நிலவும், கதிரவனும் மேகமும் வேறு.
    • மண் பலவகைப்படும். செம்மண், வண்டல்மண், கரிசல் மண் எனலாம். ஆனால், மண்ணில் சாய்ந்திருக்கும் மணல் என்பது வேறு.
    • பனித்துளியும் நீர்தான் உள்ளது. மழைத்துளியிலும் நீர்தான் ஆனால் இரண்டும் வெவ்வேறு.
    • புண் என்றால் உடம்பில் ஏற்படும் காயம் தான், ஆனால் சாதாரணமாக வருவது புண் ; போரில் பெறுவது விழுப்புண்.
    • புகழ் என்பதும் செல்வாக்கு என்பதும் எல்லோருக்கும் நம்மைத் தெரியும் என்றே கூறப்பட்டாலும், புகழ் என்பது கல்வி, நற்செயலால் வருவது, ஆனால் செல்வாக்கு என்பது பொருளால் வருவது.
    • காணும் கண் ; கல்விக்கண் வேறு – பார்க்கும் கண்ணால் உலகைப் பார்த்துக் கொள்ளலாம். கல்விக் கண்ணால் அறியாமை அகன்று நாம் அகஒளியைப் பெறுகின்றோம்.
    • இவ்வாறுதான் கவிதையும் உரைநடையும் எழுதப்படுவனவாக இருந்தாலும் இரண்டின் நடையழகும் வேறு வேறாகும்.

    Question 2.

    பூக்கும் வரை அரும்பென்றும் பூத்த பின்பே

    பூவென்றும் சொல்லுகின்றோம் அதுபோல் சொல்லைச்

    சேர்க்கின்ற நேரத்தில், எதுகை மோனை

    சேர்க்காமல் அடியளவை அறிந்திடாமல் – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.

    Answer:

    இடம் :

    • இப்பாடல் வரியானது கவிஞர் சுரதாவின் துறைமுகம் என்ற கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள “இதில் வெற்றிபெற” என்னும் பகுதியில் உள்ளது.

    பொருள் :

    பூக்கும் வரை அரும்பு பூத்தப்பின் பூ

    தனியாக இருந்தால் சொல் முறையாகச் சேர்த்தால் கவிதை

    விளக்கம் :

    • மரத்தில் இருக்கும் பூவானது விரியாமல் இருக்கும் வரை மொட்டு என்றுதான் அழைக்கப்படும். அதுவே பூத்துவிட்டால் அதனைப் பூ என்று அழைப்போம் அதுபோன்றுதான் பரவலாக இருக்கும் எல்லா வார்த்தைகளையும் சரியான முறையில் எதுகை, மோனையுடன், அடியளவையும் அறுதியிட்டுச் சேர்த்தால் அதனைக் கவிதை என்போம். அதுவே எதுகை, மோனை இல்லாமல், அடிவரையரையின்றி வந்தால் அதனை உரைநடை என்போம் என்று கவிஞர் கூற வரும் இடத்தில் இப்பாடல் அடியினை எழுதியுள்ளார்.

    Question 3.

    ‘வரும்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திக் கவிஞர் சுரதா எழுதியுள்ளவை யாவை?

    Answer:

    • பழம் பழுத்திருந்தால் அதிலிருந்து சாறு வரும்; வயலில் தண்ணீர் பாய்ந்தால் உழவுத் தொழிலை மேற்கொள்ள ஏர்கள் வரும்.
    • எழுத்துகள் ஒன்றோடு ஒன்றாக இணைந்து அசைகள் வரும்; செய்யுளில் இரண்டு சீர்களின் இடையிலே சரியான தளைகள் வரும்.
    • தளைகள் முறையாக அமைந்து அடிகள் வரும்; அடிகளை வரிசையாக அடிக்கியிருந்தால் தொடைகள் வரும்.
    • தொடைகள் சரியாக அமைந்து இருந்தால் முறையான கவிதை உருவாகும்.

    Question 4.

    ‘தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும் ;

    சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.

    Answer:

    இடம்

    • இப்பாடல் வரியானது கவிஞர் சுரதாவின் துறைமுகம்’ என்று கவிதைத் தொகுப்பில் இடம் : பெற்றுள்ள “இதில் வெற்றிபெற” என்னும் பகுதியில் உள்ளது.

    பொருள் :

    மாங்காயும், புளியங்காயையும் மரத்தில் காய்ப்பதாகும். அதைப் போன்று செய்யுளிள் முறையாக சீர்கள் அமைக்கப்பட்டால் அச்சீர்களிலும் இவை தோன்றும்.

    விளக்கம் :

    • மாமரத்திலும், புளியமரத்திலும் முறையான பருவநிலைகள் நிலவி எவ்விதமான நோய்த்தாக்குதலும் இல்லாமல் இருந்தால் மிகுதியாக மாங்காயும், புளியங்காயும் மரத்திலே காய்த்துக் கிடக்கும். அதுபோலவே, எழுத்துகளைக் கொண்டு சீர்கள் அமைக்கும் போது முறையான எழுத்துகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சிறப்பான சீர்கள் அமைந்தால் அந்தச் சீர்களுக்கு இடையே இந்தத் தேமா, புளிமா என்ற அசை வாய்ப்பாடு நன்றாகக் காய்க்கும்.

    Question 5.

    கவிஞர் சுரதா ஒரு சிறந்த சொல்லேர் உழவர் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ‘இதில் வெற்றிபெற’ என்ற கவிதையில் ‘விளையும்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திக் கவிபுனைந்த திறமையை விளக்குக.

    Answer:

    எருவைப் பயன்படுத்தினால் பயிர் நன்றாக விளையும் ;

    சிறந்த கேள்விகள் எழுப்புவதால் ஆராய்ச்சிகள் புதிது புதிதாக விளையும் ;

    மாலை நேரத்திலும், இரவிலும் நன்றாக குளிர்விளையும் ;

    • மிகவும் நுட்பமாக எழுத்துகளை எண்ணி, சிறந்த பொருள்களைப் புரிந்து நம் முன்னோர்கள் கற்று வந்தது போல கற்று வந்தோம் என்றால், நம் உள்ளத்தில் அறம், பொருள் விளையும் ;

    மதிக்கத்தகுந்த அறிவினால் ஒருவனுக்கு புகழ் விளையும்.

    Question 6.

    கவிஞர் சுரதா பற்றிக் குறிப்பு வரைக.

    Answer:

    இயற்பெயர் : இராசகோபாலன்.

    சிறப்புப் பெயர் : பாரதிதாசன் மீது கொண்ட பற்றுதலால் சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார். பிறகு சுரதா என்று மாற்றிக் கொண்டார்.

    இலக்கியப் பணி : இலக்கியம், விண்மீன் , ஊர்வலம், போன்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியவர்.

    தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்துள்ளார்.

    விருதுகள் தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது.

    Question 7.

    கவிஞர் சுரதா சிறந்த உவமைக் கவிஞர் என்பதற்கு உன் பாடப்பகுதியைக் கொண்டு விளக்குக.

    Answer:

    • (i) மரத்திலே ஆங்காங்கே பூக்கள் மொட்டுகளாக இருக்கும். அவைப் பூத்துவிட்டால் பூ என்று பெயர் பெற்று எல்லோரும் அறியும் விதத்திலும் பயன்தரும் விதத்திலும் அமையும்.
    • (ii) அதுபோல தமிழ்மொழியின் பல்லாயிரக்கணக்கான சொற்கள் நிரம்பி இருந்தாலும் அவை முறையாக வைக்கப்பட்டால், எதுகை, மோனையோடு அடிவரையரையுடன் இருந்தால் கவிதையாகும். அவ்வாறு இல்லையெனில் உரைநடையாகும் என்னும் வரிகளில் உவமையைப் பயன்படுத்தியுள்ளார்.
    • (iii) செடியில் பூத்த பூ மீது வண்டு வந்து தங்கும் என்பதனையும் உவமைப்படுத்தியுள்ளார். பூ பூத்து மணம் பரப்பி தன்னுடைய இருப்பை உலகிற்குச் சொல்லி வண்டுகளை அழைத்து தன் இருப்பை அடுத்தவர்களுக்கு அறியச் செய்கிறது.
    • (iv) புலவர்கள் சிறப்பாகப் பாடல்களை எழுதினார்கள் என்றால் அவர்களின் பாடல் மேல் புகழ்வந்து தங்கும் என்று கூறியுள்ளார்.

    Share:
    WhatsApp Group Join Now
    Telegram Group Join Now

    0 Comments:

    Post a Comment