> Samacheer Kalvi 8th Tamil book Solutions Chapter 1 எழுத்துகளின்பிறப்பு book back question and answer ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Samacheer Kalvi 8th Tamil book Solutions Chapter 1 எழுத்துகளின்பிறப்பு book back question and answer

Samacheer Kalvi 8th Tamil book Solutions Chapter 1.5 எழுத்துகளின்பிறப்பு book back question and answer

Tamilnadu state board 8th tamil unit 1 book back question and answer ,important question and answer guide, notes term 1,2,3 pdf download

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil book Solutions Chapter 1.5 எழுத்துகளின் பிறப்பு



    கற்பவை கற்றபின்


    Question 1.
    ‘ஆய்தம்’ – இச்சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்தின் வகையையும், அது பிறக்கும் இடம் கழுத்து கழுத்து மார்பு, கழுத்து றுக்கு
    Answer:
    Samacheer Kalvi 8th Tamil book Solutions Chapter 1 எழுத்துகளின்பிறப்பு book back question and answer

    பாடநூல் வினாக்கள்

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


    Question 1.
    இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் …………………………
    அ) இ, ஈ
    ஆ) உ, ஊ
    இ) எ, ஏ
    ஈ) அ, ஆ
    Answer:
    ஆ) உ, ஊ

    Question 2.
    ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ………………………………..
    அ) மார்பு
    ஆ) கழுத்து
    இ) தலை
    ஈ) மூக்கு
    Answer:
    இ) தலை

     
    Question 3.
    வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் ………………………..
    அ) தலை
    ஆ) மார்பு
    இ) மூக்கு
    ஈ) கழுத்து
    Answer:
    ஆ) மார்பு

    Question 4.
    நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருத்துவதால் பிறக்கும் எழுத்துகள் …………………..
    அ) க், ங்
    ஆ) ச், ஞ்
    இ) ட், ண்
    ஈ) ப், ம்
    Answer:
    இ) ட், ண்

    Question 5.
    கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து ……………………..
    அ) ம்
    ஆ) ப்
    இ) ய்
    ஈ) வ்
    Answer:
    ஈ) வ்

    பொருத்துக.

    1. க், ங் – அ) நாவின் இடை, அண்ண த்தின் இடை.
    2. ச், ஞ் – ஆ) நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி.
    3. ட், ண் – இ) நாவின் முதல், அண்ண த்தின் அடி.
    4. த்,ந் – ஈ) நாவின் நுனி, அண்ண த்தின் நுனி.
    Answer:
    1. இ
    2. அ
    3. ஈ
    4. ஆ

    சிறுவினா


    Question 1.
    எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?
    Answer:
    • உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர்.

    Question 2.
    மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
    Answer:

    • மெய்யெழுத்துகளில், வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
    • மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
    • இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
    Question 3.
    ழகர, லகர, ளகர மெய்களின் முயற்சிப் பிறப்பு பற்றி எழுதுக.
    Answer:
    • ழகர மெய் மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கிறது.
    • லகர மெய் மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.
    • ளகர மெய் மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது.
    • மொழியை ஆள்வோம்

    தமிழ்மொழியை வாழ்த்திப் பாடிய வேறு கவிஞர்களின் பாடல்களைக் கேட்டு மகிழ்க.


    அருள்நெறி அறிவைத் தரலாகும்
    அதுவே தமிழன் குரலாகும்

    பொருள்பெற யாரையும் புகழாது
    போற்றா தாரையும் இகழாது

    கொல்லா விரதம் குறியாகக்
    கொள்கை பொய்யா நெறியாக

    எல்லா மனிதரும் இன்புறலே.
    என்றும் இசைந்திடும் அன்பறமே

    அன்பும் அறமும் ஊக்கிவிடும்
    அச்சம் என்பதைப் போக்கிவிடும்
     
    இன்பம் பொழிகிற வானொலியாம்
    எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்
    – நாமக்கல் கவிஞர்

    கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.


    தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்

    • தொல்காப்பியம் என்னும் தொன்மைத் தமிழ்நூலில் கூறப்படும் எழுத்துகள் வட்டெழுத்துகளைக் குறிப்பனவே ஆகும். இவ்வெழுத்தினைக் கோலெழுத்து, கண்ணெழுத்து எனப் பண்டைத் தமிழ் நூல்கள் குறிப்பிட்டுள்ளன. நாம் இன்று எழுதும் எழுத்துகள் ஆப்பு வடிவ எழுத்துகளிலிருந்தே தோன்றின என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். கோடுகள் மிகுதியாக இருக்கக் காரணம் இதுவே என்பர்.

    • எகர ஒகர எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வந்துள்ளது. ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளி பெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர். மெய்யா? உயிர்மெய்யா? குறிலா? நெடிலா?

    • என உணர வேண்டிய நிலை இருந்தது. இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். இந்நிலையில் தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர். அதன் பிறகு தந்தை பெரியாரின் சீர்திருத்தமும் பெற்று தமிழ் இன்று எழுதும் தமிழாக மாறியது. தமிழ்மொழி கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் ஆகியிருக்கிறது. நன்றி!

    அகரவரிசைப்படுத்துக.

    • எழுத்து, ஒலிவடிவம், அழகுணர்ச்சி, ஏழ்கடல், இரண்டல்ல, ஊழி, உரைநடை, ஔகாரம், ஓலைச்சுவடிகள், ஆரம்நீ, ஈசன், ஐயம்.

    அகர வரிசைப்படுத்தியன:

    • அழகுணர்ச்சி, ஆரம் நீ, இரண்டல்ல, ஈசன், உரைநடை, ஊழி, எழுத்து, ஏழ்கடல், ஐயம், ஒலிவடிவம், ஓலைச்சுவடிகள், ஔகாரம்

    அறிந்து பயன்படுத்துவோம்.

    மரபுத் தொடர்கள்:

    • தமிழ் மொழிக்கெனச் சில சொல் மரபுகள் உள்ளன. அவை பழங்காலம் முதலே பின்பற்றப்படுகின்றன.

    பறவைகளின் ஒலிமரபு

    1. ஆந்தை அலறும்
    2. காகம் கரையும்
    3. சேவல் கூவும்
    4. குயில் கூவும்
    5. கோழிகொக்கரிக்கும்
    6. புறா குனுகும்
    7. மயில் அகவும்
    8. கிளி பேசும்
    9. கூகை குழறும்

    தொகை மரபு

    1. மக்கள் கூட்டம்
    2. ஆநிரை
    3. ஆட்டு மந்தை

    வினை மரபு

    1. சோறு உண்
    2. தண்ணீ ர் குடி
    3. பூக் கொய்
    4. முறுக்குத் தின்
    5. கூடை முடை
    6. இலை பறி
    7. சுவர் எழுப்பு
    8. பால் பருகு
    9. பானை வனை

    சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

    1. கோழி ………………………. (கூவும் / கொக்கரிக்கும்)
    2. பால் …………………….. (குடி / பருகு)
    3. சோறு ……………………… (தின்/ உண்)
    4. பூ ………………………. (கொய் / பறி)
    5. ஆ ……………………. (நிரை / மந்தை )
    Answer:
    1. கொக்கரிக்கும்
    2. பருகு
    3. உண்
    4. கொய்
    5. நிரை

    மரபுப் பிழையை நீக்கி எழுதுக.

    சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது. பூவைப் பறித்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் கொய்து கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலைக் குடித்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.

    Answer:

    • சேவல் கூவும் சத்தம் கேட்டுக்கயல் கண்விழித்தாள். பூக்கொய்ய நேரமாகிவிட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது. பூவைக் கொய்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் பறித்துக்கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலைப் பருகிவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.

    7. கட்டுரை எழுதுக.


    நான் விரும்பும் கவிஞர் - கட்டுரை

     – பாவேந்தர் பாரதிதாசன்

    முன்னுரை :
    • எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’ என முழங்கும் காலம் இக்காலம். இந்த முழக்கத்திற்கு – மூலமாக இருந்த பெருமக்களுள் பாவேந்தர் பாரதிதாசனார் குறிப்பிடத்தக்கவர். இவரே நான் விரும்பும் கவிஞர் ஆவார்.
    பிறப்பும் இளமையும் :
    • கனகசுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் கொண்ட பாரதிதாசனார் 29.04.1891-இல் கனகசபை – இலக்குமி அம்மையாருக்கு மகனாய்ப் புதுச்சேரியில் பிறந்தார். இளமையில் தமிழாசிரியராய் அமர்ந்தார். மகாகவி பாரதியாரிடம் கொண்ட அன்பால் தம் பெயரைப் பாரதிதாசன் என வைத்துக் கொண்டார்.
    தமிழ்ப்பற்று :
    ‘தமிழுக்கும் அழுதென்று பேர் – அந்தத்
    தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’
    • போன்ற கவிதை வரிகள் பாரதிதாசனின் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துவன. தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்’ என முழங்கினார். தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை ‘ என வருந்தினார்.
    கவிச்சுவை :
    • இயற்கையில் ஈடுபாடு மிக்க பாவேந்தரின் கவிதைகள் கருத்தாழமும் கற்பனைச் சுவையும் கொண்டு கற்போரைக் களிப்புறச் செய்பவை. ‘நீலவான் ஆடைக்குள் உடல் மறைந்து நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை’ எத்தனை அழகான கற்பனை!. இது இவரின் கவிச்சுவைக்குச் சான்று.

    சமுதாயப் பார்வை:
    • ‘சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே’ எனச் சாதி வெறியைச் சாடினார்.
    ‘எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான
    இடம் நோக்கி நடக்கின்ற திந்த வையம்’
    • என்ற பொதுவுடைமைக் கருத்துக்குச் சொந்தக்காரர் பாவேந்தர்.

    முடிவுரை :
    • உடல்வளமும் , உளத்திடமும், உண்மை உரைக்கும் பண்பும், நேர்மையும், மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்ட பாவேந்தரின் கனவுகளை நனவாக்குவதே நமது கடமை.

    மொழியோடு விளையாடு

    பொருத்தமான பன்மை விகுதியைச் சேர்த்தெழுதுக.

    • கல், பூ, மரம், புல், வாழ்த்து , சொல், மாதம், கிழமை, ஈ, பசு, படம், பல், கடல், கை, பக்கம், பா.

    Samacheer Kalvi 8th Tamil book Solutions Chapter 1 எழுத்துகளின்பிறப்பு book back question and answer


    ஒருசொல் ஒரே தொடரில் பல பொருள் தருமாறு எழுதுக.


    எ.கா: அணி – பல அணிகளை அணிந்த வீரர்கள், அணி அணியாய்ச் சென்றனர்.

    • படி, திங்கள், ஆறு.
    • படி : படித்துக்கொண்டிருந்த மாலதி, மாடு கறந்த ஒரு படிப்பாலை எடுத்துக் கொண்டு, படியில் ஏறிச் சென்று தாயிடம் கொடுத்தாள்
    • திங்கள் : சித்திரைத் திங்களில், முதல் திங்கள் அன்று, இரவில் திங்களைப் பார்ப்பது நல்லது.
    • ஆறு : ஆறுமுகம், காலையில் துவைப்பதற்காக ஆறு துணிகளை எடுத்துக்கொண்டு காவேரி ஆற்றுக்குச் சென்றான்.


    சொற்களை ஒழுங்குபடுத்தி முறையான தொடராக்குக.


    1. வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து.
    2. உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்.
    3. வென்றதை பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம்.
    4. கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும்.
    5. ஏகலை கலையை அம்புவிடும் தமிழ் என்றது.

    ஒழுங்குபடுத்திய தொடர் :

    1. வளைந்த கோடுகளால் அமைந்த தமிழ் எழுத்து வட்டெழுத்து எனப்படும்.
    2. உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும்.
    3. பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்.
    4. உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.
    5. தமிழ் அம்புவிடும் கலையை ஏகலை என்றது.

    நிற்க அதற்குத் தக…


    கலைச்சொல் அறிவோம்


    1. ஒலிபிறப்பியல் – Articulatory phonetics
    2. மெய்யொலி – Consonant
    3. மூக்கொலி – Nasal consonant sound
    4. கல்வெட்டு – Epigraph
    5. உயிரொலி – Vowel
    6. அகராதியியல் – Lexicography
    7. ஒலியன் – Phoneme
    8. சித்திர எழுத்து – Pictograph

    இணையத்தில் காண்க


    தமிழ் வரிவடிவ எழுத்துகளில் காலந்தோறும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இணையத்தில் தேடித் தொகுத்து வருக.

    1. ஓவிய எழுத்துகள் :
    • மனிதன் ஓவியங்கள் மூலமாக தங்களுடைய எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டான். தமிழகத்தில் மல்லப்பாடி, கீழ்வாலை, கோவை, மதுரை, நீலகிரி, தருமபுரி போன்ற மாவட்டங்களில் ஓவிய எழுத்தைக் கண்டு பிடித்துள்ளனர்.
     
    2. உருவ எழுத்து :
    • பழந்தமிழகத்தில் உருவ எழுத்து உணர்வு எழுத்து, ஒலியெழுத்து, தன்மை எழுத்து என வரும் எழுத்துகள் ஒவ்வொன்றும் இருபாற்பட்டு எட்டு வகையாக விளங்கிய | பாங்கும் அதில் உருவ எழுத்து ஓவியன் கைவினைத் திறன் போன்றது என்பதும் பெறப்படும். இதனால் குழுக்களாக இருந்த பழங்குடி மக்கள் பலவகைப்பட்ட எழுத்துருக்களைப் பயன்படுத்திய பாங்கும் புலப்படும்.

    3. தமிழி எழுத்து :
    • சங்ககாலக் கல்வெட்டுகளில் காணும் எழுத்துகளை தமிழி என்பர். தமிழுக்கே உரிய. வடிவத்தைத் தமிழி என்று கூறுவதுதான் சரி. இன்றுள்ள பழமையான எழுத்து வடிவம் தமிழியே என்பதும் அதுகாலந்தோறும் மாற்றம் பெற்றதையும் அறிஞர்கள் பட்டியல் இட்டுக் காட்டியுள்ளனர். இன்றுள்ள வடிவங்களுக்கு வித்தாக உள்ளது தமிழியே.

    4. கோல் எழுத்து :
    • ஓவிய எழுத்தில் இருந்து கல்லில் பொறிக்கக் கோடுகளாக வரைந்த குறியீடுகளைக் கோல் எழுத்து என்றும் குறிப்பர்.

    5. வட்டெழுத்து :
    • கல்லில் வெட்டப்பட்ட எழுத்துகளே வட்டெழுத்து எனப்பட்டது என்றும், ஓலைகளில் எழுதும்போது கோடுகள் ஓலைகளைக் கிழிக்கும் என்பதால் வட்டமாக எழுதியதால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர். பாண்டிய நாட்டில் வட்டெழுத்துகள் கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரை வழக்கில் இருந்ததைக் கல்வெட்டுகள் காட்டும்.
    • இமயமலை அடிவாரத்தில் உள்ள கோபலேசுவரர் ஆலயத்தில் வட்டெழுத்துக் கல்வெட்டு தமிழில் உள்ளது. இவ்வாறு தமிழ் வட்டெழுத்து இந்தியா முழுவதும் பரவிப் பல்வேறு எழுத்து வடிவங்கள் தோன்றக் காரணமாயின தன்மையும் அறியப்படும்.
    6. கிரந்த எழுத்து :
    • தமிழகத்தில் பல்லவர் ஆட்சி ஏற்பட்டதும் வடமொழி ஆதிக்க மொழியாயிற்று. கிரந்த எழுத்துகள் வழக்கில் வந்தன. இதனைப் பல்லவ கிரந்தம் என்றே அழைப்பர். கிரந்தம் என்ற சொல்லிற்கு நூல் என்பது பொருள். இதுவே பின்னர் எழுத்தையும் குறித்தது. தமிழ்க் கல்வெட்டுகளில் வடமொழிப் பகுதியைக் குறிக்க இந்த எழுத்துகளையே பயன்படுத்தினர். தமிழ்நாட்டில் ஆனைமலை, அழகர்மலை, திருமயம், குடுமியான்மலை, தகடூர், பேரூர் போன்ற இடங்களில் உள்ள சோழர்காலக் கல்வெட்டுகளில் கிரந்த எழுத்துகளைக் காணலாம். 
    7. முதல் அச்சு எழுத்து :
    • தமிழ்மொழியின் முதல் அச்சுப் புத்தகம் தம்பிரான் வணக்கம் என்னும் நூல் 1578 அக்டோபர் 20ஆம் நாள் கொல்லத்தில் அச்சிடப்பட்டது. அதில் கொல்லம் எழுத்து, மலபார் எழுத்து, கோவா எழுத்து என்பன போன்ற வேறு வேறு வகையான தமிழ் எழுத்துகள் அன்று வழக்கில் இருந்ததைக் குறித்துக் காணலாம். இவ்வாறு அச்சில் கூடப் பலவகைப்பட்ட எழுத்துகள் பழக்கத்தில் இருந்ததை நாம் அறிய முடியும்.
    8. வீரமாமுனிவர் செய்த மாற்றம் :
    • ‘எகரத்துக்கும், ஒகரத்துக்கும் உட்புள்ளியை நீக்கிக் கால் இட்டார். உயிர்மெய்களில் எகர, ஒகரங்கட்கு ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு அமைத்தார். அவரே சதுர வடிவான எழுத்துகளை அமைத்தார் என்றும் கூறுவர்.
    9. பெரியார் செய்த மாற்றம் :
    • பெரியார் தமிழ் எழுத்துகள் சீர்மை பெற வேண்டும் என்று கருதினார். அதன் விளைவாக உயிர்மெய்க்கு, மெய்யுடன் கால் சேர்த்து வழங்கும் முறையைக் கொண்டார்.

    கூடுதல் வினாக்கள்


    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


    Question 1.
    எழுத்துகள் ………………….. இடங்களில் பிறக்கின்றன.
    அ) இரண்டு
    ஆ) மூன்று
    இ) நான்கு
    ஈ) ஐந்து
    Answer:
    இ) நான்கு

    Question 2.
    உயிரெழுத்துகளின் பிறப்பிடம் …………………….
    அ) மூக்கு
    ஆ) தலை
    இ) மார்பு
    ஈ) கழுத்து
    Answer:
    ஈ) கழுத்து

    Question 3.
    மெல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் ………………….
    அ) மார்பு
    ஆ) தலை
    இ) மூக்கு
    ஈ) கழுத்து
    Answer:
    இ) மூக்கு

    Question 4.
    இடையின எழுத்துகள் பிறக்கும் இடம் ………………….
    அ) தலை
    ஆ) மூக்கு
    இ) கழுத்து
    ஈ) மார்பு
    Answer:
    இ) கழுத்து

    Question 5.
    எழுத்துகளின் பிறப்பினை ……………………. வகையாகப் பிரிப்பர்.
    அ) இரண்டு
    ஆ) மூன்று
    இ) நான்கு
    ஈ) ஐந்து
    Answer:
    அ) இரண்டு

    குறுவினா.


    Question 1.
    எழுத்துகளின் பிறப்பினை எத்தனை வகையாகப் பிரிப்பர்? அவை யாவை?
    Answer:

    • எழுத்துகளின் பிறப்பினை இரண்டு வகையாகப் பிரிப்பர்.
    • அவை, இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு ஆகும்.
    Question 2.
    உயிரெழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
    Answer:
    • உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

    Question 3.
    ஆய்த எழுத்து எதை இடமாகக் கொண்டு பிறக்கிறது?
    Answer:
    • ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது
    Question 4.
    உயிர் எழுத்துகளின் முயற்சிப் பிறப்பு குறித்து எழுதுக.
    Answer:
    • (i) அ, ஆ, ஆகிய இரண்டும் வாய் திறத்தலாகிய முயற்சியால் பிறக்கின்றன. இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்தும் வாய் திறக்கும் முயற்சியுடன் நாக்கின் அடி ஓரமானது மேல்வாய்ப் பல்லைப் பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன.
    • (ii) உ, ஊ, ஒ, ஓ, ஔ ஆகிய ஐந்தும் வாய் திறக்கும் முயற்சியுடன் இதழ்களைக் குவிப்பதால் பிறக்கின்றன.

    Question 5.
    க், ங் – மெய்களின் முயற்சிப் பிறப்பு யாது?
    Answer:
    • க், ங் – ஆகிய இருமெய்களும் நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.

    Question 6.
    ச், ஞ் – மெய்களின் முயற்சிப் பிறப்பு யாது?
    Answer:
    • ச், ஞ் – ஆகிய இருமெய்களும் நாவின் இடைப்பகுதி, நடு அண்ணத்தின் இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.

    Question 7.
    ட், ண் – ஆகிய மெய்களின் முயற்சிப் பிறப்பு யாது?
    Answer:
    • ட், ண்- ஆகிய இருமெய்களும் நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.

    Question 8.
    த், ந் – மெய்களின் முயற்சிப் பிறப்பு யாது?
    Answer:
    • த், ந் – ஆகிய இருமெய்களும் மேல்வாய்ப்பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கின்றன.

    Question 9.
    ப், ம் – மெய்களின் முயற்சிப் பிறப்பு யாது?
    Answer:
    • ப், ம் – ஆகிய இரு மெய்களும் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கின்றன.

    Question 10.
    ற், ன் – மெய்களின் முயற்சிப் பிறப்பு யாது?
    Answer:
    • ற்,ன் – ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன.

    Question 11.
    ய், ர், வ் – மெய்களின் முயற்சிப் பிறப்பு யாது?
    Answer:
    • ய் – இது நாக்கின் அடிப்பகுதி, மேல் வாய் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கிறது.
    • ர் – இது மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கிறது.
    • வ் – இது மேல்வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கிறது.

    Question 12.
    சார்பு எழுத்துகளின் பிறப்பு குறித்து எழுதுக.
    Answer:
    • ஆய்த எழுத்து வாயைத் திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கிறது. பிற சார்பெழுத்துகள் யாவும் தத்தம் முதலெழுத்துகள் தோன்றும் இடங்களிலேயே அவை பிறப்பதற்கு உரிய முயற்சிகளைக் கொண்டு தாமும் பிறக்கின்றன.

    Share:

    0 Comments:

    Post a Comment