> Samacheer Book 12th Tamil unit 3.1 தமிழர் குடும்ப முறை Book Answers Guide ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Samacheer Book 12th Tamil unit 3.1 தமிழர் குடும்ப முறை Book Answers Guide

 

Samacheer Book 12th Tamil unit 3.1 தமிழர் குடும்ப முறை Book Answers Guide

Tamilnadu state board Syllabus based 12th Tamil Full Guide solutions book back answers guide PDF Download. 12th Tamil important Questions Reduced Syllabus 2020-2021, 12th tamil New reduced Syllabus Question bank 2020-2021 ,12th Tamil notes ,important Questions collection, 12th Tamil unit 3 one mark Questions PDF Download

12th Tamil unit-3.1 தமிழர் குடும்பமுறை book back Questions and answer guide

Tamilnadu samacheer kalvi 12th tamil கம்பராமாயணம் Question and answer guide, important questions,Question bank,model Question papers



    12th tamil unit-3.1 தமிழர் குடும்ப முறை Book answers solution Guide

    பாடநூல் வினாக்கள்

    பலவுள் தெரிக

    Question 1.

    சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை

    அ) அறவோர், துறவோர்

    ஆ) திருமணமும் குடும்பமும்

    இ) மன்றங்களும் அவைகளும்

    ஈ) நிதியமும் சுங்கமும்

    Answer:

    ஆ) திருமணமும் குடும்பமும்

    Question 2.

    பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.

    அ) உரிமைத்தாகம் – 1. பாரசீகக் கவிஞர்

    ஆ) அஞ்ஞாடி – 2. பூமணி

    இ) ஜலாலுத்தீன் ரூமி – 3. பக்தவச்சல பாரதி

    ஈ) தமிழர் குடும்ப முறை – 4. சாகித்திய அகாதெமி

    அ) 2, 4, 3, 1

    ஆ) 3, 4, 1, 2

    இ) 2, 4, 1, 3

    ஈ) 2, 3, 4, 1

    Answer:

    ஈ) 2, 3, 4, 1


    Question 3.

    “எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு

    சக்தி பிறக்குது மூச்சினிலே” – என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது

    அ) தனிக்குடும்ப முறை

    ஆ) விரிந்த குடும்ப முறை

    இ) தாய்வழிச் சமூக முறை

    ஈ) தந்தைவழிச் சமூகமுறை

    Answer:

    ஈ) தந்தைவழிச் சமூகமுறை

    குறுவினா

    Question 1.

    புக்கில், தன்மனை – சிறு குறிப்பு எழுதுக.

    Answer:

    புக்கில் :

    • ‘புக்கில்’ என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிப்பதாகும்.

    “துகள் அறுகேள்வி உயர்ந்தோர் புக்கில்” என்ற புறநானூறு பாடல் (222 : 6) சான்றாகும்.

    தன்மனை :

    • திருமணத்திற்குப் பின் கணவனும், மனைவியும் பெற்றோர்களிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் ‘தன்மனை’ என அழைக்கப்பட்டது.

    சிறுவினா

    Question 1.

    பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக்குடும்பம் – விளக்கம் எழுதுக.

    Answer:

    தந்தையும் உடன் வாழ்ந்தனர்

    • (i) சங்க காலத்தில் முதல் நிலை உறவை மட்டும் காணமுடிகிறது.
    • (ii) நற்றாய் ஒருபுறம் செவிலியும், மகளின் தோழியும் குடும்பத்தில் முதன்மைப் பெற்றனர். இம்முறை பண்டை இனக்குழு மரபின் மாறுபட்ட தொடர்ச்சி பண்டைய காலத்தில் காண முடிகிறது.

    • (iii) இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் மக்களோடு நிறைந்து. அறம் செய்து, சுற்றத்தாரோடு சேர்ந்து வாழ்தலே தலைவன் தலைவின் இல்லறப் பயன் ஆகும்.
    • (iv) சங்கச் சமூகம் குடும்பம் என்ற அமைப்பை அடிப்படை அலகாகக் கொண்டு அதன் தொடர்ச்சியாக இன்றைய சமூகமும் கூட்டுக் குடும்பம், தனிக்குடும்பம் கொண்டதாக, தந்தைவழிக் குடும்ப அமைப்பைக் கொண்டதாகவும் அமைகிறது.


    Question 2.

    தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்திற்குச் செய்யும் உதவிகள் யாவை ?

    Answer:

    • காலையில் 4 மணிக்குப் படிக்க வேண்டிய தேவைகள் அனைத்தையும் செய்து முடித்துவிடுவேன்.
    • அவர்களுக்கு நானே தேநீர் தயார் செய்து கொடுப்பேன். தாயுடன் சேர்ந்து உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபடுவேன்.
    • தாய், தந்தை பணிக்கு ஆயத்தம் ஆவதற்குள் மூன்று பேருக்கும் உணவு எடுத்து வைப்பேன்.
    • பள்ளிக்கு என் பெற்றோர் உதவியில்லாமல் நானே மிதிவண்டியில் செல்வேன். வீட்டிற்குத் திரும்பியவுடன் வீட்டைச் சுத்தம் செய்து, பெற்றோருக்குத் தேநீர் தயார் செய்து வைப்பேன்.
    • பெற்றோர் வந்தவுடன் மறுநாளுக்குத் தேவையான பொருள்களை கடைக்குச் சென்று வாங்கி வருவேன்.
    • பிறகு சிறிது நேரம் படித்து விட்டு இரவு உணவை உண்ட பிறகு 10.00 மணி வரை படிப்பேன்.


    நெடுவினா

    Question 1.

    குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.

    Answer:

    • குடும்பம் என்ற அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே.
    • குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளது. நாணயத்தின் இருபக்கங்கள் போலகுடும்பமும்திருமணமும் உள்ளது. திருமணம், குடும்பம் தொல்காப்பியத்திலோ சங்க இலக்கியத்திலோ இடம் பெறவில்லை குடும்பம் என்ற சொல் திருக்குறளில் பயின்று வருகிறது.

    கட்டமைப்பு:

    • (i) ‘குடும்பு’ எனும் சொல் கூடிவாழ்தல் என்று பொருள்படுகிறது. பண்டைத்தமிழர்கள் குடும்பம் 1 என்ற அமைப்புடன் வாழ்ந்த இடங்கள் பல. அவற்றுள் சில: புக்கில், தன்மனை.
    • (ii) புக்கில் என்பது தற்காலிகத் தங்குமிடம் ஆகும். தன்மனை என்பது திருமணம் ஆன கணவன், மனைவி பெற்றோரை விட்டு வாழும் இடம் ஆகும்.
    • (iii) மணந்தகம் என்பது மணம் புரிந்த கணவன் மனைவியும் சேர்ந்து வாழத் தொடங்கி முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலக்கட்டத்தைக் குறிப்பது ஆகும். . சங்க காலத்தில் பெரும்பான்மையான சமூகத்தில் தாயே தலைமை ஏற்றிருப்பாள். பெண் திருமணம் செய்த பின்னும் தன் வீட்டிலே வாழ்க்கை நடத்தும் முறை இருந்தது. பெண் குழந்தைகள் பேறு முதன்மைப்படுத்தப்பட்டது

    தந்தை வழிக் குடும்பம்:

    • சங்க காலத்தில் தாய் வழிக் குடும்பம் போலவே தந்தை வழிக் குடும்பமும் வேரூன்றியது.
    • பெண் திருமணம் ஆன பிறகு கணவனின் தந்தை வீட்டில் வாழ வேண்டும் என்பதை ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர்’ என்கிறது குறுந்தொகை.

    தனிக்குடும்பம்:

    • தனிக்குடும்பம் என்பது படிமலர்ச்சியில் இறுதியில் ஏற்பட்டது. இது இன்று தொழிற் சமூகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. தனிக்குடும்பம்,
    • ஆதிக்குடிகளிடமும் இருந்தது என்று இனவரைவியல் ஆய்வுச் சுட்டுகிறது.

    விரிந்த சமூகம்:

    • சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்று இவர்களோடு பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் விரிந்த குடும்பமாகக் காணமுடிகிறது.
    • கணவன், மனைவி, குழந்தைகள் சேர்ந்து பெற்றோர்கள் சேர்ந்து வாழும் நேர்வழி விரிந்த குடும்ப முறை காணமுடிகிறது.
    • இன்றைய மனித சமூக கட்டமைப்பில் தாய்வழிக் குடும்பம், தந்தைவழிக் குடும்பம் என்ற நிலையைக் கடந்து தனிக்குடும்பம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.
    • சங்கச் சமூகம் குடும்பம் என்ற அமைப்பிலிருந்தே மனித சமூகம் கட்டமைக்கப்படுகிறது. அவற்றின் தொடர்ச்சியாகவே இன்றைய கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் என்ற அலகைக் கொண்டதாக அமைகிறது. அதுவும் தந்தைவழிக் குடும்ப அமைப்பைக் கொண்டதாக இருக்கிறது. தொன்மைமிக்க இக்குடும்ப அமைப்பு முறை தமிழ்ச் சமூகத்தின் அடையாளமும் பெருமிதமும் ஆகும்.
    • குடும்பமே சமூகத்தைக் கட்டமைக்கும் களம் :

      • (i) குடும்பம் தனி மனிதருக்காகவும் சமுதாயத்திற்காகவும் பெரும் பங்காற்றுகிறது. மனித சமூகத்தின் அடிப்படைகளான அன்பு செலுத்துதல், பொருளாதாரப் பகிர்வு, பொழுதுபோக்கு, பாதுகாப்பு, சமயச்செயல்கள், கல்விபெறுதல் ஆகியவை குடும்பத்திலே கற்பிக்கப்படுகின்றன.
      • (ii) பண்பாட்டைக் குழந்தைப் பருவத்தில் குடும்பம் கற்றுக் கொடுக்கிறது. சமுதாயத்தின் நெறிமுறைகள் அன்றாட வாழ்வில் பின்பற்றப்பட வேண்டிய பழக்கவழக்கங்கள் பொருளாதாரச் செயல்களாகச் செய்யும் முறைகள், சமுதாய சமய வாழ்வில் ஆற்ற வேண்டிய கடமைகள் போன்ற எண்ணற்ற வகைகளில் குடும்பம் குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பதால் மனித சமூகம் சிறப்பாகக் கட்டமைக்கப்படும்.
      • (iii) பண்பாட்டு வயமாக்கல் நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் ஒரு மாதிரி குழுவாகச் செயல்படுகின்றனர்.
      • (iv) குடும்பம் என்பது தனது உறுப்பினர்கள் என்ற நிலையில் குடும்ப உறுப்பினர்களுக்குப் பயிற்சிகளை வழங்கி அமைதியும் ஒழுங்கும் கொண்ட ஒரு சிறந்த சமுதாயம் அமைய அடிப்படையாக விளங்குவதால், குடும்பம் என்னும் சிறிய அமைப்பில் இருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்புக் கட்டமைக்கப்படுகிறது.

      கற்பவை கற்றபின்

      Question 1.

      கூட்டுக்குடும்பம் – தனிக்குடும்பம் குறித்து உங்களது கருத்துகளைத் தொகுத்து உரை நிகழ்த்துக.

      Answer:

      இனிய வணக்கம்.


      • கூட்டுக்குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு.
      • கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் உடன்பட்டுப் பேசுதல், ஒரு வேலையில் பலரும் ஈடுபடுதல் மகத்தான வெற்றி தரும். விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு வளரும்.
      • தலைமை ஒருவரின் அறிவுரை எல்லாருக்கும் பொருந்துமாறு அமைந்து விருப்பு வெறுப்புகள் களையப்பட வாய்ப்புண்டு. தனிமை நம்மைவிட்டு அகலும்.
      • தனிக்குடும்பத்தில் செலவுகள் குறையும்.
      • மனச்சுமையை இறக்கி வைக்க, தன் கருத்தை வெளியிட நேரம் இருக்காது.
      • பிள்ளைகள் பராமரிப்பிற்கு அதிகக் கவனம் செலுத்த நேரிடும். தனிமை ஏற்பட்டுவிடும்.
      • அவசர நேரங்களில் உதவி செய்ய ஆள் இருக்கமாட்டார்கள்.
      • எனவே, கூட்டுக்குடும்பம் ஒரு குதூகலம். தனிக்குடும்பம் ஒரு மௌனம்.

      நன்றி! வணக்கம்!


      Question 2.

      குடும்ப உறுப்பினர்களின் உறவுமுறைப் பெயர்களை அட்டவணைப்படுத்தி எழுதுக.

      Answer:

      Samacheer Book 12th Tamil unit 3.1 தமிழர் குடும்ப முறை Book Answers Guide

      Samacheer Book 12th Tamil unit 3.1 தமிழர் குடும்ப முறை Book Answers Guide


      கூடுதல் வினாக்கள்

      பலவுள் தெரிக

      Question 1.

      ‘குடும்பம்’ என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்ற நூல்

      அ) தொல்காப்பியம்

      ஆ) நன்னூல்

      இ) சிலப்பதிகாரம்

      ஈ) திருக்குறள்

      Answer:

      ஈ) திருக்குறள்

      Question 2.

      தொல்காப்பியம் குறிப்பிடும் வாழிடங்கள்

      அ) இல், மனை

      ஆ) மனை , குடில்

      இ) இல், குரம்பை

      ஈ) இவற்றில் எதுவுமில்லை

      Answer:

      அ) இல், மனை


      Question 3.

      அகநானூறு 346ஆவது பாடலில் வரும் ‘நும்மனை’ என்பது

      அ) கணவனின் இல்லம்

      ஆ) மனைவியின் இல்லம்

      இ) நற்றாய் இல்லம்

      ஈ) செவிலியின் இல்லம்

      Answer:

      அ) கணவனின் இல்லம்

      Question 4.

      தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்கம்

      அ) குடும்பம்

      ஆ) தாய்வழிக் குடும்பம்

      இ) மணந்தகம்

      ஈ) விரிந்த குடும்பம்

      Answer:

      இ) மணந்தகம்

      Question 5.

      தாய்வழிக் குடும்பங்களில் குலத்தொடர்ச்சிக்கு உரியவர்

      அ) பெண்கள்

      ஆ) ஆண்க ள்

      இ) பெண்கள், ஆண்கள்

      ஈ) குழந்தைகள்

      Answer:

      அ) பெண்கள்


      Question 6.

      மணமக்களின் வாழ்விடம் என்பது

      அ) கணவன் அகம்

      ஆ) செவிலியகம்

      இ) தனியார் விடுதி

      ஈ) இவற்றில் எதுவுமில்லை

      Answer:

      அ) கணவன் அகம்

      Question 7.

      தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம்

      அ) புரிதலில்லாத குடும்பம்

      ஆ) நெருக்கமில்லாத குடும்பம்

      இ) நெருக்கமான குடும்பம்

      ஈ) முடிவுநிலை குடும்பம்

      Answer:

      இ) நெருக்கமான குடும்பம்

      Question 8.

      இன்றைய தொழிற்சமூகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படும் குடும்பம்

      அ) தனிக்குடும்ப வகை

      ஆ) சமூக குடும்ப வகை

      இ) கூட்டுக்குடும்ப வகை

      ஈ) விரிந்த குடும்ப வகை

      Answer:

      அ) தனிக்குடும்ப வகை

      Question 9.

      ஆதிக்குடிகளிடம் இருந்த முக்கியமான குடும்பமுறை

      அ) தந்தைவழிக் குடும்ப முறை

      ஆ) விரிந்தவழிக் குடும்ப முறை

      இ) தனிக்குடும்ப முறை

      ஈ) பிரிந்த வழிக் குடும்ப முறை

      Answer:

      இ) தனிக்குடும்ப முறை


      Question 10.

      தலைவனும் தலைவியும் …….. காத்தலே இல்வாழ்வின் பயன்.

      அ) குழந்தை நலம்

      ஆ) மனைநலம்

      இ) தன்னறம்

      ஈ) மனையறம்

      Answer:

      ஈ) மனையறம்


      Question 11.

      கூற்று 1 : மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைக் குடும்பம் தொடர்ந்து செய்து வருகின்றது.

      கூற்று 2 : ஐங்குறுநூற்றில் சேரநாட்டு மருமக்கள் தாயமுறை பற்றிக் கூறப்பட்டுள்ளது.

      அ) கூற்று 1 தவறு 2 சரி

      ஆ) கூற்று இரண்டும் தவறு

      இ) கூற்று 1 சரி 2 தவறு

      ஈ) கூற்று இரண்டும் சரி

      Answer:

      இ) கூற்று 1 சரி 2 தவறு

      Question 12.

      கூற்று 1 : தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ என்று அழைக்கப்பட்டது.

      கூற்று 2 : ‘குடும்பு’ என்னும் சொல் தனியாக வாழ்தல் என்ற பொருளை உணர்த்துகிறது.

      அ) கூற்று இரண்டும் தவறு

      ஆ) கூற்று 1 சரி 2 தவறு

      இ) கூற்று 1 தவறு 2 சரி

      ஈ) கூற்று இரண்டும் சரி

      Answer:

      ஆ) கூற்று 1 சரி 2 தவறு

      Question 13.

      கூற்று 1 : ‘மணந்தகம்’ என்பது முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டம் ஆகும்.

      கூற்று 2 : தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் தொடக்கநிலை குடும்பம் எனப்படும்.

      அ) கூற்று இரண்டும் தவறு

      ஆ) கூற்று 1 தவறு 2 சரி

      இ) கூற்று 1 சரி 2 தவறு

      ஈ) கூற்று இரண்டும் சரி

      Answer:

      ஈ) கூற்று இரண்டும் சரி

      Question 14.

      கூற்று 1 : சங்ககாலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் செவிலித்தாயே பொறுப்பேற்றிருந்தான்.

      கூற்று 2 : கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்தது ‘எதிர்வழி விரிந்த குடும்ப முறை’ ஆகும்.

      அ) கூற்று 1 சரி 2 தவறு

      ஆ) கூற்று இரண்டும் சரி

      இ) கூற்று 1 தவறு 2 சரி

      ஈ) கூற்று இரண்டும் தவறு

      Answer:

      அ) கூற்று 1 சரி 2 தவறு


      Question 15.

      சரியானதைத் தேர்க.

      அ) குடும்பு – தன்மனை

      ஆ) பதிற்றுப்பத்து – சேரநாட்டு மருமக்கள் தாய முறை

      இ) இல், மனை – நன்னூல்

      ஈ) புக்கில் நிரந்தரமாகத் தங்குமிடம்

      Answer:

      ஆ) பதிற்றுப்பத்து – சேரநாட்டு மருமக்கள் தாய முறை


      Question 16.

      சரியானதைத் தேர்க.

      அ) சிறுவர்தாயே பேரிற் பெண்டே – புறம் 276

      ஆ) வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன் – புறம் 270

      இ) முளரிமருங்கின் முதியோர் சிறுவன் – புறம் 278

      ஈ) செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன் – கலி, பாலை 8

      Answer:

      இ) முளரிமருங்கின் முதியோர் சிறுவன் – புறம் 278

      Question 17.

      சரியானதைத் தேர்க.

      அ) குரம்பை – நகரம்

      ஆ) புலப்பில் – கூட்டு இல்லம்

      இ) குடில் – உச்சிப்பகுதி

      ஈ) வரைப்பு – வாழிடம்

      Answer:

      ஈ) வரைப்பு – வாழிடம்

      Question 18.

      பொருந்தாததைத் தேர்க.

      அ) நும்மனை – கணவனின் இல்லம்

      ஆ) மணந்தகம் – விரிந்த குடும்பம்

      இ) தாய்வழிக் குடும்பம் – மருமக்கள் தாய முறை

      ஈ) தந்தைவழிக் குடும்பம் – சிலம்பு கழி

      Answer:

      ஆ) மணந்தகம் – விரிந்த குடும்பம்

      Question 19.

      பொருத்தித் தேர்க.

      அ) சிலம்பு கழி – 1. திருக்குறள்

      ஆ) குடும்பு – 2. ஐங்குறுநூறு

      இ) குடும்பம் – 3. குறுந்தொகை

      ஈ) புலப்பில் – 4. கூடி வாழ்தல்

      அ) 2, 1, 3, 4

      ஆ) 1, 2, 3, 4

      இ) 2, 4, 1, 3

      ஈ) 2, 1, 4, 3

      Answer:

      இ) 2, 4, 1, 3

      Question 20.

      பொருத்துக.

      அ) மருமக்கள் தாய முறை – 1. ஆமய்

      ஆ) அறிவுரை – 2. நோன்பு

      இ) செவிலித்தாய் – 3. பதிற்றுப்பத்து

      ஈ) சிலம்புகழி – 4. செவிலித்தாய்

      அ) 3, 4, 1, 2

      ஆ) 3, 1, 4, 2

      இ) 3, 4, 2, 1

      ஈ) 3, 2, 4, 1

      Answer:

      அ) 3, 4, 1, 2

      Question 21.

      எந்தச் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது?

      அ) குடும்பம்

      ஆ) கிராமம்

      இ) நகரம்

      ஈ) அரசு

      Answer:

      அ) குடும்பம்

      Question 22.

      குடும்பம் என்னும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை

      அ) பெற்றோர்

      ஆ) திருமணம்

      இ) அரசு

      ஈ) இவற்றில் எதுவுமில்லை

      Answer:

      ஆ) திருமணம்


      Question 23.

      சரியானக் கூற்றுகளைக் கண்டறிக.

      i) இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’, ‘குடும்பம்’ ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை.

      ii) குடும்பம் எனும் சொல் முதன் முதலில் திருக்குறளில்தான் (1029) வருகிறது.

      iii) சங்க இலக்கியத்தில் ‘குடம்பை’, ‘குடும்பு’, ‘கடும்பு’ ஆகிய சொற்கள் குடும்ப அமைப்போடு தொடர்புடையன.

      அ) i, ii சரி

      ஆ) i, i சரி

      இ) iii மட்டும் தவறு

      ஈ) மூன்றும் சரி

      Answer:

      ஈ) மூன்றும் சரி

      Question 24.

      ‘இரவுக் குறியே இல்லகத் துள்ளும்

      மனைவியோர் கிளவு கேட்கும் வழியதுவே

      மனையகம் புகாஅக் காலை யான’

      – என்னும் தொல்காப்பிய நூற்பாவில் குறிப்பிடப்படுபவை

      அ) அகம், புறம் குறித்தான வேறுபாடுகள்

      ஆ) ‘இல்’, ‘மனை’ ஆகிய இரண்டு வாழிடங்கள்

      இ) தலைவனின் வரைவுக் கடாதல்

      ஈ) தோழி, தலைவி உரையாடல்கள்

      Answer:

      ஆ) ‘இல்’, ‘மனை’ ஆகிய இரண்டு வாழிடங்கள்

      Question 25.

      மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் ‘தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் நூல்

      அ) குறுந்தொகை

      ஆ) அகநானூறு

      இ) ஐங்குறுநூறு

      ஈ) கலித்தொகை

      Answer:

      ஆ) அகநானூறு

      Question 26.

      தற்காலிகத் தங்குமிடத்தைப் ‘புக்கில்’ என்று கூறும் நூல்

      அ) அகநானூறு

      ஆ) புறநானூறு

      இ) கலித்தொகை

      ஈ) குறுந்தொகை

      Answer:

      ஆ) புறநானூறு


      Question 27.

      தன்மனை எனப்படுவது

      அ) தற்காலிகத் தங்குமிடம்

      ஆ) மனைவியின் இல்லம்

      இ) திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழுமிடம்

      ஈ) திருமணத்திற்கு முன்பே கணவன் மனைவியாக வாழுமிடம்

      Answer:

      இ) திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழுமிடம்

      Question 28.

      மணந்தகம் என்பது

      அ) மணம் புரியும் முன்பு தலைவன் தலைவியைச் சந்திக்கும் இடம்

      ஆ) மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டம்

      இ) கணவன் மனைவியின் மணமுறிவு வாழ்க்கை

      ஈ) இவற்றில் எதுவுமில்லை

      Answer:

      ஆ) மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டம்

      Question 29.

      இளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும் பணி …………. என்று தொல்காப்பியம் கூறுகிறது.

      அ) நற்றாய்க்குரியது

      ஆ) செவிலிக்குரியது

      இ) தோழிக்குரியது

      ஈ) முதியவருக்குரியது

      Answer:

      ஆ) செவிலிக்குரியது

      Question 30.

      சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தலைமை ஏற்றிருந்தவர்

      அ) தந்தை

      ஆ) அரசன்

      இ) தாய்

      ஈ) அரசி

      Answer:

      இ) தாய்

      Question 31.

      சேரநாட்டு மருமக்கள் தாயமுறை பற்றிக் கூறும் நூல்

      அ) புறநானூறு

      ஆ) பதிற்றுப்பத்து

      இ) பரிபாடல்

      ஈ) பட்டினப்பாலை

      Answer:

      ஆ) பதிற்றுப்பத்து

      Question 32.

      ‘சிறுவர்தாயே பேரிற் பெண்டே’ என்று குறிப்பிடும் நூல்

      அ) புறநானூறு

      ஆ) பதிற்றுப்பத்து

      இ) பரிபாடல்

      ஈ) பட்டினப்பாலை

      Answer:

      அ) புறநானூறு

      Question 33.

      ‘செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்’ என்று குறிப்பிடும் நூல்

      அ) புறநானூறு

      ஆ) பதிற்றுப்பத்து

      இ) பரிபாடல்

      ஈ) பட்டினப்பாலை

      Answer:

      அ) புறநானூறு


      Question 34.

      ‘வானவரைக் கூந்தல் முதியோன் சிறுவன்’ எனக் குறிப்பிடும் நூல்

      அ) புறநானூறு

      ஆ) பதிற்றுப்பத்து

      இ) பரிபாடல்

      ஈ) பட்டினப்பாலை

      Answer:

      அ) புறநானூறு

      Question 35.

      ‘முளரிமருங்கின் முதியோள் சிறுவன்’ எனக் கூறும் நூல்

      அ) புறநானூறு

      ஆ) பதிற்றுப்பத்து

      இ) பரிபாடல்

      ஈ) அகநானூறு

      Answer:

      ஆ) பதிற்றுப்பத்து

      Question 36.

      ‘என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்’ என்று குறிப்பிடும் நூல் …………. திணை …………….

      அ) ஐங்குறுநூறு, பாலை

      ஆ) கலித்தொகை, பாலை

      இ) அகநானூறு, முல்லை

      ஈ) குறுந்தொகை, மருதம்

      Answer:

      ஆ) கலித்தொகை, பாலை

      Question 37.

      திருமணத்திற்குப் பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது என்பதைக் குறிப்பிடும் நூல்

      அ) ஐங்குறுநூறு

      ஆ) புறநானூறு

      இ) அகநானூறு

      ஈ) பதிற்றுப்பத்து

      Answer:

      இ) அகநானூறு

      Question 38.

      தாய்வழிச் சொத்துகள் பெண்டிருக்கே போய்ச் சேர்ந்தன என்பதைக் குறுந்தொகையின் ………….. திணைப்பாடல் கூறுகிறது.

      அ) குறிஞ்சித்

      ஆ) முல்லைத்

      இ) மருதத்

      ஈ) பாலைத்

      Answer:

      இ) மருதத்

      Question 39.

      தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் …………….. சென்று சேர்ந்தன.

      அ) ஆண்களுக்குச்

      ஆ) பெண்களுக்குச்

      இ) அரசனுக்குச்

      ஈ) ஏழைகளுக்குச்

      Answer:

      ஆ) பெண்களுக்குச்

      Question 40.

      ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப் பின் …………. வாழ வேண்டும்.

      அ) தன் தந்தையகத்தில்

      ஆ) தன் கணவனுடைய தந்தையகத்தில்

      இ) தன் கணவனுடைய தாயகத்தில்

      ஈ) தன் தாயகத்தில்

      Answer:

      ஆ) தன் கணவனுடைய தந்தையகத்தில்


      Question 41.

      மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் செய்தது

      அ) பாராய்க்கடன் உரைத்தல் நோன்பு

      ஆ) சிலம்புகழி நோன்பு

      இ) சுற்றத்தாருடன் விருந்து வைத்தல்

      ஈ) இவற்றில் எதுவுமில்லை

      Answer:

      ஆ) சிலம்புகழி நோன்பு

      Question 42.

      ‘நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்

      எம்மனை வதுவை நல்மணம் ஒழிக’ – என்று குறிப்பிடும் நூல்

      அ) குறுந்தொகை

      ஆ) அகநானூறு

      இ) ஐங்குறுநூறு

      ஈ) கலித்தொகை

      Answer:

      இ) ஐங்குறுநூறு

      Question 43.

      ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே’ என்று கூறும் நூல்

      அ) குறுந்தொகை

      ஆ) அகநானூறு

      இ) ஐங்குறுநூறு

      ஈ) கலித்தொகை

      Answer:

      அ) குறுந்தொகை

      Question 44.

      இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளைத் தெளிவுபடுத்தும் நூல்

      அ) குறுந்தொகை

      ஆ) அகநானூறு

      இ) ஐங்குறுநூறு

      ஈ) கலித்தொகை

      Answer:

      இ) ஐங்குறுநூறு

      Question 45.

      ‘மறியிடைப் படுத்த மான்பிணை போல்’ மகனை நடுவணாகக் கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்வதைக் கூறும் நூல்

      அ) அகநானூறு

      ஆ) குறுந்தொகை

      இ) ஐங்குறுநூறு

      ஈ) கலித்தொகை

      Answer:

      இ) ஐங்குறுநூறு


      Question 46.

      இன்றைய தொழிற்சமூகத்தில் பெரும்பாண்மையாகக் காணப்படுவது

      அ) கூட்டுக்குடும்பம்

      ஆ) தனிக்குடும்பம்

      இ) விரிந்த குடும்பம்

      ஈ) இவற்றில் எதுவுமில்லை

      Answer:

      ஆ) தனிக்குடும்பம்

      Question 47.

      கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ……………. புறநானூற்றுப்பாடல் கூறுகிறது.

      அ) வெள்ளைக்குடி நாகனாரின்

      ஆ) ஒக்கூர் மாசாத்தியாரின்

      இ) பரணரின்

      ஈ) கபிலரின்

      Answer:

      ஆ) ஒக்கூர் மாசாத்தியாரின்

      Question 48.

      சங்ககாலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் பொறுப்பேற்று இருந்தவள்

      அ) நற்றாய்

      ஆ) செவிலித்தாய்

      இ) தோழி

      ஈ) ததலைவி

      Answer:

      ஆ) செவிலித்தாய்

      Question 49.

      தமிழர் குடும்பமுறை என்னும் பாடப்பகுதி …………. காலாண்டிதழில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கம்.

      அ) பனுவல் (தொகுதி II, 2010)

      ஆ) பனுவல் (தொகுதி 1, 2010)

      இ) பனுவல் (தொகுதி II, 2011)

      ஈ) பனுவல் (தொகுதி 1, 2011)

      Answer:

      அ) பனுவல் (தொகுதி II, 2010)

      Question 50.

      தமிழர் குடும்பமுறை என்றும் கட்டுரையின் ஆசிரியர்

      அ) சுப்ரமணிய பாரதி

      ஆ) சோமசுந்தர பாரதி

      இ) பக்தவத்சல பாரதி

      ஈ) பழனிபாரதி

      Answer:

      இ) பக்தவத்சல பாரதி


      Question 51.

      பக்தவத்சல பாரதி முன்னெடுத்து வரும் ஆய்வுகள்

      அ) தமிழ்ச்சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் தொடர்பானவை

      ஆ) விலங்குகள், பறவைகள் சார்ந்தவை

      இ) இந்திய வரலாறு, தொன்மம் தொடர்பானவை

      ஈ) இவற்றில் எதுவுமில்லை

      Answer:

      அ) தமிழ்ச்சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் தொடர்பானவை

      குறுவினா (Additional 2 Mark

      Question 1.

      மனித சமூகத்தின் அடிப்படை அலகாகக் குடும்பம் உள்ளது. ஏன் ?

      Answer:

      • குடும்பம் எனும் சிறிய அமைப்பில் இருந்து ‘மனித சமூகம்’ எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது.
      • குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்பு வரை இது : விரிவடைகிறது. எனவே, குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாகும்.


      Question 2.

      சங்க இலக்கியத்தில் குடும்ப அமைப்புடன் தொடர்புடைய சொற்களாகக் குறிப்பிடப்படுவன யாவை?

      Answer:

      • குடம்பை , குடும்பு, கடும்பு.

      Question 3.

      தொல்காப்பியம் குறிப்பிடும் வாழிடங்கள் யாவை ?

      Answer:

      • இல், மனை.

      Question 4.

      வாழிடங்களுக்கு வேறு பெயர்களாக சங்க இலக்கியங்கள் காட்டுவன யாவை?

      Answer:

      • இல், மனை, குரம்பை , புலப்பில், முன்றில், குடில், கூரை, வரைப்பு, முற்றம், நகர், மாடம்.


      Question 5.

      ‘மனை’ என்பது வாழிடத்தைக் குறிக்கும் முதன்மைச் சொல்லாக உள்ளதை எதன் மூலம் அறியலாம்?

      Answer:

      • நம்மனை, தம்மனை, எம்மனை, இம்மனை, உம்மனை, நின்மனை, நுந்தைமனை, நன்மனை, வறுமனை, வளமனை, கடிமனை, தாய்மனை இச்சொற்கள் வாழிடத்தைக் குறிக்கின்றன.

      • பல்வேறு சொற்கள் வந்தாலும் ‘மனை’ என்ற சொல்லுடன் இணைந்து வருவதால் ‘மனை என்பது வாழிடத்தைக் குறிக்கும் முதன்மைச் சொல் என்பதை அறியலாம்.

      Question 6.

      ‘மணந்தகம்’ என்றால் என்ன ?

      Answer:

      • மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்க நிலையே ‘மணந்தகம்’ எனப்படும்.

      Question 7.

      சங்ககால கண சமூகத்திற்கும் தாயே தலைமை ஏற்றிருந்தாள் என்பதற்கு இரு சான்று தருக.

      Answer:

      ‘செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்’ (புறம் 276)

      ‘முௗரிமருங்கின் முதியோள் சிறுவன்’ (புறம் 277)


      Question 8.

      பெண்குழந்தைகளின் பேறு முதன்மையாக விரும்பப்படக் காரணம் என்ன ?

      Answer:

      • தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும், வளங்களும் பெண்களுக்கே போய்ச் சேர்ந்தன.
      • தாய்வழிக் குடும்பங்களில் பெண்களே குலத் தொடர்ச்சிக்கு உரியவர்களாக இருந்தனர்.


      Question 9.

      தொடக்கநிலை நெருக்கமான குடும்பம் என்பது யாது?

      Answer:

      • தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது.
      • இதுவே, தொடக்கநிலை நெருக்கமான குடும்பம் எனப்பட்டது.

      Question 10.

      ‘விரிந்த குடும்ப முறை’ என்பது யாது?

      Answer:

      • தனிக்குடும்ப அமைப்பில் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன்வாழ்வது ‘விரிந்த குடும்ப முறை’ எனப்படும்.

      Question 11.

      சங்க கால மக்கள் இல்வாழ்வின் பயனாகக் கருதியவை யாவை?

      Answer:

      • இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் பெருமை மிகுந்த மக்களுடன் வாழ்வது.
      • அறத்தினை விரும்பிய சுற்றத்தாரோடு வாழ்வது.
      • தலைவனும், தலைவியும் மனையறம் காத்து வாழ்வது.

      Question 12.

      சங்க இலக்கியத்தில் கூறப்படும் குடும்ப அமைப்போடு தொடர்புடைய சொற்கள் யாவை?

      Answer:

      • சங்க இலக்கியத்தில் ‘குடம்பை’ ‘குடும்பு’ ‘கடும்பு’ ஆகிய சொற்கள் குடும்ப அமைப்போடு தொடர்புடையவை.
      • ‘குடும்பு’ என்ற சொல், கூடி வாழுதல் என்று பொருள்படுகின்றது.

      Question 13.

      சங்க காலத்திலிருந்த தாய்வழிக்குடும்பம் குறித்தெழுதுக.

      Answer:

      • சங்க காலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய்வழிக்குடும்பம் இருந்துள்ளது.
      • திருமணத்திற்குப் பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன்வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.


      Question 14.

      தாய்வழிக்குடும்ப முறையில் குடும்பத்தின் சொத்துகள் யாருக்குச் சென்று சேர்ந்தன?

      Answer:

      • தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன.
      • தாய்வழிச் சொத்துகள் பெண்டிருக்கே போய்ச் சேர்ந்தன என்பதை ஒரு மருதத்திணைப் பாடல் (குறுந். 295) தெளிவாகவும் விளக்கமாகவும் கூறுகிறது.


      Question 15.

      பக்தவத்சல பாரதி இயற்றியுள்ள நூல்கள் யாவை?

      Answer:

      • இலக்கிய மானிடவியல்
      • பண்பாட்டு மானிடவியல்
      • தமிழர் மானிடவியல்
      • தமிழகப் பழங்குடிகள்
      • பாணர் இனவரைவியல்
      • தமிழர் உணவு


      Question 16.

      இளமகவுநிலைக் குடும்பங்கள் குறித்து ஐங்குறுநூறு கூறுவது யாது?

      Answer:

      • இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. (408)
      • “மறியிடைப் படுத்த மான்பிணை போல” மகனை நடுவணாகக் கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். (ஐங்குறுநூறு 401)


      சிறுவினா Additional 2 Mark

      Question 1.

      சங்ககாலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக இருந்ததற்குச் சான்று தந்து விளக்குக.

      Answer:

      • (i) சங்ககாலத்தில் ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர்ஊன்றி இருந்தது.
      • (ii) பெண் திருமணத்திற்குப் பின் தன் கணவனுடைய தந்தையின் வீட்டிலே வாழ வேண்டும் என்பதே ஆண் மையச் சமூகத்தின் அமைப்பு முறையாகும். மணமான பின்பு தலைவியைத் 112 தலைவன் அவனுடைய இல்லத்திற்கு அழைத்துச் செல்வான்.

      “நும்மனைச் சிலம்பு கழீக அயரினும்

      எம்மனை வதுவை நல்மணம் கழிக”

      • என்ற ஐங்குறுநூற்றுப் பாடல் (399:1-2) இதற்குச் சான்றாகும்.
      • (iii) மணமகளின் வாழிடம் கணவன் அகம் என்பதை இச்சான்று உறுதிப்படுத்தும்.
      • (iv) தந்தை வழி குடும்ப முறை பரவலாக இருந்துள்ளது.

      (v) பொருள் வயிற்பிரிவு, போர், வாழ்வியல் சடங்குகள், குடும்பம், திருமணம் போன்ற பல்வேறு சமூக களங்கள் மூலம் ஆண் மையச் சமூக முறை வலுவாக இருந்ததை அறியலாம்.


    Share:
    WhatsApp Group Join Now
    Telegram Group Join Now

    0 Comments:

    Post a Comment