Samacheer Book 12th Tamil unit 6 திருக்குறள் Book Answers Guide
Tamilnadu state board Syllabus based 12th Tamil Full Guide solutions book back answers guide PDF Download. 12th Tamil important Questions Reduced Syllabus 2020-2021, 12th tamil New reduced Syllabus Question bank 2020-2021 ,12th Tamil notes ,important Questions collection, 12th Tamil unit 3 one mark Questions PDF Download
12th Tamil unit 7 திருக்குறள்
book back Questions and answer guide
Tamilnadu samacheer kalvi 12th tamil திருக்குறள் Question and answer guide, important questions,Question bank,model Question papers
Tamilnadu Samacheer Book 12th Tamil Solutions unit 7 திருக்குறள்
கற்பவை கற்றபின்
Question 1.
படத்திற்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
அ) எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
ஆ) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
இ) வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்டம்
மற்றைய எல்லாம் பிற.
Answer:
ஆ) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
Question 2.
கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைக் கண்டறிக. மனமோ மாட்டுவண்டி
Answer:
ஆ) சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.
Question 3.
பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக. சீரியர் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
Answer:
இ) நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்
அல்லல் படுப்பதூஉம் இல்.
Question 4.
அல்லல் படுப்பதூம் இல் – எவரோடு பழகினால்?
அ) வான்போல் பகைவர்
ஆ) மெய்ப்பொருள் காண்பவர்
இ) எண்ணியாங்கு எய்துபவர்
ஈ) தீயினத்தார்
Answer:
ஈ) தீயினத்தார்
Question 5.
திண்ணியர் என்பதன் பொருள் தருக.
அ) அறிவுடையார்
ஆ) மன உறுதியுடையவர்
இ) தீக்காய்வார்
ஈ) அறிவினார்
Answer:
ஆ) மன உறுதியுடையவர்
Question 6.
ஆராய்ந்து சொல்கிறவர்
அ) அரசர்
ஆ) சொல்லியபடி செய்பவர்
இ) தூதுவர்
ஈ) உறவினர்
Answer:
இ) தூதுவர்
Question 7.
பொருத்துக.
அ) பாம்போடு உடன் உறைந்தற்று – (i) தீக்காய்வார்
ஆ) செத்தார் – (ii) சீர் அழிக்கும் சூது
இ) வறுமை தருவது – (iii) கள் உண்ப வர்
ஈ) இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் – (iv) உடன்பாடு இல்லாதவர்
அ) 1, 2, 3, 4
ஆ) 2, 3, 4, 1
இ) 4, 1, 3, 2
ஈ) 4, 3, 2, 1
Answer:
ஈ) 4, 3, 2, 1
Question 8.
நடுங்கும்படியான துன்பம் யாருக்கில்லை?
அ) வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ள கூடியவர்
ஆ) மனத்திட்பம் உடையவர்
இ) அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர்
ஈ) சூதாடுமிடத்தில் காலம் கழிப்பவர்
Answer:
அ) வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ள கூடியவர்
Question 9.
எளியது, அரியது எது?
அ) தீயினத்தின் துணை – நல்லினத்தின் துணை
ஆ) சொல்வது – சொல்லியபடி செய்வது
இ) சிறுமை பல செய்வது – பகைவர் தொடர்பு
ஈ) மெய்ப்பொருள் காண்பது – உருவுகண்டு எள்ளாதது
Answer:
ஆ) சொல்வது – சொல்லியபடி செய்வது
குறுவினா ( 2 Marks)
Question 1.
மனத்தை அதன் போக்கில் செல்லவிடக்கூடாது என்று வள்ளுவம் கூறுவது ஏன்?
“சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ” ,,,,,,,,,,,
மனத்தை, அது போகும் போக்கில் செல்லவிடக் கூடாது.
மேலும் மனத்தினைத் தீமை வழியிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவது அறிவாகும்.
Question 2.
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து – இக்குறட்பாவின் உவமையைப் பொருளோடு பொருத்துக.
Answer:
உவமை :
ஒருவரின் எளிய தோற்றத்தைக் கண்டு இகழக் கூடாது.
பெரிய தேருக்குச் சிறிய அச்சாணி இன்றியமையாதது.
சிறிய அச்சாணிதான் என்று எளிமையாக எண்ணக் கூடாது. அதுபோல ஒருவரின் தோற்றத்தை வைத்து எளிமையாக எண்ணக்கூடாது.
மன உறுதியின் தேவை பற்றித் திருக்குறள் யாது கூறுகிறது ?
Answer:
“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்” ,,,நல்ல செயல்பாட்டிற்கு மன உறுதியே வேண்டும்.மற்றவை எல்லாம் பயன்படாது.
நஞ்சுண்பவர் என வள்ளுவர் யாரை இடித்துரைக்கிறார் ?
Answer:
“நஞ்சு உண்பார் கள் உண்பவர்”கள் உண்பவர் நஞ்சு உண்பவரே என வள்ளுவர் கள்ளுண்பவரை இடித்துரைக்கிறார்.
Question 5.
அரசரோடு நட்புப் பாராட்டினாலும் செய்யத்தகாதன யாவை?
Answer:
“பழையம் எனக் கருதி பண்பு அல்ல செய்யும்” நான் அரசருடன் பழமையான நட்பு உடைவராய் உள்ளேன்.இத்தகைய எண்ணத்துடன் தகுதி அல்லாதவற்றைச் செய்தால் அந்த உரிமையானது துன்பத்தைத் (289) தரும்.
அஞ்சத் தகுந்தன, அஞ்சத் தகாதன என வள்ளுவம் குறிப்பிடுவது யாது?
Answer:
“வாள்போல் பகைவரை அஞ்சற்க”
வாளைப் போல வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவருக்கு அஞ்சத் தேவையில்லை.
அறிவுடையார் போல் நடித்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.
வறுமையும் சிறுமையும் தருவது எது?
Answer:
ஒருவருக்கு துன்பம் பல உண்டாக்கி அவருடைய புகழையும் கெடுக்கின்ற சூதுதான் வறுமையும் சிறுமையும் ஆகும்.
நீங்கள் படித்ததில் பிடித்த குறளை எழுதி, காரணத்தைக் குறிப்பிடவும்.
Answer:
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.”
பிடித்தற்குக் காரணம் :
ஒருவனுக்கு மூன்று காலத்திலும் உதவக்கூடிய கல்வியினை செய்ந்நன்றி என்ற வினைத்தொகையால் குறிப்பிட்டு, மறந்தவனுக்கு தப்பிப்பிழைக்க வழியில்லை என்று வள்ளுவன் வார்த்த வடிவம் அதிசயத்தக்கது.
உலகத்தில் சிறந்த துணையாகவும், பகையாகவும் வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகிறார்?
Answer:
நல்ல இனத்தைவிடச் சிறந்த துணை உலகத்தில் இல்லை.
தீய இனத்தைவிடத் துன்பத்தைத் தரும் பகையும் இல்லை.
இலக்கணக் குறிப்பு தருக.
Answer:ஒரீஇ – சொல்லிசை அளபெடை
படுப்பதூஉம் – இன்னிசை அளபெடை
சொல்லுதல் – தொழிற்பெயர்
கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று – பொருள் கூறுக.
Answer:
நீரில் மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.
பெருந்தேர் – புணர்ச்சி விதி கூறுக
Answer:
-
பெருந்தேர் – பெருமை + தேர்
இனமிகல் என்ற விதிப்படி, பெருந்தேர் எனப் புணர்ந்தது.
சிறுவினா
Question 1.அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
Answer:
அணி விளக்கம் :
ஒரு பொருளின் தொழில் அல்லது செயல் காரணமாக அமையும் உவமை தொழில் உவமை எனப்படும்.
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் .
தீயில் குளிர் காய்பவர் போல.
அரசனைச் சார்ந்திருப்பவர் விலகாமலும் நெருங்காமலும் நடந்துகொள்ள வேண்டும்.
அரசனைச் சார்ந்து இருப்பவர் குளிர்காய்பவர்களைப் போல தீயிலிருந்து அகலாது அணுகாது இருத்தல் வேண்டும். இதில் அகழுதல், அணுகுதல் போன்ற தொழில் ஒப்புமை எதிர்மறையில் வந்துள்ளதால் தொழில் உவமை எனப்படும்.
அறிவின் மேன்மை பற்றித் திருக்குறள் கருதுவன யாவை?
Answer:
“அறிவற்றம் காக்கும் கருவி செறுவாருக்கு
உள் அழிக்கல் ஆகா அரண்.”
அறிவு ஒருவனுக்கு அழிவு வராமல் காக்கும் கருவி.மேலும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் ஆகும்.
நன்றின்பால் உய்ப்பது அறிவு.”
மனத்தினை, அது போகும் போக்கில் செல்ல விடாமல் தடுப்பது அறிவு.மேலும் தீமையிலிருந்து விலக்கி நல்வழியில் செலுத்துவதும் அறிவு.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
ஒரு பொருளைப் பற்றி யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதே அறிவாகும். இவையாவும் வள்ளுவன் வகுத்த அறிவின் மேன்மைகள் ஆகும்.
எடுத்துக்காட்டு உவமை அணியை விளக்கிக் கீழ்க்காணும் குறளுக்கு இவ்வணியைப் பொருத்தி எழுதுக.
Answer:
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுஉண்பார் கள்உண் பவர்.
அணிவிளக்கம் :
உவமை ஒரு வாக்கியமாகவும் உவமேயம் ஒரு வாக்கியமாகவும் உவம உருபு மறைந்து வருவதால் எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.
துஞ்சினார் செத்தாரின் வேறு
நஞ்சுஉண்பார் கள்உண் பவர்
மறைந்துள்ளது.
உறங்கியவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர். அதுபோல கள் உண்பவரும் நஞ்சு உண்பவருக்குச் சமமே என்பதை விளக்குவதால் இப்பாடல் எடுத்துக்காட்டு உவமை அணி ஆகும்.
மனத்திட்பம் அவசியமான பண்பு என்பதைக் குறள்நெறி நின்று விளக்குக.
Answer:
“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.”
மனவலிமை :
செயலினது வலிமை என்பது அதனைச் செய்பவனின் மனவலிமையே ஆகும். ஏனைய வலிமைகள் எல்லாம் மனவலிமையிலிருந்து வேறுபட்டவை.
சொல்லிய வண்ணம் செயல்”
எளிது – அரிது :
ஒரு செயலை இவ்வாறு செய்யலாம் என்று சொல்வது எளிது. ஆனால், சொல்லியபடிச் செய்து முடிப்பது அரிது.
திண்ணியர் ஆகப் பெரின்”
எண்ணத்தில் வலிமை :
ஒரு செயலை எண்ணியவர் எண்ணத்தில் வலிமை உடையவராக இருந்தால், எண்ணியதை எண்ணியபடியே செய்து முடிப்பர்.
அச்சாணி அன்னார் உடைத்து.”
உருவம் பொருட்டல்ல :
ஒருவரது உருவத்தைப் பார்த்து இகழ்ந்துரைக்கக் கூடாது. உருண்டு ஓடும் பெரிய தேருக்குச் சிறிய அச்சாணி போல இன்றியமையாதவராக அவர் இருக்கலாம்.
சிற்றினம் சேராமையும் நல்லினத்தின் துணையுமாக வள்ளுவர் உரைப்பன பற்றி நீவிர் அறிவனவற்றை எழுதுக.
Answer:
“மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
இன்னான் எனப்படும் சொல்”
இனத்தால்தான் தகுதி :
மக்களுக்கு உணர்ச்சி மனத்தின் வழி உண்டாகும். இவன் இப்படிப்பட்டவன் என்று அவன் சார்ந்திருக்கும் இனத்தை வைத்தே உலகம் சொல்லும்.
அல்லர் படுப்பதூஉம் இல்.”
நல்லவர் தீயவர் நட்பு :
நல்லவர் நட்பு போல சிறந்த துணை இல்லை; தீயவர் நட்புபோல் துன்பம் தருவதும் இல்லை.
வாளையும் பாம்பையும் எவ்வகைப் பகைமைக்குச் சான்றாக வள்ளுவர் கூறுகிறார்?
Answer:
“வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு”
வாள்போலும் பாம்பு போலும் பகை :
வாளினைப் போல் வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவரிடம் அஞ்ச வேண்டியது இல்லை. ஆனால் உறவினர் போலப் பழகும் பகைவருக்குப் பயப்பட வேண்டும்.
சூதும் கள்ளும் கேடு தரும் – திருக்குறள் வழி விவரிக்க.
Answer:
“சிறுமை பல செய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவது ஒன்று இல்”
சூதின் சிறுமை :
இழிவைத் தந்து சிறப்பை அழிக்கும் சூது போல வறுமை தரத்தக்கது வேறு இல்லை.
கழகத்துக் காலை புகின்”
சூதால் செல்வம் அழியும் :
தொடர்ந்து சூதாடும் இடத்திற்குச் சென்று வந்தால் நீண்டநாள் சம்பாதித்த செல்வமும் பண் பும் கெட்டழியும்.
உறங்கினவர் இறந்தாரோடு வேறுபாடு உடையவர் அல்லர். அதுபோல எப்போதும் கள் உண் 11 பவர் விஷம் உண்பவர் ஆவார்.
கள்ளுண்டு மயங்கியவனை நல்லன சொல்லித் திருத்த முடியாது. அது நீரில் மூழ்கிய ஒருவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போலாகும்.
நெடுவினா
Question 1.“அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணை நிற்கும்” என்பதை வள்ளுவம் வழிநின்று நிறுவுக.
Answer:
அறிவுடைமை வாழ்வின் உயர்விற்கு துணை நிற்கும் :
”அறிவுற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண்.”
அறிவானது உயிர்க்கு அழிவு வராமல் பாதுகாக்கும் கருவியாகும். மேலும் அறிவானது, பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.
நன்றின்பால் உய்ப்பது அறிவு.”
மனத்தினை, அது போகும் போக்கில் போகவிடக் கூடாது. தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
எந்தப் பொருளை யார் வாயிலாகக் கேட்டாலும் அந்தப் பொருளின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதே அறிவு ஆகும்.
அவ்வது உறைவது அறிவு”
உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ அந்நெறியில் தாமும் உலகத்தாடு இணைந்து செல்வதே அறிவாகும்.
அதிர வருவதோர் நோய்”
பின்னால் வரப்போவதை முன்பே அறிந்து காத்துக் கொள்ளும் வல்லமை கொண்ட அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றில்லை.
அறிவு பாதுகாப்புத் தரும் கருவி, நல்வழியில் செலுத்தக்கூடியது அறிவு, உண் மையைக் கண்டறிய உதவும் அறிவு, வருமுன் காப்பது அறிவு என்று மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் வாழ்க்கையின் உயர்வுக்குத் துணையாய் நிற்பது அறிவே என்பதை வள்ளுவன் வழியில் கண்டோம்.
திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் – நிறுவுக.
Answer:
முன்னுரை,
வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை ஒருங்கே தொகுத்து மானுடத்திற்கு அளித்து மங்காப் புகழ்பெற்றவன் மாதானுபாங்கி. வள்ளுவனின் கோட்பாடுகளுள் யாதானும் ஒன்றைக் கடைப்பிடித்து ஒழுகினாலும் வையத்துள் வாழ்வாங்கு வாழலாம்.
இந்த அதிகாரத்தில் அறிவானது ஒருவனுக்கு அழிவு வராமல் காக்கும் கருவி என்றும், பகைவராலும் அழிக்க முடியாத அரண் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.
மனதைப் போகும் போக்கில் விடாமல், தீமையிலிருந்து நம்மை விலக்குவதும் அறிவு ஆகும்.
ஒரு பொருளைப் பற்றி எவர் கூறக் கேட்டாலும் அப்பொருளின் உண்மைத் தன்மையை ஆராய்வதே அறிவு என்கிறார் வள்ளுவர்.
அதிகாரத்தில் ஒரு செயலைச் செய்ய எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால், எண்ணியவாறே நடக்கும் என்று மனதில் உறுதி வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
மன்னரைச் சார்ந்து ஒழுகுதல் என்னுமிடத்தில், நான் அரசரிடம் நட்பு கொண்டவன் என்று தகுதி அல்லாதவற்றைச் செய்தால் கேடு உண்டாகும் என்றும் நல்லது அல்லாதவற்றைச் செய்தல் துன்பம் என்று வள்ளுவர் கண்டிக்கிறார்.
உட்பகை என்ற நிலையில் வெளிப்படையாகத் துன்பம் செய்பவரை விட உறவு போல் நடித்து உட்பகையாடுவார் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் என்று தெளிவுப்படுத்துகிறார் வள்ளுவர்.
கள்உண்ணாமையைக் கூறும் போது கள் உண்பவர் நஞ்சு உண்பரே என்றும் கள் உண் பவனைத் திருத்துவது என்பது நீரில் மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றதாகும் என்கிறார் வள்ளுவர்.
ஒரு மனிதன், பின்னால் வரப்போவதை முன்னால் அறியக்கூடிய அறிவுடையவனாகவும், சிற்றினம் சேராமலும் திண்ணிய மனமுடையவராகவும், தீயில் குளிர் காய்பவர் போல மன்னனோடு சார்ந்திருக்க வேண்டும் என்றும், உட்பகை இன்றி, கள்ளுண் ணாமலும் வாழ்வதே வாழ்க்கை என்று வள்ளுவர் நம்மை வழிப்படுத்துகிறார்.
இலக்கணக் குறிப்பு
யார் யார் – அடுக்குத்தொடர்
சொல்லுதல் – தொழிற்பெயர்
அஞ்சுக – வியங்கோள் வினைமுற்று
ஒரீஇ – சொல்லிசை அளபெடை
தீத்துரீஇ – சொல்லிசை அளபெடை
செல்வமும் பண்பும் – எண்ணும்மை
படுப்பதூஉம் – இன்னிசை அளபெடை
பகுபத உறுப்பிலக்கணம்
புணர்ச்சி விதி
1. துணையில்லை – துணை + இல்லைஇஈஐ வழியவ்வும்
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
2. உறைந்தற்று – உறைந்து + அற்று
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு’ – என்னும் குறட்பாவில் இடம்பெறும் அணி
அ) சொல்பின்வருநிலையணி
ஆ) பொருள்பின்வருநிலையணி
இ) சொற்பொருள் பின்வரும் நிலையணி
ஈ) உவமையணி
Answer:
இ) சொற்பொருள் பின்வரும் நிலையணி
Question 2.
‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆனப் பெறின்’ – இக்குறட்பாவில் இடம்பெறும் அணி
அ) சொல்பின்வருநிலையணி
ஆ) பொருள்பின்வருநிலையணி
இ) சொற்பொருள் பின்வரும்நிலையணி
ஈ) உவமையணி
Answer:
Question 3.
‘அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார்’ – என்னும் குறட்பாவில் இடம்பெறும் அணி
அ) இல்பொருள் உவமையணி
ஆ) தொழில் உவமை அணி
இ) எடுத்துக்காட்டு உவமையணி
ஈ) உருவக அணி
Answer:
ஆ) தொழில் உவமை அணி
Question 4.
‘உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைந் தற்று’ – இக்குறட்பாவில் இடம்பெறும் அணி
அ) உவமை அணி
ஆ) உருவக அணி
இ) வேற்றுமை அணி
ஈ) பிறிதுமொழிதல் அணி
Answer:
அ) உவமை அணி
Question 5.
கள் உண்பவர் …………… உண்ப வர் என்கிறார் வள்ளுவர்.
அ) அமுது
ஆ) நஞ்சு
இ) பழங்கஞ்சி
ஈ) ஊன்
Answer:
ஆ) நஞ்சு
சிறுவினா
Question 1.சொற்பொருள் பின்வரு நிலையணியை சான்றுடன் விளக்குக.
Answer:
அணி விளக்கம் :
செய்யுளில் முன்னர் வந்தச் சொல் அதேப் பொருளில் பின்னர் பலமுறை வருவது சொற்பொருள் பின்வரு நிலையணியாகும்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு
விளக்கம் :
இக்குறட்பாவில் பொருள் என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவதால் சொல்பொருள் பின்வரும் நிலையணி ஆகும். எந்த ஒரு பொருள் பற்றி எவர் கூறினாலும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அந்தப் பொருளில் உள்ள உண்மையை ஆராய்ந்து எடுத்துக் கொள்வதே அறிவுடைமை ஆகும்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியாற்
திண்ணியர் ஆகப் பெறின். – இப்பாடலில் பயின்று வரும் அணியை விளக்குக.
Answer:
இக்குறட்பாவில் சொற்பொருள் பின்வரும் நிலையணி பயின்று வந்துள்ளது.
செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பின்னர் பலமுறை வருவது சொற்பொருள் பின்வரு நிலையணி ஆகும்.
இப்பாடலில் ‘எண்ணிய’ என்றச் சொல் ‘நினைப்பது’ என்ற பொருளில் பலமுறையில் வந்துள்ளது. எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால் எண்ணியதை எண்ணியவாறே அடைவர் என்று ஆகும்.
உவமையணியை சான்றுடன் விளக்குக.
Answer:
அணி இலக்கணம் :
உவமை ஒரு வாக்கியமாகவும், உவமேயம் ஒரு வாக்கியமாகவும் உரும உருபு வெளிப்படையாகவும் வந்தால் உவமையணி ஆகும்.
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைந் தற்று
உவமை :
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை
குடங்களுள் பாம்போடு
உருபு : அற்று (வெளிப்படை)
பொருத்தம் :
உள்ளத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை ஒரு குடிசையில் பாம்புடன் வாழ்வது போன்றதாகும்.
0 Comments:
Post a Comment